விஜயாவை ஏமாற்ற அடுத்த நாடகம் போட்ட ரோகிணி.. கதையை முடித்துவிட்ட முத்து.. உணர்வுபூர்வமான காட்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 19ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மீனா கார் வாங்கி கொடுத்ததை பார்த்து முத்து சந்தோஷத்தில் இருக்க அதை மனோஜ் அவமானப்படுத்துகிறார். அதற்கு முத்து சரியான பதிலடி கொடுக்கிறார்.
அதே நேரத்தில் தன் மீது கோபமாக இருக்கும் விஜயாவை சமாதானம் செய்வதற்காக ரோகிணி எடுத்த முயற்சிகளை உடைத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துவும் மீனாவும் புது காரில் மீனா முத்துவும் போய்க்கொண்டு இருக்கின்றனர். அப்போது மீனா பேச்சு கொடுத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் முத்து சந்தோஷத்தில் எதுவும் பேசாமல் வருகிறார். அதற்கு மீனா என்ன ஆச்சு ஏன் நீங்க பேசாமலே இருக்கீங்க என்று கேட்க அதற்கு முத்து சந்தோஷத்தில் எனக்கு பேச்சு வரல, உனக்கு எப்படி இந்த ஐடியா வந்தது என்று கேட்க,
அதற்கு மீனா நீங்க எனக்கு பூக்கடை வச்சு கொடுத்தது போல தான் என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து போகிற வழியில் ஒரு கடையில் காரை நிறுத்தி அங்கிருக்கும் மொத்த பூக்களையும் வாங்கி மீனாவிற்கு தலையில் வைத்து அழகு பார்க்கிறார். பிறகு கார் செட்டுக்கு மீனாவை கூட்டிட்டு போய் இது என்னுடைய மனைவி எனக்காக வாங்கி கொடுத்த காரு என்று எல்லோரிடமும் பெருமையாக பேச அதற்கு நண்பர்கள் எல்லோரும் அதுதான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே என்று சிரிக்கிறார்கள்.
பிறகு மீனா மற்றும் முத்து என்ற பெயரில் முதல் எழுத்தின் M என்பதை காரின் பின்னாடி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார். மறுபக்கத்தில் அண்ணாமலை மனோஜிடம் நீ வேலைக்கு போக போறியா? இல்லையா? என்ன பண்ணலாம்னு ஐடியா வச்சிருக்க முத்து பாரு அவன் ஏதாவது ஒரு வேலையை செஞ்சுட்டே இருக்கான் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் அங்கு வரும் ரோகிணி மலேசியாவில் இருந்து விஜயாவுக்கு மாமா புடவை அனுப்பி இருப்பதாக கொடுக்க அந்த புடவையை பார்த்து சமாதானமான விஜயா உனக்கு டீ போட்டு தரேன்மா என்று சொல்கிறார்.
அடுத்ததாக முத்து வீட்டில் வந்து எல்லோரிடமும் தன்னுடைய காரை காட்டி சந்தோஷப்பட அதற்கு விஜயா இந்த கார் என்ன ஒரு பத்து லட்சம் இருக்குமா என்று கேட்க அதற்கு மனோஜ் இல்லம்மா இது ஹேண்ட் கார் தான் இரண்டு லட்சம் அல்லது 3 லட்சம் இருக்கும் அவ்வளவுதான் என்று சொல்ல அதை கேட்டு முத்து என்னப்பா பண்ண என் பொண்டாட்டி பூகட்டி எனக்கு ரெண்டு லட்சத்தில் காரு வாங்கி கொடுத்து இருக்கா. இதுவே என் பொண்டாட்டியும் மலேசியாவில் இருந்தா எனக்கு 10 லட்சம் என்ன 10 கோடிக்கு கார் வாங்கி கொடுத்திருப்பா என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
அடுத்ததாக ரூமிற்கு வந்த ரோகிணி விஜயாவிடம் இன்னும் என்னலாமாம் பார்க்க வேண்டியது இருக்கோ என்று சொல்ல ,அதற்கு விஜயா முத்துவை மீனா தூக்கி விட்டுட்டா ஆனா மனோஜை தூக்கி விட யாரு இருக்கா? என்று புலம்புகிறார். அதோடு ரோகிணி ஒன்றும் பேசாமல் இருக்க இப்ப கூட நீ ஒன்னும் சொல்லல... நீ நினைச்சிருந்தா அவன் இன்னைக்கு நல்லா வந்து இருப்பான்.. பெரிய ஓனராக இருப்பான் என்று சொல்கிறார் இதைக் கேட்டு ரோகிணி எதுவும் சொல்ல முடியாமல் அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications