சிறகடிக்க ஆசை: திருந்தாத அருணுக்கு சீதா கொடுத்த பதிலடி! இது எதிர்பார்க்காத டுவிஸ்ட்! அதிர்ச்சியில் மீனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டி.வி-யின் 'சிறகடிக்க ஆசை' சீரியல்ல இப்போ ஒரே பாசப் போராட்டமும், குடும்பச் சண்டையும்தான் போய்க்கிட்டு இருக்கு! ஒரு பக்கம், மீனாவுடைய அம்மா பூக்கடையை மீட்டுத் தந்த முத்துவின் ரகசியம் வெளியாகி, இன்னொரு பக்கம், தன் அண்ணனின் உதவியை 'சுட்டு' பில்டப் கொடுத்த அருண், தன் மனைவி சீதாவின் கோபத்துக்கு ஆளாகிவிட்டார்!

Siragadikka aasai serial vijay tv

அம்பலமான அருணின் நாடகம்

மீனாவின் அம்மா பூக்கடையை சிந்தாமணி ஆட்கள் தூக்கியபோது, முத்து தான் அதிரடியா களத்தில் இறங்கினார். போலீஸ் கமிஷனரின் உதவியோடு, லஞ்சம் வாங்கிய அதிகாரியைப் பிடித்து, மீனாவின் அம்மா மீது எந்தத் தவறும் இல்லைன்னு நிரூபிச்சு, மீண்டும் அதே இடத்தில் பூக்கடை வைக்க உதவி செய்தார்.

ஆனா, இதெல்லாம் செய்தது அருண் தான் என்று நினைத்த மீனாவின் அம்மா, அவருக்கு நன்றி சொல்ல, அவரும் ஒரு வார்த்தைகூட மறுக்காமல், தான் செய்ததைப் போலவே பில்டப் கொடுத்து வேடிக்கை பார்த்தார்!

கமிஷனர் மனைவி வைத்த குண்டு

இந்த நிலையில், ஸ்ருதியின் ஹோட்டல் திறப்பு விழாவுக்குக் கமிஷனரின் மனைவி வந்திருந்தார். அவர் மீனாவிடம், "முத்து தான் உன்னுடைய அம்மா கடையை மீட்டுத் கொடுத்ததாக சொல்லியபோது, பக்கத்திலிருந்த சீதாவும் கேட்டுவிட்டார்! அப்போதுதான், அருண் தன் முத்துவின் உதவியைத் தனதாக்கிக் கொண்ட உண்மை சீதாவுக்குத் தெரிந்தது!

பின்னாடி, மீனாவின் அம்மா முத்துவுக்கு நன்றி சொன்ன போதும், சீதாவால் அந்த உண்மையை ஜீரணிக்க முடியவில்லை.

உச்சக்கட்ட மோதல்

வீட்டுக்கு வந்த அருணிடம் கோபத்துடன் கேள்வி கேட்டார் சீதா. "என்கிட்ட ஏன் பொய் சொன்னீங்க? என்னோட அம்மாவோட கடை நீங்க சொல்லி தான் திரும்ப வந்துச்சா?" என்று கேட்கிறார். அருணும் ஒரு தயக்கமும் இல்லாமல், "ஆமாம்" என்று சொல்லித் தப்பிக்கப் பார்த்தார்!

"நான் கமிஷனரிடம் லெட்டர் கொடுத்ததால் தான் கடை திரும்ப வந்தது" என்று அருண் சொல்ல, சீதா நடந்த உண்மையைச் சொன்னார். உண்மை அம்பலமானதும், கோபத்தின் உச்சியில் இருந்த அருண், முத்து மேல் இருந்த வன்மத்தை எல்லாம் கொட்ட ஆரம்பித்துவிட்டார்! "நானும் முயற்சி செய்தேன், உங்க மாமாவும் முயற்சி பண்ணியிருக்காரு. இப்போ நான் என்ன சொல்லணும்? அந்த முத்து சொல்லி தான் உங்க அம்மா கடைய வச்சாங்கனு சொல்லனுமா?" என்று காட்டமாகக் கேட்டார்.

சீதா இதைக் கேட்டுப் பொறுமையாக, "ஒருத்தருடைய வேலையை இழிவாகப் பேசாதீங்க" என்று சொல்ல, அருணின் பேச்சு வரம்பு மீறிப் போனது! "அவன் ஒரு ரௌடி! அவனோடு என்ன ஒப்பிட்டுப் பேசாதே! அவனெல்லாம் என்னோட ஷூவில் உள்ள தூசிக்குச் சமம்! எனக்குப் பிடிக்காதவங்க கூட நீயும் பேசக்கூடாது" என்று அருண் எல்லை மீறிப் பேசினார்.

Siragadikka aasai serial vijay tv

கோபித்து அம்மா வீடு போன சீதா

கணவரின் இந்த மோசமான பேச்சால் டென்ஷன் ஆன சீதா, பொறுக்க முடியாமல் கோபித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி, தன் அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னால் அங்கு வந்த மீனா, சீதாவைச் சமாதானப்படுத்தி, "எவ்வளவு கோபமா இருந்தாலும் இப்படியா வருவது?" என்று அறிவுரை சொல்லிப் பேசுகிறார்.

மாமா முத்துவின் பாசமும், அவர் செய்த உதவியும் தெரியவந்த பிறகும், கணவன் அருணின் ஆணவம் சீதாவுக்குப் பிடிக்கவில்லை. இந்த அண்ணன் - தம்பி சண்டையில், சீதாவின் இந்த முடிவு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்!

சீதாவின் இந்த திடீர் முடிவு, அருண் திருந்துவதற்கு ஒரு பாடமாக அமையுமா? அல்லது குடும்பச் சண்டையை மேலும் கூட்டுமா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+