மாலை கொண்டு போன வண்டியை கடத்திய சிட்டி.. கண்டுபிடித்த முத்துவை ரவுண்ட் கட்டிய ரவுடிகள்.. மீனா அதிரடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் முத்து மற்றும் மீனா சொன்னபடியே 500 மாலைகளை கட்டிக்கொண்டு வண்டியில் ஏற்றி அனுப்பி வைக்க அதை சிட்டி ரௌடிகளை வைத்து கடத்தி இருக்கிறார்.
அதே நேரத்தில் மாலை கொண்டு போன வண்டியை முத்து மற்றும் மீனா கண்டுபிடித்திருக்கும் நிலையில் அவர்களுக்கு கடைசியில் அதிர்ச்சி கிடைக்கிறது. இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்று வெளியான ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் இதை இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று சொல்ல தோன்றும். ஏற்கனவே முத்து மற்றும் மீனா 500 மாலைகளை கட்டி விடுவார்களா? என்ற கேள்விகள் எல்லோருக்கும் இருந்த நிலையில் இப்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஜயாவின் பிரச்சனை எதுவும் இல்லாமல் 500 மாலைகளை சொன்னபடியே கட்டி முடித்து வண்டியில் ஏற்றி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் சிட்டி ப்ளான் போட்ட மாதிரியே ரவுடிகளை வைத்து அந்த வண்டியை கடத்திட்டுப் போய் இருக்கிறார். அதே நேரத்தில் முத்துவுக்கு ஆர்டர் கொடுத்த அரசியல் பிரமுகர் எதிர்க்கட்சிக்காரங்க கிட்ட எவ்வளவு பணம் வாங்கி என்னை ஏமாத்தின? உனக்கு இன்னும் அரை மணி நேரம் தான் டைம் தருகிறேன் அதற்குள் சொன்ன மாதிரி 500 மாலைகளோடு வந்து சேரனும்... இல்லனா நடக்கிறதே வேற என்று மிரட்டல் கொடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில் முத்துவின் மாலைகள் ஏற்றிய வண்டியை தொடர்ந்து முத்துவும் மீனாவும் ஆட்டோவில் போய்க்கொண்டிருக்க ஒரு கட்டத்தில் மாலை கொண்டு போன வண்டி நிற்க அந்த டிரைவரை முத்து அடித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் இவர்களை ஃபாலோ பண்ணி ஆட்டோ கார் என பல வண்டிகளில் பல ரவுடிகள் அந்த இடத்திற்கு வந்து முத்துவை போட்டு அடிக்கின்றனர். இதை பார்த்து மீனா பதறி போய்க்கொண்டிருக்கிறார்.
இப்படியாக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் மீனாவும் முத்துவும் எப்படியாவது இதுல ஜெயிக்கணும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏற்கனவே இயக்குனர் குமரன் சீரியலில் திடீர் என்று எதிர்பாராத திருப்பங்கள் வைத்து விடுவது அவருடைய இயல்புதான். அதுபோல இப்போது இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பிடித்திருக்கிறது.
இந்த சீரியலில் காமெடி காட்சிகள், காதல் காட்சிகள் மற்றும் செண்டிமெண்ட் என் அள்ளிக் கொண்டிருக்கிறது. இதனால் இப்போது ஒன்பது மணிக்கு இந்த சீரியலுக்கு அமோகமான வரவேற்பு இருக்கும் நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இந்த போட்டியில் முத்துவும் மீனாவும் ஜெயிப்பார்களா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதில் முத்து ஜெயித்தால் தான் சீரியல் விறுவிறுப்பு அடையும் இல்லை என்றால் விஜயா, மனோஜ், ரோகினி போன்றோர் மீனா மற்றும் முத்துவை அவமானப்படுத்துவார்கள். அதே நேரத்தில் மக்களுக்கும் என்னடா இப்படி பண்ணிட்டாங்க என்ற ஒரு வெறுப்பு வந்துவிடும். ஆனால் கண்டிப்பாக எப்படியும் இதில் ஜெயிப்பார்கள் என்று தெரிகிறது. ஒருவேளை முத்துவை காப்பாற்றுவதற்காக அந்த இடத்திற்கு முத்துவின் டிரைவர் நண்பர்கள் வருகிறார்களா என்ற எதிர்பார்ப்பும் வருகிறது.
காரணம் முத்து தன்னுடைய நண்பர்களுக்காக காரை விற்று கடனை அடைத்திருக்கிறார். இதனால் முத்து தன்னுடைய மாலை ஏற்றி கொண்டு போன வண்டியை ரவுடிகள் கடத்திக் கொண்டுட்டு போனதை தன்னுடைய நண்பர்களிடம் சொல்லி இருந்தால் கண்டிப்பாக அவர்கள் இந்த இடத்திற்கு வந்து முத்துவை காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். இந்த ப்ரோமோ வெளியான ஒரு சில மணி நிமிடங்களில் லைக்குகள் தெறித்துக் கொண்டிருக்கிறது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications