சிறகடிக்க ஆசை: கிரிஷ்காக ரோகிணி எடுத்த உருப்படியான முடிவு! காலில் விழுந்து கெஞ்சிய முத்து! வித்யா கேட்ட கேள்வி!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல், ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்காகப் போராடும் ஒரு தந்தையின் தவிப்பை உணர்வுபூர்வமாகக் காட்டியுள்ளது. கிரிஷ் செய்த தவறு, அவனைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பும் அளவுக்குச் சென்றுவிட, முத்துவும் மீனாவும் அவனைப் பாதுகாக்கப் போராடுகிறார்கள்.

முத்துவின் போராட்டம்
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கிரிஷை கைது செய்வதற்காக போலீஸ் வந்த விஷயத்தைப் பற்றி ரோகிணிக்கு போன் செய்து சொல்கிறார். அந்த நேரத்தில் முத்து மற்றும் மீனாவும் கிரிஷை கூட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு வருகின்றனர். அப்போது கிரிஷை கைது செய்யப் போலீஸ் பள்ளிக்கு வந்த தகவல் அறிந்து, முத்துவும் மீனாவும் அதிர்ச்சி அடைகிறார்கள். போலீஸிடம் முத்து கெஞ்சிப் பார்க்கிறார். "அவன் சிறு வயசு பையன் சார், தெரியாமல் செஞ்சுட்டான். ஸ்கூல் பசங்க சண்டை போடுறது சகஜம் தானே?" என்று கேட்கிறார். போலீஸும், அந்த மாணவனின் அப்பா பெரிய இடம் என்பதால், தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிடுகிறது.
ஆனால், முத்துவின் மனசாட்சி அவனை விடவில்லை. "ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் சார், நான் அந்தப் பையனோட அப்பாகிட்ட பேசிப் பார்க்கிறேன்" என்று கேட்கிறார். போலீஸும் ஒரு நாள் அவகாசம் கொடுக்கிறது.
ரோகிணியின் கவலை
மறுபுறம், ரோகிணி தன் மகனுக்காக வருத்தப்படுகிறார். வழக்கறிஞர் ஒருவரைச் சந்தித்து, இந்த வழக்கைப் பற்றிப் பேசுகிறார். "இந்த வழக்கு கோர்ட்டுக்கு போனா, கிரிஷை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிடுவார்கள்" என்று வழக்கறிஞர் சொல்ல, ரோகிணி கண்கலங்கி அழுகிறார். "நான் அவனுக்கு இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்துட்டேன். அவனுக்கு இந்தத் தண்டனையை வாங்கிக் கொடுக்க மாட்டேன்" என்று சபதம் போடுகிறார்.
ஆனால், ரோகிணியின் ஈகோ விடவில்லை. அஜய்யின் அப்பாவிடம் பேசிச் சமாதானம் செய்ய சொல்லி தன்னுடைய தோழியிடம் சொல்ல, அதற்கு வித்யா, "அவன் எதுக்கு பேசணும்? அது உன் பையன், நீதான் பேசணும். நீ பேசி மனசை மாற்ற முடியவில்லை என்றால், முத்துவும் மீனாவும் பார்த்துக்கொள்வார்கள்" என்று வித்யா சொல்கிறார். "அவர்களைப் பாராட்டிப் பேசினால் உன் வாயை மூடிக்கொள்" என்று ரோகிணி கோபப்படுகிறார். ரோகிணி மனம் வருந்தினாலும், அவளுடைய ஈகோவே அவளுடைய நல்லெண்ணத்திற்குத் தடையாக இருக்கிறது.
காலில் விழுந்து கெஞ்சும் முத்து
மகேஸ்வரியின் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் கிரிஷைப் பார்த்த மீனா, வருத்தப்பட்டு அமர்ந்திருக்கிறார். கார் ஷெட்டில் அமர்ந்திருக்கும் முத்துவிடம் செல்வம், "எதுவும் நடக்காது" என்று ஆறுதல் சொல்ல, முத்து மனம் கலங்கி, "என் வாழ்க்கையில் நடந்த கஷ்டம் கிரிஷுக்கு நடக்கக் கூடாது" என்று வருத்தப்படுகிறார்.
கடைசியாக, முத்துவும் மீனாவும் அந்த மாணவனின் அப்பாவைச் சந்தித்துப் பேசச் செல்கிறார்கள். எவ்வளவு கெஞ்சியும், அவர் தன் முடிவிலிருந்து மாறவில்லை. "தப்பு செஞ்சவன் தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும்" என்று முகத்தில் அடித்தது போல் கதவைச் சாத்திவிட்டுச் சென்றுவிடுகிறார். ஆனாலும், ஒரு முடிவு காணாமல் அங்கிருந்து செல்வதில்லை என்று முத்துவும் மீனாவும் அங்கேயே காத்திருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications