ரோகிணி விஷயம் தெரிந்து விஜயா அடித்த பல்டி.. அப்போ எல்லாமே ஏமாற்று வேலையா? முத்துக்கு தான் அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 16ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ரோகிணி பார்லர் பெயரை மாற்றிய விஷயம் மனோஜ் மூலமாக மொத்த குடும்பத்திற்கும் தெரியவந்திருக்கும் நிலையில் எல்லாரும் முன்பும் விஜயா ரோகிணி மீது கோபப்படாத மாதிரி நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் முத்துவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக மீனா எடுத்திருக்கும் முடிவால் விஜயா கோபப்படுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் வட்டிக்கடைக்காரர் தண்டபாணி மீனாவின் பூக்கடையை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் விஜயா யாரென்று விசாரிக்க, அதற்கு அவர் நீங்க யார் என்று திரும்ப விசாரிக்கிறார். பிறகு நான் தான் விஜய் என்று சொன்னதும் ஓ அப்போ கடை உங்க பேருல தான் இருக்கா என்று வட்டிக்காரன் கேட்க, அதற்கு விஜயா ஆமா என்று சலித்துக் கொண்டு சொல்கிறார்.
அதோடு என்னுடைய மருமகள் விஜயா டியூட்டி வேர்ல்ட் என்ற பெரிய பியூட்டி பார்லர் வச்சிருக்கா அதுதான் எனக்கு பெருமை என்று சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் மீனா அங்கு வந்ததும் தண்டபாணி தான் சீதா சொல்லி வந்ததாக சொல்லி இருபதாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு வட்டியை சரியா கட்டணும் என்று சொல்லிவிட்டு போகிறார்.

அதைத் தொடர்ந்து விஜயா எதுக்குடி பணம் வாங்குற என்று கேட்க அதற்கு மீனா அது உங்களுக்கே சீக்கிரமா தெரியவரும் என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பி போகிறார். அடுத்த காரை பார்த்து பணத்தை கட்டுகிறார். பிறகு செல்வத்திடம் முத்துவை கூட்டிட்டு வந்து உங்க பிரண்டுக்கு கார் வாங்க போவதாக சொல்லி வந்து கார் எப்படி இருக்குன்னு கேளுங்க என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வருகிறார். மறுபக்கத்தில் மனோஜ் பியூட்டி பார்லர் வர அங்கு விஜயா பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை பார்த்து ஷாக் ஆகி ரோகிணியை திட்டுகிறார்.
அப்போது ரோகிணி பார்லரை இந்த பிரான்ச் ஓட இணைத்துவிட்டேன். அதில் நானும் இப்போ ஒரு பார்ட்னர். இனி நிறைய பிராபிட் வரும் என்று சொல்ல அதைக் கேட்டு மனோஜ் நம்பி விடுகிறார். உடனே வீட்டுக்கு வந்து இந்த விஷயத்தை அவரிடம் சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார். அந்த நேரத்தில் ரோகிணியும் பின்னாடியே வந்து சமாளிக்கிறார்.
அதற்கு முத்து அப்போதைக்கு பூக்கடை ஒன்னு தான் அம்மா பேர்ல இருக்கா? என்று பிரச்சனையை பெரிசு படுத்துகிறார். அதோடு மீனாவிடம் நீ கூட வேற பெயரை மாற்றி வைத்துக்கொள் மீனா என்று சொல்ல அதற்கு மீனா எப்பவுமே அத்தை பேர்ல தான் நம்ம கடை இருக்கும் என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி இன்னும் கொஞ்சம் நாளில் புது பார்லர் ஆரம்பித்து அதுக்கு உங்க பேரை தான் வைக்க போறேன் என்று ஐஸ் வைக்க அதற்கு விஜயா எல்லாரும் முன்னாடியும் ரோகிணி எது செஞ்சாலும் சரியாக இருக்கும்.

அவாதான் என் பெயரில் முதல்ல ஆரம்பிச்சா மத்தவங்க எல்லாம் அதை பார்த்து சூடு போட்டுக்கிட்டாங்க என்று சொல்லிக்கொண்டு ரூமிற்க்கு போக பின்னாடியே ரோகிணியும் சென்று உங்களுக்கு என் மேல கோபம் இல்லையே அத்தை.. நான் பயந்துட்டேன் என்று சொல்ல, அதற்கு கோபமான விஜயா உன் மேல வருத்தம் இல்லபயங்கரமாக கோபத்தில் இருக்கிறேன் என்று கொந்தளிக்கிறார்.

அதோடு யாரை கேட்டு பெயரை மாற்றின. அந்த பார்லர்எப்படி திறந்தேன்னு மறந்து போச்சா? வீடு வீடா போய் மசாஜ் பண்ணிட்டு இருந்த உனக்கு நான் தான் பணம் கொடுத்தேன். அப்படி இருக்கும்போது உன் மனசுல நீ என்ன நெனச்சிட்டு இருக்க, இன்னும் எத்தனை விஷயத்தை நீ என்கிட்ட சொல்லாம மறைச்சிருக்க இனி ஏதாவது மறைச்சிருக்கேன்னு தெரிஞ்சா அவ்வளவுதான் என்று மிரட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications