திடீரென கண்ணீரோடு சிறகடிக்க ஆசை மீனா வெளியிட்ட வீடியோ.. காரணம் இதுவா? ரசிகர்கள் ஆறுதல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் கதாநாயகியாக நடிகை கோமதிப்பிரியா நடித்து வருகிறார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென்று கண்கலங்கி அழுது கொண்டிருப்பது போன்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோமதி பிரயா தமிழில் மட்டும் அல்லமல் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பிஸியாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோவிற்கு இணையத்தில் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல்களை கூறி வருகிறார்கள்.

Siragadikka aasai serial Actress Gomathi priya suddenly burst into tears video

அந்த வகையில் விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் அந்த சீரியலில் மீனாவாக ரசிகர்களின் மனதை கவர்ந்த கோமதி பிரியா திடீரென்று கண் கலங்கி அழுத வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் கோமதி பிரியா, யுவன் சங்கர் ராஜா இசையில் "தேவதை பார்க்கும் நேரம் இது" என்ற பாடலில் இடம்பெற்ற "மிக அருகினில் இருந்தும் தூரம் இது" என்ற வரிகளை ஹைலைட் பண்ணி அதற்கு கண்கள் கலங்கி அழுதபடியே க்யூட்டான ஒரு வீடியோவை கோமதி பிரியா பகிர்ந்திருக்கும் நிலையில் இவருடைய நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Siragadikka aasai serial Actress Gomathi priya suddenly burst into tears video

அதே நேரத்தில் கோமதிப்பிரியா மிக அருகினில் இருந்தும் தூரம் இது என்ற வரிகளை மட்டுமே மையப்படுத்தி இருப்பதால் இவர் யாரையும் காதலிக்கிறாரா? அதனால் தான் அவங்களை மிஸ் பண்ணுவதால் இவ்வளவு பீல் பண்ணி வீடியோ வெளியிட்டு இருக்கிறாரா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. அதே நேரத்தில் கோமதி பிரியா இப்போது பிஸியாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அவருடைய குடும்பத்தையும் அல்லது நண்பர்களையும் கூட மிஸ் பண்ணுவதால் இப்படி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறாரா என்பதும் சிலருடைய கேள்விகள்.

ஆனாலும் ஒரு சில நாட்களாகவே சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவுக்கு அதிக காட்சிகள் இல்லை என்பது ரசிகர்களின் வருத்தமாக இருக்கிறது. ஆனால் நேற்று வெளியான ப்ரோமோவில் முத்துவுக்காக மீனா சிட்டி இடம் கோபப்பட்டு இருக்கிறார். அதனால் சிட்டி இனி மீனாவும் முத்துவும் ஒன்றாக வாழ கூடாது அதற்கான வேலையை சத்யாவை வைத்து பார்க்க வேண்டும் என்று பிளான் போட்டு இருக்கிறார்.

Siragadikka aasai serial Actress Gomathi priya suddenly burst into tears video

இதனால் இனி முத்துவும் மீனாவும் பிரிய போகிறார்களா என்பது ரசிகர்களின் வருத்தமான கேள்விகளாக இருக்கிறது. ஒருவேளை சீரியலில் முத்துவும் மீனாவும் பிரிந்து இருக்கும் காட்சிகள் இன்று சூட்டிங் எடுக்கப்பட்டதா அதை வைத்து தான் கோமதி பிரியா இப்படி ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறாரா? என்பதும் சிலருடைய கேள்விகளாக இருக்கிறது.

காரணம் கோமதி பிரியா சூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி ரிலீஸ் வீடியோக்கள் வெளியிட்டு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை மறைமுகமாகவே ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி விடுவார் இந்த நிலையில் இப்போது இவர் வெளியிட்ட ஒரு வீடியோ பெரிய அளவில் ரசிகர்களை குழப்ப வைத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+