ரோகிணி அப்பாவால் களைகட்டும் பிரச்சனை.. ஸ்ருதி அம்மா வைத்த ஆப்பு.. முத்து கேட்ட சரியான கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 20ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ஸ்ருதியின் அம்மா ஸ்ருதிக்கு தாலி பிரித்து கொடுக்க வேண்டும் என்று பிரச்சனை செய்ய அதனால் ரோகிணி புது பிரச்சனையில் சிக்குகிறார்.

அதே நேரத்தில் மீனாவை வேலை வாங்கும் விஜயாவை முத்து லெப் ரைட் வாங்குகிறார். இதனால் இனி அண்ணாமலை குடும்பம் பிரிபடுமா? என்ற எதிர்பார்ப்பு வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Siragadikka aasai march 20th promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா ரோகிணியை திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த மீனா கூட பூக்கட்டியே புருஷனுக்கு கார் வாங்கி கொடுத்திருக்கா அதிலேயும் அவன் ஒரு நாள் நல்லா இருப்பான் இன்னொரு நாள் கோபப்படுவான். அவ தம்பி கைய வேற ஒடச்சிருக்கான் ஆனாலும் அவனுக்காக பார்த்து பார்த்து செய்யுரா... ஆனால் மனோஜ்க உன் மேல ஒரு நாளாவது கோபப்பட்டு இருப்பனா?

ஆனால் நீ அவனுக்காக எதுவுமே செய்யலையே அவன் ஒரு நல்ல வேலை கூட இல்லாமல் இருக்கான் என்று சொல்ல அதற்கு ரோகிணி அவருக்கு சீக்கிரமா நல்ல வேலை கிடைக்கும் என்று சொல்ல இப்ப கூட நான் அவருக்கு ஏதாவது பண்றேன்னு உன்னால சொல்ல முடியல என்று கோபப்படுகிறார். அதற்கு ரோகிணி நான் என்ன பண்ணனும் ஆன்ட்டி என்று கேட்க அதற்கு விஜயா உங்க அப்பா கிட்ட பேசி மனோஜ்க்கு ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு தர சொல்லு என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

Siragadikka aasai march 20th promo and episode full update

அதோடு இப்பவே நீ உங்க மாமா கிட்ட பேசு என்று சொல்ல அதற்கு ரோகிணி இல்ல அவரு பிசியா இருப்பாரு என்று சமாளிக்கிறார். ஆனால் விஜயா விடாமல் உங்க மாமாவுக்கு புடவை எல்லாம் வாங்கி கொரியர் பண்ண நேரம் இருக்கு ஒரு போன் பேச நேரம் இல்லையா என்று கேள்வி மேல் கேள்வி கேட்க கேட்கிறார். அதற்கு ரோகினி நான் முதல்ல அப்பாகிட்ட பேசிட்டு உங்கள பேச வைக்கிறேன் என்று சமாளிக்கிறார். அதற்கு விஜயா இன்னைக்கு ஒரு நாள் தான் உனக்கு வார்னிங் என்று சொல்கிறார்.

அடுத்த கட்டத்தில் ரோகினி மீனாவிடம் வந்து டீ கேட்டு நீங்க எதுக்கு கார் எல்லாம் வாங்கி கொடுத்தீங்க? எப்படி கார் வாங்குனீங்க? மொத்த பணமும் கட்டுனீங்களா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க அப்போது ஸ்ருதி நீங்க கேட்கிற கேள்வியை பார்த்தா அவங்க பேங்க் ஸ்டேட்மென்ட் எல்லாம் கேட்பீங்க போல என்று நக்கல் அடிக்கிறார்.

அதைத்தொடர்ந்து மீனா வீட்டிலிருந்து கிளம்பி வெளியே போகிறார். அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு வந்து ஸ்ருதிக்கு தாலி பிரித்து போடும் பங்க்ஷன் கிராண்டா செய்ய முடிவெடுத்து இருப்பதாக சொல்ல விஜயா சந்தோஷப்படுகிறார். அதோடு ரோகிணிக்கு இன்னும் தாலி பிரித்து போடல அதனால ரெண்டு பேருக்கும் ஒன்னா பங்ஷன் செய்யலாம் என்று விஜயா சொல்ல அதற்கு ஸ்ருதியின் அம்மாவும் ஓகே என்று சொல்லிவிடுகிறார்.

அதற்கு விஜயா ரோகிணி உங்க அப்பா கிட்ட விஷயத்தை சொல்லி அவரை கண்டிப்பாக கிளப்பி வர சொல்லு. அவர் பங்க்ஷனுக்கு வரணும் என்று சொல்ல அதற்கு ரோகிணி அப்பா ரொம்ப பிசியா இருப்பாங்க என்று சொல்ல பொண்ணுக்கு இப்படி ஒரு பங்க்ஷன் பண்ணும்போது கூட வரலைன்னா எப்படி? அப்படி அவர் வராமல் இருக்கிறதுனால எதுவும் பிரச்சனை இருக்கா என்று எனக்கு சந்தேகம் வருது என்று சொல்ல அதற்கு பதறிப்போன ரோகிணி நான் அப்பாட்ட பேசி அவரை வரவேற்கிறேன் என்று சொல்லி சமாளிக்கிறார்.

Siragadikka aasai march 20th promo and episode full update

பிறகு பார்லருக்கு வந்த ரோகிணி வித்யாவிடம் வீட்டில் நடந்த பிரச்சனைகளை எல்லாம் சொல்லி புலம்புகிறார். மறுபக்கத்தில் ஸ்ருதியின் அம்மா இந்த பங்க்ஷனில் பெரிய பிரச்சனை செய்து முத்துவை வீட்டை விட்டு வெளியே துரத்தனும் என்று தன்னுடைய பிளானை பேசிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் வீட்டில் விஜயா மீனாவிடம் கிச்சனில் அந்த வேலையை பார்த்தியா? இந்த வேலையா பார்த்தியா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க அதை கேட்டு கோபமான முத்து ஏன் எல்லா வேலையும் மீனா மட்டும்தான் பார்க்கணுமா? மத்த ரெண்டு மருமகள்களும் என்ன பண்ணுறாங்க என்று கேட்க அதைக் கேட்டு விஜயா அதிர்ச்சியாகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+