ரோகிணி பற்றி மனோஜிடம் போட்டுக் கொடுத்த நண்பர்.. இந்த அவமானம் தேவையா விஜயா? மாஸ் காட்டும் மீனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் எட்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஸ்ருதி மற்றும் ரவி பிரச்சனையில் தலையிட்ட விஜயாவுக்கு ஸ்ருதி எதிர்பாராத பதிலை கொடுத்து அவமானப்படுத்துகிறார்.

அதே நேரத்தில் மனோஜிடம் பார்க் நண்பர் ரோகினி பற்றி சொன்ன வார்த்தையை கேட்டு மனோஜ் அதிர்ச்சியில் இருக்கிறார். மறுபக்கத்தில் மீனாவுக்கு வந்த வாய்ப்பை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைகிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Siragadikka aasai march 8th Episode and promo full update

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா ஸ்ருதியிடம் உனக்கும் ரவிக்கும் என்னம்மா பிரச்சனை என்று கேட்டுக் கொண்டிருக்க அதற்கு ஸ்ருதி எங்களுக்குள் எந்த பிரச்சினையுமே இல்லையே என்று சொல்கிறார். அதற்கு விஜயா, அத்தை கிட்ட தானேம்மா சொல்ல போறா? கூச்சப்படாமல் சொல்லுமா என்று கேட்க அதற்கு ஸ்ருதி உங்களுக்கு மாமாவுக்கும் ஆர்கியுமென்ட் வந்ததே இல்லையே என்று கேள்வி கேட்க விஜயா இதற்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் ரவி வெளியே வந்து ஸ்ருதியிடம் வா நானும் கிளம்பிட்டேன் உன்னை ட்ராப் பண்றேன் என்று கூப்பிட அதற்கு ஸ்ருதி நான் ஆட்டோ புக் பண்ணிட்டேன் என்று சொல்கிறார். அப்போது விஜயா ரவியை பிடித்து வைத்து உங்களுக்குள் என்னடா பிரச்சனை என்று கேட்க எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லையே என்று ரவியும் சொல்லிவிடுகிறார். பிறகு விஜயா முன்பு ஸ்ருதிக்கு முத்தம் கொடுத்துவிட்டு நான் ஈவினிங் உன்னை கூப்பிட வருகிறேன் என்று கிளம்பி போகிறார்.

இதை பார்த்து விஜயா மிரண்டு போய் நிற்கிறார். பிறகு அண்ணாமலையிடம் என்னங்க இவங்க எல்லாம் என்று கேட்க அதற்கு அண்ணாமலை நான் தான் சொன்னேனே... சின்ன பசங்க சண்டை அதுக்குள்ள நீ தலையிடாதே என்று சொன்னேன் நீ கேட்டியா என்று கவுண்டர் கொடுக்கிறார். அடுத்ததாக முத்துவும் மீனாவும் ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும்போது மீனா அங்க கொஞ்சம் ஆட்டோவை நிறுத்துங்கள் என்று சொல்ல அதற்கு முத்து என்ன அங்கு பிரியாணி கடை இருக்கா சாப்பிட போறியா என்று கேட்க,

Siragadikka aasai march 8th Episode and promo full update

இல்லை சீதாவை கூட்டிட்டு போகணும் என்று மீனா சொல்ல பிறகு சீதாவும் ஆட்டோவில் ஏறுகிறார். சீதாவும் வந்துவிட்டதால் ஆட்டோவில் இடம் இல்லாமல் டிரைவர் சீட்டில் மீனா உட்கார்ந்து இருக்க முத்து வண்டி ஓட்ட முடியாமல் திணறுகிறார். பிறகு மீனாவும் முத்துவும் சமாதானம் ஆகி விடுகின்றனர். அடுத்த கட்டத்தில் மனோஜ் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருக்கும்போது அவருக்கு கடன் கொடுத்த பார்க் நண்பர் சந்தோஷ் அவரைப் பார்த்து கூப்பிட மனோஜ் அவரிடம் இருந்து தப்பித்து ஓடி வருகிறார்.

ஆனால் சந்தோஷ் துரத்தி வந்து மனோஜை பிடித்து விடுகிறார். அதற்கு மனோஜ் நான் உனக்கு நாளைக்கு பணத்தை தந்து விடுகிறேன் என்று சொல்ல அதற்கு அவர் நீ பணத்தை தர வேண்டாம். ஏற்கனவே ரோகிணி பணம் தந்துட்டாங்க என்று சொல்கிறார். மறுபக்கத்தில் வீட்டில் மீனா மாலை கட்ட வர சொன்னவங்க எல்லோரும் வந்திருக்கிறார்கள். அவர்களை பார்த்ததும் விஜயா யார் இவங்க என்று கேட்க அதற்கு மீனா வேலைக்கு வர சொன்னாங்க என்று அவங்க சொல்ல, அதற்கு விஜயா அவளே ஒரு வேலைக்காரி அவ சொன்னா நீங்களும் வந்திருக்கீங்களா என்று கேட்கிறார் .

அதற்கு வந்திருப்பவர்கள் விஜயாவை மீனாவை பத்தி நீங்க எப்படி இப்படி எல்லாம் பேசலாம் என்று மிரட்டுகின்றனர். பிறகு முத்துவும் மீனாவும் வீட்டிற்கு வந்து பூ எல்லாவற்றையும் இறக்கி வைக்க அண்ணாமலை இங்கே வா பூ கட்ட போறீங்க என்று கேட்கிறார். அதற்கு விஜயா நல்லா கேளுங்க இப்படி வழியை மறைச்சிட்டு இருந்தா எப்படி வரது போறது என்று கேட்க அதற்கு அண்ணாமலை அதுவும் சரிதான் என்று சோபாவை நகர்த்திட்டா பெருசா இடம் இருக்க வேண்டும் என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகின்றனர்.

Siragadikka aasai march 8th Episode and promo full update

பிறகு எல்லா பூக்களையும் மீனா மேலே எடுத்துக் கொண்டு வந்ததும் விஜயா எதுக்கு இவ்வளவு பூ என்று கேட்க, அதற்கு மனோஜ் ஏதோ பெரிய ஆர்டர் வந்து இருக்காம்... ரெண்டுநாள் ஆர்டராம் மொத்தமா இரண்டரை லட்சம் கிடைக்குமாம் என்று சொல்ல விஜயா ஷாக் ஆகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+