மீண்டும் வீட்டிற்கு வந்த ரவி.. ஸ்ருதி சொன்ன கன்டீசன்.. முத்து கொடுத்த அதிர்ச்சி.. பரிதாப நிலையில் விஜயா
சென்னை: விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 17ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஸ்ருதி தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவிடம் சண்டை போட்டு அவர்களுடைய வீட்டில் இருந்து ரவி வீட்டிற்கு வருகிறார்.
மறுபக்கத்தில் மனோஜை பிச்சைக்கார வேஷத்தில் பார்த்த மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். பணத்துக்காக மனோஜ் எடுத்த முடிவைப் பார்த்து விஜயா கண்கலங்கி அழுது கொண்டிருக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் சிறகடிக்க ஆசை சீரியலில் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ரோகிணி எப்போது வீட்டில் மாட்டுவார் என்று எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் அது இப்போதைக்கு நடக்கிற மாதிரியே தெரியவில்லை. ஆனாலும் கதை சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது.
ஒரு பக்கத்தில் ரோகிணி தன்னுடைய அப்பா பற்றிய உண்மையை மறைத்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் மனோஜ் பணம் வேண்டும் என்று தொந்தரவு செய்ய மனோஜ்க்கு பணம் கொடுக்க முடியாது என்று ரோகிணி மறுத்திருக்கிறார். அதனால் விஜயா மற்றும் அண்ணாமலை இடம் பணம் கேட்டு போன மனோஜை விஜயா இதுவரைக்கும் இல்லாத வகையில் மிரட்டி விட்டிருக்கிறார்.
அதாவது இனி மேலும் உனக்கு பணம் தர முடியாது என்று விஜயா பேசியதை கேட்டு முத்து கூட அதிர்ச்சி அடைந்திருந்தார்.
இப்படியான நிலையில் பணம் தனக்கு வேண்டும் என்பதற்காக சாமியாரை பார்க்க போன மனோஜ்க்கு அவர் கூறிய அட்வைஸ் காரணமாக அவர் கோவிலில் பிச்சை எடுக்க உட்கார்ந்திருக்க அப்போது மீனா மனோஜை பார்த்ததால் முத்துக்கு போன் போட்டு முத்து வந்து மனோஜை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில் ஸ்ருதி தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவிடம் என்னுடைய வாழ்க்கை தான் எனக்கு முக்கியம் உங்கள் பேச்சைக் கேட்டு நான் இந்த வீட்டுக்கு வந்தது தப்பு நீங்க சொல்லி தான் பிஜு என்னிடம் வந்து பிரச்சனை செய்து இருக்கிறானா ஜன சந்தேகம் வருகிறது.. அவனுக்கு நான் ரவியை பிரிந்து இங்கே இருக்கிறேன் என்பது எப்படி தெரிந்தது என்று கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கிறார்.
அதோடு வீட்டை விட்டு கிளம்பி போன ஸ்ருதி ரவியை போய் சந்தித்து வா வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல, அதற்கு ரவி முதலில் நான் வரலை என்று சொல்கிறார். அதற்கு ஸ்ருதி அதெல்லாம் எனக்கு தெரியாது. இப்போ எனக்கு வீட்டுக்கு போகணும்னு தோணுது நீ வரணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் அவருடைய அப்பா ஸ்ருதி பத்தி நமக்கு தெரியாதா? ஒரு நாள் வேணும்னு சொல்றதை பிறகு வேண்டாம்னு சொல்லுவா. இன்னைக்கு வேண்டாம்னு சொல்றத கொஞ்ச நாள் கழிச்சு வேணும்னு சொல்லுவா...
அதே மாதிரி அவளோட மனசு மாறி மீண்டும் நம்ம கிட்ட வருவா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து ரவி கையில் பெட்டியோடு மீண்டும் அண்ணாமலை வீட்டு வாசலில் வந்து நிற்க, அண்ணாமலை ரவியை பார்த்து நீ மட்டுமா வந்து இருக்க என்று கேட்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைகிறது. ஆனால் ஸ்ருதி மீண்டும் வீட்டிற்கு வந்ததும் பழையபடி வீட்டிற்குள் ரூமிற்கு சண்டை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications