சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு வில்லியான விஜயா.. கடைசியில் இப்படி சிக்கிட்டாரே! ரோகிணியின் மாஸ்டர் பிளான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial today episode) 2026 பிப்ரவரி 12ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜை ரோகிணிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்பதற்காக விஜயா சிந்தாமணியிடம் வசமாக சிக்குகிறார். ஏற்கனவே சிந்தாமணி விஜயா குடும்பத்திற்கு எதிராக பிளான் செய்து கொண்டிருக்கிறார் ஆனால் அது தெரியாத விஜயாவும், மனோஜும் சிந்தாமணியின் சூழ்ச்சியில் சிக்கி இருக்கிறார்கள்.
சிறகடிக்க ஆசை சீரியலில் எப்படியாவது டைவர்ஸ் கழித்து விடும் என்று மனோஜ் குடும்பத்தினர் எல்லோருமே நினைத்திருந்த நேரத்தில், ரோகினிக்கு எதிராக கொண்டு வந்த இரண்டு சாட்சிகளையும் ரோகிணி மனோஜ்க்கு எதிராகவே திருப்பி விட்டுவிட்டார். இதனால் நீதிமன்றத்தில் இந்த சாட்சி செல்லாது என்று சொல்லி இருக்கின்றனர். இதனால் மனோஜ் இனி ரோகிணி ஷோரூமுக்குள் வரவே கூடாது என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் ரோகிணி இப்போது மீண்டும் ஷோரூம்க்கு வந்திருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் (Siragadikka Aasai serial 12, Feb 2026) வாசலில் தன்னை தடுத்து நிறுத்திய சந்தோஷ் மற்றும் ஜீவாவை மீறி ரோகிணி ஷோரூமுக்குள் போக, அதைப் பார்த்த மனோஜ் இனி நீ இங்கு வரக்கூடாது என்று திட்டுகிறார். அதற்கு ரோகிணி நான் இங்கே வரலனா நீ எப்படி கடனை கொடுப்பா என்று கேட்க, நான் வாங்குன கடனை எல்லாம் நானே அடிக்கிறேன் என்று மனோஜ் சொல்கிறார்.
சந்தோஷப்படும் ரோகிணி
ஆனாலும் ரோகிணி உன்னை என்கிட்ட இருந்து யாராலும் பிரிக்க முடியாது, நான் உன்ன யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல, மனோஜ் ரோகிணியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப் போகிறார். ஆனால் ரோகிணியின் ரியாக்ஷனை பார்த்து மனோஜ் ஒரு நிமிடம் சபலப்படுகிறார். இதையே ரோகிணி தனக்கு சாதகம் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து போகிறார்.
பார்வதிக்கு பாராட்டு
அதைத் தொடர்ந்து பார்வதி வீட்டிற்கு விஜயா போக அந்த நேரத்தில் மீனாவும் அங்கே இருக்கிறார். மீனாவை பார்த்ததும் பார்வதி நீ இந்த வீட்டுக்கு பூ போட வந்த பிறகுதான் எனக்கு வீட்டில் நல்லதே நடந்துட்டு இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது பார்வதியை பாராட்டி விருது கொடுப்பதற்காக மீடியாவில் இருந்து வந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இதை எல்லாம் பார்த்த விஜயா கடுப்பாகி இவ என்ன சாதனை செஞ்சுட்டான்னு இப்போ இவளுக்கு விருந்து கொடுக்குறீங்க என்று கேட்கிறார். அதற்கு மீனா பார்வதி ஆன்ட்டி பல பேருக்கு கதை சொல்லி நல்ல புத்தி கொடுக்குறாங்க இதுவும் பெரிய சாதனை தான். எனக்கும் இதுபோல சாதனை பண்ணி விருது வாங்கணும்னு ஆசையா இருக்கு என்று சொல்ல, ஆமா பூ கட்டுற விக்கிறவங்களுக்கு யாரும் விருது கொடுக்க மாட்டாங்க, அப்படி கொடுத்தா கோவில் வாசலில் பூக்கட்டுற எல்லாத்துக்கும் கொடுக்க வேண்டியதுதான் என்று அலட்சியப்படுத்தி பேசுகிறார்.
குப்பையில் கிடைத்த தங்கம்
விஜயா அசிங்கப்படுத்தி பேசுவது வழக்கமா நடந்தாலும் மீனாவும் எப்போதும் போல இப்போதும் நான் கண்டிப்பாக ஒருநாள் விருது வாங்குவேன் என்று சபதம் போடுகிறார். அப்போது மீடியாவில் இருந்து வந்தவர்கள் சாதாரணமானவர்களும் சாதித்தால் கண்டிப்பாக விருந்து கிடைக்கும், சமீபத்தில் கூட குப்பையில் கிடந்த 45 பவுன் நகையை ஒரு துப்புரவு பணியாளர் உரியவரிடம் ஒப்படைத்தார் அவருடைய நேர்மையை எல்லாரும் பாராட்டி விருது கொடுத்துட்டு இருக்காங்க அதுபோல நேர்மையாக உழைக்கணும் என்று விஜயாவுக்கு பதிலடி கொடுத்துவிட்டு போகின்றனர்.
கடன் வாங்கும் விஜயா
அதைத் தொடர்ந்து சிந்தாமணி இடம் விஜயா தனக்கு 7 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்க முதலில் சிந்தாமணி அதிர்ச்சி அடைகிறார் பிறகு உங்களுக்கு கடன் கொடுத்த பைனான்ஸ்ரியரிடம் இருந்து அதை வாங்கலாம் ஆனால் நீங்க உங்க வீட்டு பத்திரத்தை கண்டிப்பா கொடுத்து ஆகணும் என்று சொல்ல, அந்த பத்திரம் பேங்கில் இருக்கு என் பையன் கையெழுத்து போடுறேன்னு சொன்னான் அது தப்பு இல்லையா என்று விஜயா கேட்கிறார்.
அதற்கு சிந்தாமணி, தப்புதான் ஆனால் வேற வழி இல்ல, நீங்க பத்திரத்தை கொடுத்தாதான் முடியும் என்று சொன்னதும் சரி என்று விஜயா சொல்லிவிடுகிறார். பிறகு இந்த விஷயத்தை பற்றி மனோஜிடம் விஜயா சொல்கிறார். மனோஜ் பிரச்சனை இல்லம்மா நாம அப்பா கையெழுத்தை போட்டு பத்திரத்தை வாங்கி பைனான்ஸியரிடம் கொடுத்து விடலாம் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை
இனி விஜயாவுக்கு பிரச்சனை வரப்போகிறது ஏற்கனவே குடும்பத்திற்கு தெரியாமல் விஜயா செய்யும் ஒவ்வொரு பிரச்சனைகளும் பூதாகரமாக வெடிக்கும். அதேபோல இப்போது சிந்தாமணியிடம் சிக்கினால் தான் விஜயாவிற்கு புத்தி வரும். ஒவ்வொரு முறையும் விஜயாவை முத்து தான் காப்பாற்றுவார், அப்போது மட்டும் பாவம் போல ஒரு ரியாக்ஷனை விஜயா கொடுப்பார். கடைசியில் முத்துவை மீண்டும் கரித்து கொட்டுவார். ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications