சிறகடிக்க ஆசை: ரோகிணி உண்மையை மறைத்த மீனா! ஆனால் போட்டு கொடுத்த சாமியார்! அதிர்ச்சியில் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் ரோகிணியோட உண்மைக் கதை என்னன்னு தெரிஞ்சுக்கிறதுக்காகக் கடந்த சில வாரமா பரபரப்பாகக் காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த வாரம் பெரிய அதிர்ச்சி தான்! ஒருவழியா பல நாளா தேடிக்கிட்டு இருந்த உண்மை மீனாவுக்குத் தெரிஞ்சிருச்சு. ஆனா, அவங்க அதைச் சொன்னாங்களான்னுப் பார்த்தா... வழக்கம் போல இல்ல! என்ன நடந்தது என்று பார்க்கலாம் வாங்க!

மண்டியிட்ட ரோகிணி
முத்துவின் பாட்டி ஊருக்கு தீபாவளி கொண்டாட குடும்பமேப் போயிருக்கு. அங்கக் குளக்கரையில, ரோகிணி தன்னோடத் அப்பாவுக்கு திதி கொடுத்துட்டு இருக்கிறதைக் கையும் களவுமா மீனா பார்த்துட்டாங்க. ரோகிணி தான் கல்யாணி, அவதான் கிரிஷோட அம்மாங்கிற நீண்ட நாள் ரகசியம் மீனாவுக்குத் தெரிஞ்சு போச்சு.
உடனே மீனா "நீ மட்டும் நல்லா இருந்தா போதும்னு யாரை வேணுமானாலும் ஏமாத்தலாம்னு நினைச்சு பாத்தியா, அதுக்காகவே உன்னைப் பத்தி வீட்ல சொல்லத் தான்டி போறேன்!"ன்னுச் சொல்லிட்டு, மீனா வேகமா வீட்டுக்குக் கிளம்புறாங்க. உடனே ரோகிணி, மீனாவோட கால்கள்ல விழுந்து மன்னிப்பு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. "ப்ளீஸ் மீனா, என் வாழ்க்கை, உயிர் எல்லாமே உங்க கையில தான் இருக்கு. நான் செஞ்சது எல்லாமேத் தப்பு தான். தயவு செஞ்சு இதையெல்லாம் யார்கிட்டயும் சொல்லிடாத மீனா!"ன்னு கெஞ்சுனாங்க. இதுல, கிரிஷும் பக்கத்துல வந்து, "சொல்லிடாதீங்க ஆன்ட்டி"ன்னு கெஞ்சிக் கேட்கிறான்.
குளக்கரையில் தற்கொலை நாடகம்
ரோகிணியோட கெஞ்சல் பேச்சுக்கெல்லாம் மீனா மனம் இறங்கல! அதனால, ரோகிணி ஒரு 'உணர்ச்சிப்பூர்வமான மிரட்டல்' வித்தை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க!. மீனா, ரோகிணி பேசியதை கேட்காததால, ரோகிணி கிரிஷை அழைச்சுட்டு வேகமா குளக்கரைக்குப் போயி, தற்கொலை செஞ்சுக்கப் போறதா மிரட்டுறாங்க!. "எல்லார் கிட்டயும் போய் சொல்லு மீனா! இனிமே எனக்கு வாழ்க்கை இல்லைனு ஆனதுக்கு அப்புறம், நான் இருந்தென்ன பிரயோசனம்? நான் இல்லைனா என் பையனுக்கு யார் இருக்கா? அவனை அனாதையா இந்த உலகத்துல நான் விட்டுட்டுப் போக விரும்பல! நானும் என் பையனும் போய்ச் சேருறோம்! நான் தேடிய வாழ்க்கை எனக்குக் கிடைக்கலேன்னா நான் வாழ்றதே வீணா போச்சு!"ன்னு உணர்ச்சிவசப்பட்டுப் பேசுறாங்க!
உண்மையை மறைத்த மீனா
ரோகிணி, "நானும் என் பையனும் இந்த குளத்துல விழுந்து சாக போறோம்!"னு சொல்லிவிட்டுத் தண்ணிக்குள்ளக் குதிக்கப் போனதும், மீனா பதறிப் போய்த் தடுத்து நிறுத்துறாங்க. ரோகிணி, "இந்த உண்மையெல்லாம் வீட்ல சொல்ல மாட்டேன்னுச் சொல்லுங்க மீனா!"ன்னு கேட்க, நீண்ட நேரம் யோசிச்ச மீனா, கடைசியா "சொல்ல மாட்டேன்"னு சொல்லிவிடுகிறார்!
இதற்கடுத்து, இருவரும் கோவிலுக்குப் போய் பூஜையில கலந்துக்கிறாங்க. மீனா கடுமையான வருத்தத்தோட உட்கார்ந்திருக்க, அங்க இருந்தவங்க எல்லாம் "என்ன ஆச்சு?"ன்னு விசாரிக்கிறாங்க.
வழக்கம் போல, தியாகத்தின் உச்சத்துக்குப் போன மீனா, ரோகிணியின் மிரட்டலுக்குப் பயந்து, இவ்வளவுப் பெரிய உண்மையைக் குடும்பத்துக்கிட்ட சொல்லாம மறைச்சுட்டாங்க! ஆனால் அந்த நேரத்தில் அங்கு வந்த சாமியார் பல நாள் பொத்தி வைத்த உண்மை இப்போ உடைஞ்சிடுச்சு என்று சொல்ல, குடும்பத்தினருக்கு யாருக்கும் புரியவில்லை. என்ன உடைஞ்சிடுச்சு? என்று எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்க இப்போ ஒரு நல்ல பிள்ளைக்கு உண்மை தெரிஞ்சிருக்கு அந்த உண்மை கரும்புக்குள் இருக்கும் சாறு போல என்று டயலாக் பேச அதற்கு ஸ்ருதியும் முத்துவும் அப்போ கரும்பை ஜூஸ் போட்டா சாறு வெளியே வந்துவிடமே என்று நக்கல் செய்கின்றனர்.
அப்போது அண்ணாமலை அவர்களை திட்டி விட்டு அந்த சாமியாரிடம் இவனை பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி இருக்கு என்று பழதட்டை கொடுத்து இதில் எது வேணுமோ எடுத்துக்கோ என்று சொல்ல, அதிலிருந்து ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்து மனோஜ் கையில் கொடுத்து நீ தான் கையேந்த போற நீ வச்சுக்கோ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போகிறார். இதனால் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ஆனாலும் அண்ணாமலையும் பாட்டியும் இதெல்லாம் பெரிய விஷயமா எடுத்துக்க வேண்டாம் என்று அங்கிருந்து எல்லாரையும் கூட்டிக்கொண்டு போக மீனாவும் ரோகிணியும் தனித்தனியாக நின்று யோசித்து கொண்டு இருக்கின்றனர். அடுத்ததாக ரோகிணியின் அம்மாவும் க்ரிஷ் மற்றும் கிரிஷை பார்த்துக் கொள்ளும் மகேஸ்வரி மூன்று பேரும் ரோட்டில் பேசிக் கொண்டு வருவதை பார்த்த முத்து அவர்களை தங்கள் வீட்டிற்கு சாப்பிட கூட்டிக்கொண்டு போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications