போலீசிடம் மாட்டும் முத்து.. விஜயா செய்த ஆர்ப்பாட்டம்.. கலகலப்பான நேரத்தில் ஸ்ருதி கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 7ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்று இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் விஜயா முகத்தில் மாஸ்க் போட்டு கொண்டு வீட்டில் எல்லோரையும் பயப்பட வைத்து கலகலப்பான காட்சிகள் இடம் பிடித்திருந்தது. அதிலும் அண்ணாமலை எதிர்பார்க்காத கவுண்டர் கொடுத்து இன்றைய எபிசோடில் எல்லோரையும் சிரிக்க வைத்திருக்கிறார்.
அதே நேரத்தில் ஸ்ருதி மற்றும் ரவி இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை தெரிந்து கொண்ட விஜயா அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் ரோகினி விஜயாவின் முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போட்டு கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வரும் மீனா வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் விஜயாவிடம் எதுக்காக இப்படி எல்லாம் ஃபேஸ் மாஸ்க் போடணும் நிறைய தண்ணி குடிச்சு, பழம் சாப்பிட்டாலும் முகம் பொலிவாக இருக்கும் என்று எங்க அம்மா சொல்லி இருக்காங்க என்று சொல்ல அதனால் கடுப்பான விஜயா உங்க அம்மா என்ன பெரிய ஸ்கின் டாக்டரா சுடு தண்ணியை வச்சிட்டு நீ வெளியே போ என்று திட்டி வெளியே அனுப்புகிறார்.
அந்த நேரத்தில் ரூமில் இருக்கும் ஸ்ருதியும் ரவியும் ஏசியை மாற்றி மாற்றி போட்டு தங்களுடைய சண்டையை அதில் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இதனால் ட்ரிப் ஆகி கரண்ட் கட் ஆகி விடுகிறது. அந்த நேரத்தில் முத்து தண்ணீர் குடிக்க கீழே வருகிறார். கரண்ட் இல்லாததால் கையில் இருக்கும் போன் டார்ச்சை அடித்துக் கொண்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க அப்போது ஃபேஸ் மாஸ்கோடு வெளியே வரும் விஜயாவை பார்த்து முத்து அலறுகிறார்

இதைக் கேட்டு மனோஜ் ரோகிணியும் வெளியே வர அவர்களும் விஜயாவை பார்த்து கத்துகிறார்கள். குடும்பமே விஜயாவால் பயந்து அலறி விட அப்போது அங்கு வரும் அண்ணாமலை இதற்குத்தான் உனக்கு இந்த வேலை எல்லாம் தேவையில்லை என்று சொன்னேன் கேட்டியா என்று விஜயாவை திட்டிக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து கதவை திறந்து முத்து நம்ம வீட்டில் மட்டும்தான் கரண்ட் போய் இருக்கிறதா? என்று செக் பண்ணி பார்க்க கரண்ட் வந்து விடுகிறது.

அப்போது முத்து யாரு சுச்சை போட்டு போட்டு ஆப் பண்ணுனா? அதனால்தான் இப்படியாகும் என்று கேட்க அதற்கு ரவி அதான் கரண்ட் வந்துருச்சுல்ல விடு என்று சமாளிக்கிறார். பிறகு ரூமுக்குள் போனதும் ரவியும் ஸ்ருதியும் உன்னால தான் இப்படி ஆயிடுச்சு என்று மீண்டும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதை எல்லாம் வெளியே நின்றபடி விஜயா கேட்டு விடுகிறார்.
அடுத்தநாள் காலையில் பூக்கள் வாங்குவதற்காக முத்துவும் மீனாவும் மார்க்கெட்டுக்கு போகின்றனர். அப்போது ஒரு இடத்தில் ஆட்டோவை நிறுத்த இங்கேயே இருங்க என்று மீனா சொல்லி விடுகிறார். அதற்கு முத்து இந்த இடத்தில் நின்றால் சரியா இருக்காது என்று சொல்ல அதற்கு மீனா எங்களை கூட்டிட்டு வரும் ஆட்டோக்காரர் இங்கேதான் நிற்பார் என்று சொல்ல முத்துவும் சரி என்று நிற்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் டிராபிக் போலீஸ் 500 ரூபாய் அபராதம் போட முத்து திட்டிக்கொண்டே கட்டுகிறார்.
பிறகு ஆட்டோவில் மீனா முத்துவோடு வரும்போது சேட்டை செய்து கொண்டு வருகிறார். அப்போது ஒரு டீக்கடையை பார்த்ததும் டீ குடித்து விட்டு போகலாம் என்று சொல்கிறார். அதற்கு முத்து வேண்டாம் என்று மறுக்கிறார். அதற்கு டீக்கடைக்காரர் உங்களோட கஸ்டமர் டீ குடிக்க கூப்பிடுறாங்க வந்து குடிக்க வேண்டியது தானப்பா என்று சொல்ல முத்து கோபம் ஆகிறார்.
திடீரென கண்ணீரோடு சிறகடிக்க ஆசை மீனா வெளியிட்ட வீடியோ.. காரணம் இதுவா? ரசிகர்கள் ஆறுதல்!
அடுத்ததாக மீனா வடையை வாங்கிக்கொண்டு கொடுக்க அதற்கு முத்து வாங்க மறுக்கிறார். அதை பார்த்ததும் கடைக்காரர் பொண்டாட்டி கூட இப்படி செய்ய மாட்டாங்க உனக்கு சவாரிக்கு வந்தவங்க இப்படி எல்லாம் செய்றாங்களே என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு பக்கத்தில் இருந்தவர் சும்மா இரு அவங்க நெஜமாவே புருஷன் பொண்டாட்டி தான் என்று கடைக்காரருக்கு பல்பு கொடுக்கிறார்.

அதைத்தொடர்ந்து வீட்டில் இருக்கும் விஜயா சோகமாக உட்கார்ந்து இருக்க அவரிடம் அண்ணாமலை என்ன விஷயம் என்று கேட்கிறார். அப்போது விஜயா நேத்து நம்ம வீட்டுல கரண்ட் கட் ஆயிடுச்சில்ல அதுக்கு காரணம் ஸ்ருதியும் ரவியும் தான். அவங்களுக்குள்ள ஏதோ சண்டை இருக்கு என்று சொல்ல, அதற்கு அண்ணாமலை அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை அவங்களா சொல்ற வரைக்கும் நீ எதுவும் கேட்காத என்று தடுக்கிறார்.
ஆனால் விஜயா நான் இதை கேட்காமல் விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு ஸ்ருதி ரூமை விட்டு வெளியே கிளம்பி போகும்போது விஜயா ஸ்ருதியிடம் கேட்கப் போகிறார். ஆனால் ஸ்ருதியிடம் பேச முடியாமல் தடுமாறுகிறார். அதற்கு என்ன ஆச்சு ஆன்ட்டி உங்களுக்கு எதுவும் ஸ்டோக் வந்துடுச்சா ஹாஸ்பிடலுக்கு போகுமா என்று கேட்க அதற்கு விஜயா இல்லம்மா உனக்கும் ரவிக்கும் எதுவும் பிரச்சனையா என்று கேட்கிறார். அப்போது ஸ்ருதி எதுவும் பேசாமல் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications