பார்லர் விஷயம் தெரிந்து விஜயா சொன்ன வார்த்தை.. நரி வேலை செய்த மனோஜ்.. முத்து இப்படி மாறிட்டாரே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 15ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் ரோகிணி பார்லரில் விஜயாவின் பெயரை மாற்றிவிட்ட ரகசியம் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் விஜயா ரோகிணி மீது கோபப்பட்டு திட்டுகிறார்.
அதே நேரத்தில் ஏற்கனவே ரோகிணி பற்றிய உண்மை தெரிந்த முத்து இப்போது விஜயா முன்பு ரோகிணியை மாட்டிக் கொடுத்திருக்கும் நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரோகிணியின் பார்லர் விஷயம் இன்றைய எபிசோடில் மனோஜ்க்கு தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே முத்துவிற்கு ரோகிணி பற்றிய உண்மைகள் தெரியும். ஒரு முறை முத்து ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருக்கும்போது ரோகிணி வேலை பார்க்கும் பார்லரின் ஓனர் ஆட்டோவில் வந்துவிட்டு பணத்தை கொடுக்காமல் போய்விட்டதால் முத்து அந்த பார்லருக்குள் வந்து பணத்தைக் கேட்க வரும்போது,
அங்கு போர்டில் வேறு பெயர் இருப்பதைப் பற்றி விசாரிக்க அப்போது ரோகிணி இங்கு வேலை செய்து கொண்டிருக்கிறார். பார்லர் விஜயா பெயரில் கிடையாது என்ற விஷயத்தை சொல்லி இருக்கின்றனர். இதை தெரிந்து கொண்டதும் முத்து எப்போதும் போல வீட்டில் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்யாமல் அண்ணாமலை இடம் மட்டும் சொல்ல அதற்கு அண்ணாமலை இந்த உண்மை எப்போது வீட்டுக்கு தெரிகிறதோ அது தெரியட்டும் அதுவரைக்கும் நீ யாரிடமும் எதுவும் சொல்லாதே என்று சொல்லி இருந்தார்.

இப்படியான நிலையில் அடுத்த கட்டத்திற்கு முத்து மற்றும் மீனா முன்னேறி போவது போன்று சில நாட்களாக எபிசோடு போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகிணியின் பார்லருக்கு போயிருந்த நிலையில் அங்கிருந்த போர்டை பார்த்து எங்க அம்மா பெயர் இருந்த இடத்தில் வேறு பெயர் இருக்கிறது என்று விசாரிக்க அதற்கு ரோகிணி என்று திரு திருவென்று முழித்து கொண்டிருந்தார்.
அப்போது வித்யா அது பெயரை ரிப்பேர் செய்ய கொடுத்திருக்கோம் என்று சமாளித்து இருந்தார். இப்படியான நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மனோஜ் பார்லரில் விஜயா பெயர் இல்லாத விஷயத்தை வீட்டில் வந்து போட்டுக் கொடுக்க அதைக் கேட்டு முத்து அப்போ பார்லரில் அம்மா பெயர் கிடையாதா என்று நக்கல் செய்கிறார். அந்த நேரத்தில் ரோகிணி வீட்டிற்கு வர கோபமான விஜயா ரோகிணியை ரூமிற்கு கூட்டிட்டு போய் நீ இன்னும் எத்தனை பொய் என்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருக்க?

போர்டில் என் பெயரை மாற்றிய விஷயத்தை ஏன் என்னிடம் இவ்வளவு நாளா சொல்லல. இனி ஒரு முறை இந்த மாதிரி பொய் சொன்னானு எனக்கு தெரிஞ்சு வச்சுக்கோ அவ்வளவுதான்... என்னை இப்படி எல்லாரும் முன்பும் கேவலப்படுத்திட்டியே? இனி பொய் சொல்லி என்னிடம் மாட்டினால் என்னுடைய இன்னொரு முகத்தைப் பார்ப்ப என்று மிரட்டி விட்டு போக அதெல்லாம் கேட்டு பயந்து போன ரோகிணி என்ன பத்தி முழு உண்மையும் தெரிய வந்தா இவங்க என்ன பண்ணுவாங்கன்னு தெரியலையே என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இந்த சீரியலில் விறுவிறுப்பான கதை நகர்ந்து கொண்டிருப்பது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இப்போது ரோகிணி பற்றிய உண்மை வீட்டிற்கு தெரிய வந்திருப்பது கனவாக இருந்து விடக் கூடாது என்பதும் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனாலும் இப்போது உள்ள சீரியல்களில் இது கனவு என்று கடைசி நேரத்தில் ஏமாற்றுவது குறைந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரி இந்த சீரியலிலும் இது நிஜத்திலே நடந்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications