சிறகடிக்க ஆசை: மனோஜின் பேச்சால் உடைந்த முத்து! விளாசிய அண்ணாமலை- விஜயா சுயரூபம் தெரிந்தது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: (Siragadikka Aasai serial today Episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், ரசிகர்களை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது. கிரிஷைக் காப்பாற்ற முத்துவும் மீனாவும் மேற்கொண்ட போராட்டமும், அதன் விளைவாக மனோஜ் பேசிய வார்த்தைகளால் முத்து அனுபவித்த மன வேதனையும், கதையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன.

Siragadikka aasai serial vijay tv

கிரிஷ்க்காக போராட்டம்

கிரிஷ்ஷின் எதிர்காலத்துக்காக, முத்துவும் மீனாவும் புகார் அளித்தவரின் வீட்டிற்குச் சென்று, நாள் முழுவதும் வாசலிலேயே காத்திருந்தனர். அவர்களின் பொறுமையைக் கண்ட அந்தப் பையனின் அப்பா, முத்துவை வீட்டிற்குள் அழைத்து, "நான் நாளைக்கு கிரிஷுக்கு ஒரு டெஸ்ட் வைப்பேன். அதில் அவன் வேண்டும் என்றே செய்தானா அல்லது தெரியாமல் செய்தானா என்று தெரிந்துவிடும். பிறகு இந்த வழக்கை வாபஸ் வாங்குவதைப் பற்றிப் பேசலாம்" என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

முத்துவும் மீனாவும் வீட்டிற்கு வந்ததும், மகேஸ்வரி அவர்களை அலட்சியமாக நடத்தினார். ஆனாலும், முத்து அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல், கிரிஷ்ஷை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்கிறார். ரோகிணி, கிரிஷ்ஷை அவர்களுடன் அனுப்பாமல் தடுக்க முயல்கிறார். ஆனால், கிரிஷ், "நான் மீனா ஆன்டி கூடத்தான் போவேன்" என்று உறுதியாகச் சொல்லி, ரோகிணிக்கு அதிர்ச்சி அளிக்கிறார். முத்து கிளம்பியதும், மகேஸ்வரி வந்து கதவைச் சாத்த, மீனா கடும் கோபத்திற்கு ஆளாகிறார்.

மனோஜின் விஷ வார்த்தை

முத்துவும், மீனாவும் கிரிஷ்ஷை வீட்டுக்கு அழைத்து வந்த சிறிது நேரத்தில், மனோஜ் ஒரு போர்டிங் ஸ்கூல் மேலாளர் தன்னுடைய கடைக்கு வந்த விஷயத்தை பற்றி ரோகினி இடம் சொல்கிறார் அதோடு கடையில் நடந்த சில சம்பவங்களையும் குடும்பத்தினர் அனைவரையும் கூப்பிட்டு சொல்கிறார். கிரிஷ்ஷின் புகைப்படத்தைக் காட்டி, "இந்த பையன் ஒரு மாணவனை அடித்ததாகவும், அதனால் இவனைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பவிருப்பதாகவும்" கூறுகிறார். உடனே, விஜயா வழக்கம் போல, "விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என்று கிரிஷ்ஷை பற்றி திட்டிக் கொண்டிருக்கிறார்.

அப்போது, மனோஜ், "இவன் இவங்க கூட இருக்கான். அதான் இவனும் கோபப்பட்டு ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கான். இவனும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குப் போனவன் தானே?" என்று முத்துவைச் சுட்டிக்காட்டி பேசுகிறார். இதைக் கேட்ட முத்துவின் முகம் கோபத்தால் சிவக்க, அவர் மனோஜின் சட்டையைப் பிடித்து, "நான் ரவுடியா?" என்று ஆத்திரத்துடன் முறைக்கிறார். குடும்பத்தினர் ஓடிவந்து அவர்களை விலக்கிவிடுகிறார்கள். அப்போது, அண்ணாமலை கோபத்தின் உச்சிக்குச் சென்று, மனோஜின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிடுகிறார்.

மீனாவிடம் உடைந்து போன முத்து

மனோஜின் வார்த்தைகளால் முத்துவின் மனம் உடைந்துவிடுகிறது. அண்ணாமலையின் கோபத்தையும், மனோஜின் அலட்சியத்தையும் பார்க்க முடியாமல், முத்து மொட்டை மாடிக்குச் சென்றுவிடுகிறார். முத்துவின் மனவேதனையைப் புரிந்துகொண்ட மீனா, அவரிடம் சென்று, "உங்களுடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. ஒரு பெற்ற அம்மாவுக்கு மகன் மீது பாசம் இல்லாமல் போகுமா? உங்களுடைய சின்ன வயதில் என்ன நடந்தது?" என்று கேட்கிறார்.

இந்தக் கேள்வி, பல வருடங்களாக முத்துவின் மனதிற்குள் இருந்த வலியைத் தொட்டுள்ளது. முத்துவின் கடந்த கால சோகம் என்ன? விஜயா ஏன் முத்துவை வெறுக்கிறார்? இந்த கேள்விகளுக்கு விடை அளிப்பதாக அடுத்து வரவிருக்கும் எபிசோட் இருக்கும் என்பதால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+