சிறகடிக்க ஆசை: கிரிஷ்க்கு அப்பாவாக மாறிய மனோஜ்.. ஸ்ருதி கண்ட காட்சி! உடையும் அண்ணாமலை குடும்பம்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 18ஆம் தேதிக்கான எபிசோடில் க்ரிஷ்க்கு அப்பாவாக மனோஜ் ஸ்கூலுக்கு போயிருக்கிறார். அதை பார்த்து விஜயா கோபத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் ரவி மற்றும் ஸ்ருதி இருவருடைய வாழ்க்கையிலும் புது பிரச்சனை வருகிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அருண் போட்ட நாடகத்தை சீதா நம்பி இருக்கிறார். இதற்கு முன்பு இதுபோல பலமுறை அருண் நாடகம் போட கடைசியில் முத்து மீது தப்பே இல்லை என்று சீதாவிற்கு தெரிந்திருக்கிறது. ஆனாலும் இப்போது வழக்கம் போல முத்துவை தவறாகவே சீதா புரிந்து கொள்கிறார்.

தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்த சீதா அங்கிருந்த மீனாவிடமும் முத்துவிடமும் சண்டையிட்டு இனிமேல் உங்களுக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இனி நான் உங்களை மாமா என்று கூப்பிடவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு சீதா கிளம்பி போகிறார். இதனால் மீனாவின் அம்மா முத்துவிடம் மன்னிப்பு கேட்க, அவ சின்ன பொண்ணு விடுங்க பாத்துக்கலாம் என்று முத்து சமாளிக்கிறார். ஆனாலும் முத்துவிற்கு மனதிற்குள் வருத்தம் இருக்கிறது.
மறுபக்கத்தில் கிரிஷ் ஸ்கூலில் இருந்து மனோஜ்க்கு போன் செய்து கிரிஷ் எல்லா பாடத்திலும் பர்ஸ்ட் ரேங்க் எடுத்திருக்கிறான். அவன் உங்க கையாலதான் சர்டிபிகேட் வாங்கணும்னு ஆசைப்படுகிறான். அதனால நீங்க வர முடியுமா என்று கேட்கிறார். அதற்கு ரோகிணியும் நீதான் நல்லா படிச்சிருக்க அதான் உன்னை கூப்பிடறாங்க என்று சொன்னதும் மனோஜும் சந்தோஷப்படுகிறார். அதை பார்த்து ரோகினி மனதிற்குள் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் ரோகிணியும் மனேஜும் ஸ்கூலுக்கு வருகிறார்கள். அப்போது முத்து அங்கு காத்திருக்கிறார். மனோஜை பார்த்ததும் என்னடா நீ இங்க வந்திருக்க என்று கேட்க, அதற்கு கிரிஷ் தான் வர சொன்னான் என்று சொன்னதும் முத்துவுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஆனால் மீனாவோ ரோகிணியை காப்பாற்ற ஏதேதோ காரணம் சொல்லி சமாளிக்கிறார்.
பிறகு கிரிஷ்க்கு சர்டிபிகேட் கொடுத்து விட்டு அவனை கூட்டிக்கொண்டு மனோஜம் ரோகிணியும் வருகின்றனர். அப்போது கிரிஷ் தன்னுடைய காரிலயே கூட்டிட்டு போவதற்கு ரோகிணி ஆசைப்படுகிறார். ஆனால் முத்து நாங்க தானே டெய்லி கூப்பிடறோம். நாங்களே கூட்டிட்டு போறோம் என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி மீனாவிடம் கெஞ்ச மீனாவும் அவங்க கூட போகட்டும் என்று சொன்னதும் முத்துவும் சரி என்று விட்டுவிடுகிறார்.
பிறகு கிரிஷ் போன பிறகு ஒருவேளை கிரிஷ்க்கு நம்மள பிடிக்காம போச்சா? எப்ப பார்த்தாலும் இப்ப இந்த மனோஜை தான் கூப்பிடுறான் என்று வருத்தப்படுகிறார். அப்போது மீனா முத்துவை சமாதானப்படுத்துகிறார். மறுபக்கத்தில் கிரிஷ் கையை பிடித்துக் கொண்டு மனோஜ் வீட்டிற்குள் கூட்டிக்கொண்டு வருவதை பார்த்த விஜயா நீ என்னடா இவனை கூட்டிட்டு வர என்று கேட்கிறார்.
அதற்கு மனோஜ் நாங்க தான் அவனை ஸ்கூலில் இருந்து கூட்டிட்டு வந்தோம் என்று சொல்ல, நீங்க எதுக்குடா அவன் ஸ்கூலுக்கு போனீங்க என்று விஜயா கோபப்படுகிறார். அப்போதும் மனோஜ் நடந்த விஷயத்தை சொல்லி மன்னிப்பு கேட்கிறார். விஜயா கோபமாக இருந்தாலும் இதுதான் கடைசி இனிமே இவன் கூட எல்லாம் பழகாதீங்க என்று கண்டிஷன் போடுகிறார்.
அந்த நேரத்தில் அங்கு வரும் முத்து மீனாவிடம் கோபப்படுகிறார். என் பிள்ளையை வேலை வாங்குறீங்களா? என்று திட்டி விட்டு இனிமே அவங்க ரெண்டு பேரும் கிரிஷ் கூட பேச மாட்டாங்க என்று சொல்ல, அவன் குழந்தை அவன் கிட்ட ஏன் இப்படி பேசுறீங்க என்று முத்து திட்டுகிறார். அந்த நேரத்தில் சத்தம் கேட்டு அண்ணாமலையும் வந்து நடந்த விஷயத்தை தெரிந்ததும் விஜயாவை திட்டுகிறார்.
அப்போது கோவாவில் இருந்து ரவியும் வீடு திரும்பி வருகிறார். வீட்டில் உள்ள எல்லோருக்கும் கிப்ட் கொடுத்துவிட்டு தான் ஜெயித்த விருதையும் காட்டி சந்தோஷப்படுகிறார். பிறகு ரவி பேக்கில் இருந்து டிரஸை ஸ்ருதி எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் பொழுது நீத்துவின் ட்ரெஸ்ஸும் அந்த பேக்கில் இருக்கிறது. அதை பற்றி ஸ்ருதி கேட்க, தெரியாமல் வந்திருக்கும் என்று ரவி சொல்ல, ஸ்ருதிக்கு லேசாக சந்தேகம் வருகிறது. இனி இதை வைத்து பெரிய பிரச்சனை வரப்போகிறதா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications