சிறகடிக்க ஆசை: மொத்த பழியும் விஜயா மீது விழுந்தது! செம கேடி ரோகிணி! அண்ணாமலை தான் வில்லனா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி முப்பது லட்சம் விசயத்தில் வீட்டில் மாட்டியதால் மொத்த பழியையும் விஜயா மீது திருப்புகிறார். என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ரோகிணி விஜயா குடும்பத்திடம் சிக்கி இருக்கிறார். ரோகிணி ஆரம்பத்தில் இருந்தே பொய் மேல் பொய் சொல்லி நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த சீரியலில் எப்போதும் முத்து மற்றும் மீனாவிற்கு மட்டும்தான் பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். இதனால் ரசிகர்கள் ரோகிணி மாட்டுவாரா? இல்லையா? அவர் எப்போதுதான் மாட்டுவார் என்பது பற்றி கேள்வி எழுப்பி வந்தனர்.

television siragadikka aasai serial vijay tv

இப்போது ரசிகர்கள் எதிர்பார்த்த தருணம் வந்திருக்கிறது. ஆனாலும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஏற்கனவே 30 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து பெரிய பேலஸ் வாங்க போகிறோம் என்று ரோகிணி மற்றும் மனோஜ் செய்த அலப்பறைகளுக்கு கடைசியில் பெரிய ஏமாற்றம் கிடைத்திருக்கிறது.

30 லட்சம் ஏமாந்து போயிருக்கும் மனோஜை பார்த்து அண்ணாமலையும் பரிதாபப்படுகிறார். அதே நேரத்தில் மனோஜிடம் இருந்து 27 லட்சம் பணத்தை தூக்கிக்கொண்டு ஓடியது ஜீவா தான் என்ற உண்மை முத்துவிற்கு தெரிய வந்ததால் ஜீவாவிடம் முத்து பிரச்சனை செய்யும் போது ஜீவா நான் 27 லட்சம் ரூபாய்க்கு வட்டியோடு சேர்த்து 30 லட்சம் ஆக சில மாதங்களுக்கு முன்பே உன்னுடைய அண்ணனிடம் கொடுத்து விட்டேன்.

உன் அண்ணன் பெரிய ஏமாற்றுக்காரன் என்றால் அவனுடைய மனைவி அதைவிட பெரிய கேடியா இருக்கா என்று ரகசியத்தை உடைத்ததும் முத்து ஜீவாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து எல்லா உண்மைகளையும் வீட்டிற்கு தெரிய வைத்திருக்கிறார். இதனால் விஜயா கடும் கோபத்தில் இருக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

பணம் விஷயத்தை பற்றி என்னிடம் சொல்லவே இல்லையே என்று ரோகிணி மனோஜின் சட்டையை பிடித்து விஜயா அடிக்க மனோஜ் நான் பணம் கையில் கிடைத்ததுமே இதை வீட்டில் சொல்லலாம் என்று சொன்னேன். ஆனால் ரோகிணி தான் இதை வீட்டில் கொடுக்க வேண்டாம் இதை வைத்து நாம பிசினஸ் செய்யலாம் என்று எனக்கு பிளான் போட்டு தந்தது என்று சொன்னதும் விஜயா ரோகிணி பக்கம் கோபத்தை திருப்புகிறார்.

எப்படி என்கிட்டயே உண்மையை மறைச்சா என்று ரோகிணியை அடித்ததும். நான் மட்டும் அந்த பணத்தை வைத்து பிசினஸ் தொடங்கணும் என்று யோசிக்காமல் இருந்திருந்தால் மனோஜ் வேலைக்கே போகாமல் பார்க்கில் தான் போய் படுத்து இருப்பாரு என்று சொன்னதும், விஜயா நீ பணத்தை எடுத்துட்டு வந்து என்கிட்ட கொடுத்து இருந்தா நாங்க அதை அவனுக்கு பண்ணி இருக்க மாட்டோமா என்று கேட்கிறார்.

அதற்கு ரோகிணி நீங்க இதுவரைக்கும் எதுவுமே பண்ணலையே என்று சொன்னதும் விஜயாவுக்கு செம கோபம் வருகிறது. இதுவரைக்கும் மனோஜ்க்காக விஜயா எத்தனையோ விஷயம் செய்து பலமுறை வீட்டில் அவமானப்பட்டு இருக்கிறார். இதனால் ரோகிணி சொன்ன விஷயம் விஜயாவை செமையாக கோபப்படுத்த, உடனே பளாரென மீண்டும் ரோகிணியை அடித்து ஃமனோஜ்க்கு அம்மாவா எதுவும் பண்ணலையா என்று திட்டுகிறார்.

இப்படியாக ப்ரோமோ முடிவடைகிறது. அதே நேரத்தில் இத்தனை சம்பவம் நடந்தாலும் அண்ணாமலை எதுவும் பேசாமல் இருக்கிறார். இதை பார்க்கும் போது ரோகிணி கேட்ட கேள்வியால் அண்ணாமலை மனோஜ் ஏதோ தெரியாமல் செஞ்சுட்டான் அவனுக்கு தான் புத்தி இல்ல இப்ப வந்த அவனுடைய மனைவியும் இதுபோலவே பண்ணிடுச்சு என்று வழக்கம்போல இரண்டு திட்டு திட்டி விட்டு அமைதியாக போய்விடுவார் என்று தான் தெரிகிறது.

இன்றைய எபிசோடில் கூட ஜீவா வீட்டிற்கு வந்து மொத்த உண்மைகளும் உடைபட்டபோது அண்ணாமலை பெரியதாக மனோஜிடம் கோபத்தை காட்டவில்லை. இதே தப்பை முத்து செய்து இருந்தால் என்னிடம் பேசாதே இந்த வீட்டை விட்டு வெளியே போ என்று ஏதாவது அண்ணாமலை சீன் கிரியேட் பண்ணி இருப்பார். அதனால் இந்த சீரியலில் ரோகிணி வில்லியா அல்லது அண்ணாமலை வில்லனா என்பதுதான் எல்லோருக்கும் சந்தேகமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+