சிறகடிக்க ஆசை: விஜயா பற்றிய ரகசியத்தை உடைத்த பார்வதி.. சிக்கும் ரோகிணி! முத்து கண்டுபிடித்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விஜயா பற்றிய உண்மைகளை பார்வதி முத்துவிடம் சொல்லி விடுகிறார். இதைக் கேட்டு அண்ணாமலை கோபப்படுகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மற்றும் மீனாவிற்கு தான் பிரச்சனை மேல பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. கடந்த வாரத்தில் சத்யா மீது விஜயா கொடுத்த கேஸை வாபஸ் வாங்க வைப்பதற்காக படாத பாடுபட்டார்கள். பிறகு ஒரு வழியாக 5 லட்சம் ரெடி செய்து வக்கீலிடம் கொடுத்து இருந்தனர்.

television siragadikka aasai serial vijay tv

அப்போது விஜயா வக்கீலிடம் 2 லட்சம் கொடுத்ததால் கேஸை வாபஸ் வாங்குகிறேன் என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு கேஸை வாபஸ் வாங்கி இருந்தார். ஆனால் இந்த விஷயத்தை வீட்டிற்கு தெரியாமல் மறைத்திருந்தார். வீட்டில் அண்ணாமலை வந்து கூப்பிட்டதால் வந்தேன் என்று சீன் போட்டு இருந்தார்.

television siragadikka aasai serial vijay tv

ஆனால் இதை நம்பாத ரோகிணி பார்வதியிடம் நைசாக பேசி உண்மைகளை தெரிந்து கொண்டார். பிறகு சிட்டி தன்னை மிரட்டியதால் 2 லட்சம் பணம் வேண்டும் என்று பார்வதி வீட்டில் இருந்த பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து சிட்டியிடம் கொடுத்தும் விட்டார்.( இந்த சீரியலில் இயக்குனர் எங்கேயோ இரண்டு லட்சம் பிரச்சனையை சிக்கி இருக்கிறார் போல. சில வாரங்களாக இரண்டு லட்சம் கணக்கு தான் வந்து கொண்டிருக்கிறது.)

ரோகிணி விஜயாவிடம் இருந்து ரெண்டு லட்சத்தை எடுத்திருந்தார். அதை தொடர்ந்து விளம்பரத்தில் மனோஜ் குடும்பத்தை நடிக்க வைக்க வேண்டும் என்று அவருடைய பார்ட்னர் சந்தோஷி 2 லட்சம் கொடுத்திருந்தார். அதை குடும்பத்திற்கு கொடுக்காமல் மனோஜ் ஏமாற்ற பார்த்தார். பிறகு உண்மை தெரிந்து எல்லோருக்கும் பணத்தை பங்கிட்டு கொடுத்திருந்தார்.

இந்த பிரச்சனை தொடர்ந்து இப்போது பார்வதி வீட்டில் இருந்து காணாமல் போன பணத்தை திருடியது மீனாதான் என்று விஜயா வீட்டில் நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார். பார்வதி வீட்டில் இருந்து காணாமல் போன பணத்துக்கு முத்துவும் மீனாவும் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் இவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு பணத்தை தரவில்லை என்றால் நான் எப்படி பார்வதி மூஞ்சியில் முழிப்பேன்? 30 வருஷம் நட்பை கேவலப்படுத்திட்டாங்க என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்.

television siragadikka aasai serial vijay tv

இந்த நிலையில் வரும் நாட்களுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து பார்வதி வீட்டிற்கு சென்று உங்கள் வீட்டில் இருந்த இரண்டு லட்சம் பணத்தை மீனாதான் திருடி இருப்பாளா? என்று கேட்க, அதற்கு பார்வதி அது என்னுடைய பண அல்ல. மீனா தம்பி சத்யா மேல கொடுத்த கேஸை வாபஸ் வாங்குவதற்கு இரண்டு லட்சம் பணம் தந்தாங்க என்று சொல்லி விடுகிறார்.

அதைக் கேட்டு கோபத்தில் வீட்டிற்கு வந்த முத்து அண்ணாமலையிடம் சத்யா மேல கொடுத்த கேஸை வாபஸ் வாங்குவதற்காக தான் வக்கீல் கிட்ட ரெண்டு லட்சம் பணம் வாங்கி இருக்காங்க. அந்த ரெண்டு லட்சம் தான் பார்வதி அத்தை வீட்டில் இருந்து காணாமல் போய் இருக்கு என்று சொல்ல, விஜயாவிடம் அண்ணாமலை உன்னால மீனாவுக்கும் முத்துக்குவுக்கும் 5 லட்சம் கடன் ஆகிருக்கு நீ தான் அந்த அஞ்சு லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்கணும் என்று சொல்ல விஜயா அதிர்ச்சியில் நிற்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

இந்த பிரச்சனையை பார்த்து நாம எங்க மாட்டி விடுவோமோ என்று ரோகிணியும் அதிர்ச்சியில் இருக்கிறார். இதுவரைக்கும் ரோகிணி மாட்டாமலேயே இந்த கதை பயணித்துக் கொண்டிருப்பது போல இந்த முறையும் ரோகிணி மாட்ட மாட்டார் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+