சிறகடிக்க ஆசை: முத்துவின் வெற்றி, ரோகிணியின் நாடகம்! அண்ணாமலை சொன்ன வார்த்தை! வசமாக சிக்கிய மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், கிரிஷின் எதிர்காலம் குறித்த விவகாரம், எதிர்பாராத திருப்பங்களுடன் இன்றைய எபிசோடில் அரங்கேறியது. முத்துவின் மனிதநேயமும், விஜயாவின் சுயநலமும் வெளிப்படுகிறது. அதே நேரத்தில் ரோகிணியும் புது நாடகம் போட்டு இருக்கிறார் அதை பற்றி பார்க்கலாம்.

முத்துவின் மகிழ்ச்சி
இன்றைய எபிசோடில், கிரிஷின் மனநிலையைச் சோதிப்பதற்காக ஒரு முக்கிய டெஸ்ட் வைக்கப்பட்டது. மகேஸ்வரியும், கிரிஷின் தந்தை அஜய்யும் வழக்கறிஞருடன் பள்ளிக்கு வந்து காத்திருக்கின்றனர். ஒரு மேசையில் ஆப்பிளும் பணமும் வைக்கப்படுகிறது. "ஏதாவது ஒன்றை எடு" என்று வழக்கறிஞர் கிரிஷிடம் கேட்கிறார். சிறிது நேரம் யோசித்த பிறகு, கிரிஷ் ஆப்பிளை எடுக்கிறான்.
அவன் ஆப்பிளை எடுத்ததைக் கண்ட முத்து, மிகுந்த மகிழ்ச்சியடைந்து, ஓடிச் சென்று கிரிஷைக் கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். அஜய்யின் தந்தை, "ஒரு பையனோட வாழ்க்கையைக் கெடுக்க எனக்கு விருப்பம் இல்லை. இவன் ஆப்பிள்தான் எடுக்கணும்னு நானும் மனசுல நினைச்சேன்" என்று கூறி மனதளவில் திருப்தியடைகிறார்.
அதற்குப் பிறகு, அஜய் தனது தவறை உணர்ந்து கிரிஷிடம் மன்னிப்பு கேட்க, இருவரும் நண்பர்களாகின்றனர். மகேஸ்வரி இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் ரகசியமாக வீடியோ எடுக்கிறார். அனைவரும் "பசங்க மனசுல கல்லம், கபடு இருக்காது" என்று பேசிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர்.
அண்ணாமலையின் பெருந்தன்மை
வெளியே வந்ததும், முத்து சந்தோஷமாக அண்ணாமலைக்கு போன் செய்து நடந்த விஷயத்தைச் சொல்கிறார். அண்ணாமலையும் மகிழ்ந்துபோகிறார். விஜயா வந்ததும், அவரிடம் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார். ஆனால், விஜயா அதற்கு, "யாரோ பெத்த பிள்ளையைச் சீர்திருத்தப் பள்ளிக்குப் போக விடாம தடுத்ததுக்கு நீங்க எதுக்கு இவ்வளவு சந்தோஷபடுறீங்க?" என்று கேட்கிறார்.
அதற்கு அண்ணாமலை, "அன்னைக்கு முத்துவ என்னால காப்பாத்த முடியல. ஆனா, இன்னைக்கு யாரோ பெத்த பிள்ளையை முத்து காப்பாற்றியிருக்கான். அந்த குற்ற உணர்ச்சி எனக்கு இப்ப வரைக்கும் இருக்கு" என்று கூறிவிட்டு, கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்யப் போவதாகச் சொல்கிறார். அதைக் கேட்ட விஜயா, இந்தச் செய்தியைப் பயன்படுத்தி, தனது டாக்டர் பட்டம் வாங்குவதற்காகப் பயன்படுத்திக்கொண்டால் நல்ல ஐடியாவாக இருக்குமே என்று யோசிக்கிறார்.
ரோகினியின் அடுத்தகட்ட சதித்திட்டம்
மறுபுறம், மகேஸ்வரி வீட்டில் ரோகினி மகிழ்ச்சியாக இருக்கிறார். வித்யா வந்தவுடன், கிரிஷ் விவகாரம் தீர்ந்துவிட்டதால் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்கிறார். "பிரச்சனையே முத்து-மீனாவிடம் போனதால்தான் முடிவுக்கு வந்தது" என்று கூறிய வித்யா "பேசாம கிரிஷை அவங்ககிட்ட தத்து கொடுத்துடு" என்று சொல்ல, ரோகினி கோபப்படுகிறார். "அவனை அவங்ககிட்ட கொடுத்துட்டு நான் நடுத்தெருவில் நிக்கனுமா?" என்று கேட்கிறார்.
அதற்குப் பிறகு மகேஸ்வரி, "இப்ப வந்த பிரச்சனை தீர்ந்துவிட்டது. முத்து-மீனாவிடமிருந்து கிரிஷை எப்படி நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வருவது?" என்று கேட்கிறார். அதற்கு ரோகினி, ஒரு ஐடியா இருப்பதாகக் கூறுகிறார். கிரிஷ் முத்து மீனாவிடமிருந்து வரமாட்டேன் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று மகேஸ்வரி கேட்க, "என் அம்மாவைத்தான் வரச் சொல்லணும்" என்று ரோகினி, தனது அம்மாவுக்கு போன் செய்து அழுதுகொண்டே கிரிஷ் பற்றிப் பேச, அவரும் உடனே வருவதாகச் சொல்கிறார். அப்போது, "உன்னை மாதிரி ஒரு நடிப்புக்காரியை நான் பார்த்ததே இல்லை. அம்மாவையே ஏமாத்துறியே" என்று மகேஸ்வரி ரோகினியைக் கிண்டல் செய்கிறார்.
சிக்கலில் மனோஜ்
மறுபுறம், ஷோரூமில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் மனோஜ், அங்கு ராணி வந்ததும், அவளிடம் இருந்து உண்மையை வரவைக்க, தன் போனில் கேமராவை ஆன் செய்து பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறார். மனோஜ் ஆசையாகப் பேசியதை அவர்கள் ரெக்கார்டு செய்து, "இப்போ எங்களிடம் ஆதாரம் இருக்கு. இனி நாங்க என்ன கேட்டாலும் நீ செய்யத்தான் வேண்டும்" என்று மனோஜை மடக்க முயற்சிக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இப்போது மனோஜ் புது பிரச்சனையில் சிக்கி இருக்கும் நிலையில் வழக்கம்போல மனோஜ்க்கு இனி முத்துவும் மீனாவும் தான் ஹெல்ப் பண்ணுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications