சிறகடிக்க ஆசையில் நாளை: ரோகிணி பற்றி ஏற்கனவே தெரியும்.. மனோஜ் சொன்ன வார்த்தை, விஜயா செய்த செயல்
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை ஏப்ரல் இரண்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும் என்று மனோஜ் சொன்னதை கேட்டு விஜயா கடும் கோபத்தில் மனோஜை அடித்து துவைக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்ததுபடியே ரோகிணி பற்றிய விஷயம் குடும்பத்திற்கு தெரிய வந்தது. ஆனால் அது பெரிய அளவில் பிரச்சினையை ஏற்படுத்தவில்லை. ரோகிணியை அடித்து வீட்டை விட்டு விஜயா துரத்தி இருக்கிறார். ஆனால் இந்த வீட்டில் சமாதான புறாவாக இருக்கும் முத்துவும் மீனாவும் எப்படியாவது ரோகிணியை மீண்டும் வீட்டிற்கு கூட்டி வந்துவிட வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருந்தனர்.

அண்ணாமலை செய்த செயல்
அதுபோல அண்ணாமலை தன்னுடைய மூத்த மருமகள் வீட்டிற்கு வந்தே ஆகவேண்டும், குடும்பம் உடைந்து விடக்கூடாது என்று பீல் பண்ணி தன்னுடைய அம்மாவை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். இந்த சீரியலில் பாட்டி எப்போதெல்லாம் வீட்டிற்கு வருகிறாரோ அப்போது டிஆர்பி எகிறி விடுகிறது. அதனால் இந்த முறையும் இந்த பாட்டியை வைத்தே காயை நகர்த்துகிறார்கள்.
எதிர்பார்த்தது நடக்கவில்லை
ரோகிணி பற்றி தெரிந்ததும் குடும்பத்தினர் எல்லோரும் பிரச்சனை செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் விஜயா மட்டும்தான் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் ரோகிணி எதற்காக ஏமாற்றினார்? அவருடைய உண்மையான கதை என்ன என்பது பற்றி யாரும் இதுவரைக்கும் கேட்கவில்லை, ரோகிணியை பேசவும் விடவில்லை.
ரோகிணியின் கண்டிஷன்
இது ஒரு பக்கம் இருந்தாலும் நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாட்டி மனோஜிடம் ரோகிணியை வீட்டிற்கு மீண்டும் கூட்டிட்டு வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதனால் மனோஜ் போன் பண்ணி ரோகிணியிடம் பேச, அதற்கு ரோகிணி நான் வீட்டிற்கு வந்தால் என்னை யாரும் அடிக்க கூடாது, என்ன அடிக்கிறதுக்கும் திட்டுவதற்கும் உனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு என்று கண்டிஷன் போட்டு இருந்தார்.
அடித்த விஜயா
ரோகிணி போட்ட கண்டிஷனை வீட்டில் எல்லோரிடமும் மனோஜ் சொல்ல அதற்கு எல்லோரும் சரி என்று சொல்லி ரோகிணியை வீட்டிற்கு வர சொல்ல வைத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் விஜயாவும் வீட்டிற்கு வந்திருக்கிறார். ரோகிணியும் வந்திருக்கிறார். ரோகிணியை பார்த்ததும் உன்னை நான் இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன், மீண்டும் எப்படி இந்த வீட்டுக்குள்ள வந்த என்று ரோகிணியை அடிக்கிறார்.
மனோஜ் கொடுத்த டுவிஸ்ட்
அப்போது கோபமான மனோஜ் நிறுத்துங்க என்று சொல்கிறார். அதைக்கேட்டு விஜயா அதிர்ச்சியாகி நிற்கிறார். அப்போது மனோஜ் எனக்கு ரோகிணியை பற்றி ஏற்கனவே தெரியும் என்று சொல்கிறார். இதை கேட்டதும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகிறார்கள். அப்போது உனக்கு அவளை பத்தி தெரிஞ்சே நீ என்கிட்ட மறைச்சியா என்று விஜயா மனோஜை போட்டு அடிக்கிறார். ஆனால் ரோகிணி பற்றி எந்த விஷயம் தெரியும் என்று மனோஜ் சொன்னார் என்று ப்ரோமோவில் காட்டவில்லை. இதனால் நாளைக்கான எபிசோடு பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications