முத்து, மீனாவை பார்த்து கண்கலங்கும் பார்வதி.. அடுத்த ப்ளாஸ்பேக் கதை ஓப்பன்.. விஜயா இப்படிப்பட்டவங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 12ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் மாலை கட்டிக் கொண்டிருக்கும் முத்து மற்றும் மீனாவை பார்த்து பார்வதி கண்கலங்கி அழுகிறார்.
அதே நேரத்தில் முத்து மற்றும் மீனா சந்தோஷமாக இருப்பதை பார்த்து விஜயா கோபப்படுகிறார். ஆனால் விஜயாவிற்கு ஸ்ருதி பதிலடி கொடுத்து அவமானப்படுத்துகிறார். அதுபோல இன்றைய எபிசோடில் பல கலகலப்பான நிகழ்வுகளும் நடந்தது அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் எல்லோரும் பரபரப்பாக மாலை கட்டிக் கொண்டே இருப்பதால் டயர்ட் ஆக, அப்போது சீதா பொங்கல் தீபாவளி போன்ற நாட்களில் நாம் மாலை கட்டும்போது தூக்கம் வராமல் இருக்கும்போது ஒரு கேம் விளையாடுவமே அந்த கேம் விளையாடுவோமா? என்று கேட்க அதற்கு ஸ்ருதி என்ன விளையாட்டு என்று ஆர்வமாக கேட்கிறார்.
அதற்கு அது பாட்டு பாடுற கேம் ஆனால் பெயரில் வரும் பாட்டு மட்டும் தான் பாடனும் என்று சீதா சொல்ல, உடனே ஸ்ருதி இன்ட்ரஸ்டா இருக்கே விளையாடலாம் என்று சொல்கிறார். முதலில் மீனவை எல்லோரும் பாட சொல்ல மீனா "என் மல்லிகை" என்ற பழைய பாடலை பாட அதை பார்த்து முத்து அசந்து போகிறார். அதைத் தொடர்ந்து முத்துவை பாட சொல்கின்றனர். முத்து கொஞ்ச நேரம் யோசித்து "ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ" என்ற பாடலை பாடுகிறார்.

அடுத்ததாக அண்ணாமலை ஒரு பழைய பாடலை பாட, ஸ்ருதி விஜயாவை பாட சொல்ல அதற்கு விஜயா "மல்லி பூ வச்சு வச்சு வாடுதே.. என் மச்சான் எப்ப வர போற" இந்த பாடலை பாட அங்கிருந்தவர்கள் எல்லாரும் உங்க மச்சான் இங்கேதான் இருக்கிறார் என்று கலாய்க்கிறார்கள். அடுத்ததாக ரவி "ஊதா ஊதாப்பூ" என்ற பாடலுக்கு ஸ்ருதியோடு டான்ஸ் ஆடுகிறார்.
அடுத்ததாக மாலை கட்ட வந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து செந்தூரப்பூவே செந்தூரப்பூவே என்ற பாட்டு பாடுகின்றனர். பிறகு கேம் முடிந்ததும் விஜயா ரோகினி மற்றும் மனோஜ் எல்லோரும் தூக்கம் வருது ஆனா ரூமுக்கு போய் தூங்க முடியல. இங்க ஒரே சத்தமா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக விஜயா ரவி மற்றும் ஸ்ருதியை போய் படுக்க சொல்ல அதற்கு ஸ்ருதி இங்கே இங்கே இருக்க தான் ஜாலியா இருக்கு.

இவங்க எல்லாரும் மாலை கட்டி முடிந்ததும் போய் படுக்கலாம் என்று சொல்கிறார். அதற்கு விஜயா இவங்களால நைட்டுக்குள்ள 500 மாலை எப்படி கட்டி முடிக்க முடியும்? அதெல்லாம் இவங்களால முடியாது என்று நெகட்டிவாக பேச அதற்கு ஸ்ருதி ஏன் ஆன்டி இப்படி பேசுறீங்க? முடியும் என்று என்கரேஜ் பண்ணுங்க அப்பதான் அவங்களும் கட்டி முடிப்பாங்க என்று மீண்டும் நோஸ்கட் பண்ணுகிறார்.
அதற்கு மீனா எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது நாங்கள் கட்டி முடிச்சிடுவோம் என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்த பார்வதி கண்கலங்கி கொண்டிருக்கிறார். அப்போது விஜயா பார்வதியை கிச்சனுக்கு கூட்டிட்டு போய் இந்த கூத்த வந்து பார்க்க உன்னை போன் பண்ணி வரச் சொன்னது தப்பா போச்சு. நீயும் அவங்களோட சேர்ந்து மாலை கட்டிட்டு இருக்க என்று திட்ட அதற்கு பார்வதி இவங்க குடும்பமா எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க என்று சொல்ல அதற்கு விஜயா ஆமா பெரிய சந்தோஷம் என்று முகத்தை திருப்பிக் கொண்டு போகிறார்.

பிறகு வெளியே மணி சத்தம் கேட்க ஸ்ருதி என்ன பெல் சவுண்டு கேட்கிறது என்று கேட்க சீதா குல்பி வண்டி போகுது என்று சொன்னதும் எல்லோரும் குல்பி சாப்பிடலாமா என்று ரவி ஸ்ருதி இருவரும் மனோஜை கூட்டிக்கொண்டு வெளியே சென்று எல்லோருக்கும் குல்பி வாங்கி வருகின்றனர்.. எல்லோரும் குல்பி கொடுக்க விஜயா இந்த நேரத்தில் குல்பி சாப்பிட்டால் கோல்டு ஆகாதா என்று கேட்க அதற்கு ரவி அப்ப உங்களுக்கு வேண்டாமா என்று திருப்பி கேட்க சரி வாங்கிட்டு வந்துட்டே வேஸ்ட்டா போயிடும் என்று வாங்கி சாப்பிடுகிறார்.

பிறகு எல்லோரும் குல்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மீனா எனக்கு வேண்டாம் எனக்கு வேலை நிறைய இருக்கு என்று மாலை கட்டிக் கொண்டு இருக்க அதற்கு முத்து நீ மாலை கட்டி கொண்டே இரு என்று குல்பியை ஊட்டி விட மீனா அதற்கு வேண்டாம் என்று மறுக்க எல்லோரும் அதான் தம்பியே ஊட்டுகிறாரே சாப்பிடு என்று சொல்கின்றனர். இதை பார்த்து விஜயா கடுப்பாகி மீண்டும் பார்வதியை கூட்டிக்கொண்டு ரூமுக்கு போகிறார்.

அப்போது பார்வதி கண்கலங்கி இருப்பதை பார்த்து விஜயா என்ன குல்பி ரொம்ப சில்லுன்னு இருக்கா? கண்ணெல்லாம் கலங்கி இருக்கு என்று கேட்க, அதற்கு பார்வதி மீனா முத்து இவ்வளவு அன்னோன்யமா இருக்கிறதை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு... என் புருஷன் எனக்கு இப்படித்தான் ஊட்டி விடுவாரு என்று கண்கலங்குகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications