சிறகடிக்க ஆசை: ஸ்ருதி கேட்ட கேள்வி! ரோகிணி பற்றி முத்து கண்டுபிடித்த உண்மை.. மனம் மாறும் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், ரோகிணியின் பித்தலாட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலமாகி வருகிறது. 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹோம் அப்ளையன்ஸ் ஆர்டரைத் தானே கஷ்டப்பட்டுப் பிடித்ததாகக் கதைவிட்ட ரோகிணிக்கு, முத்து தனது கணக்குத் திறமையால் பதிலடி கொடுக்க, மீனா தான் இந்தக் கோடீஸ்வர ஆர்டருக்குக் காரணம் என்ற உண்மையும் இந்த வாரம் வெளிவரத் தொடங்கியுள்ளது.

ரோகிணியின் ரூ.40 லட்ச நாடகம்
மீனா, தனது பூ பிசினஸுக்காகப் கலா என்ற பில்டரைச் சந்தித்தபோது, அந்தப் பெண் கட்டியிருக்கும் 275 வீடுகளுக்கும் மீனா பூ சப்ளை செய்யும் ஆர்டர் கிடைக்கிறது. அதே சமயம், அந்த வீடுகளை ஹோம் அப்ளையன்ஸ் உடன் டெலிவரி செய்வதாகக் கலா சொல்ல, மீனா தனது மைத்துனர் (மனோஜ்) ஹோம் அப்ளையன்ஸ் கடை வைத்திருப்பதைச் சொல்லி, அந்த ஆர்டரை அவர்களுக்குக் கொடுக்குமாறு கேட்கிறார்.
மீனா இந்த விசிட்டிங் கார்டை ரோகிணியிடம் கொடுத்துச் சந்திக்கச் சொல்ல, ரோகிணி கலாவைச் சந்தித்து ஆர்டரை உறுதி செய்கிறார். ஆனால், மீனாவிடம், "இந்த ஆர்டர் உங்கள் மூலம் வந்தது என்றுத் தெரிய வேண்டாம்" என்று கேட்டுக் கொண்ட ரோகிணி, விஜயாவிடம் சென்று, தானே இந்தக் கடினமான ஆர்டரை வாங்கி வந்தது போல் பில்டப் செய்கிறார்.
விஜயாவின் திடீர் பாசம்
40 லட்ச ரூபாய் ஆர்டர் கிடைத்தச் செய்தியைக் கேட்டு, அது உண்மை என்று நம்பிய விஜயா, ரோகிணியைத் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார். தன் மருமகள் 40 லட்ச ரூபாய் ஆர்டர் பிடித்து வந்திருப்பதாகப் பெருமை பேசும் விஜயா, "அவளுக்காகக் காபி போட்டுக் கொடு" என மீனாவிடம் ஆர்டர் போடுகிறார்.
முத்துவின் 1 கோடி கணக்கு
விஜயாவின் இந்த செயலைக் கண்டு கடுப்பான முத்து, மீனாவுக்குக் கிடைத்த ஆர்டர் பற்றிப் பேசி, ரோகிணியின் மகிழ்ச்சியில் மண் அள்ளிப் போடுகிறார். "அவ உங்களுக்கு மட்டும் தான் காபி போடுவா. அவங்களுக்கு வேணும்னா அவங்களையே போட்டுக்க சொல்லுங்க!" என்று முத்து டென்ஷனோடு பதிலடி கொடுக்கிறார்.
லாப கணக்கு
முத்துவின் கணக்கு விஜயாவைப் பயங்கரமாக வாயடைக்க வைக்கிறது. "மீனாவுக்கும் 275 வீட்டுக்கு பூ போடும் ஆர்டர் கிடைத்துள்ளது. அதில் ஒரு வீட்டுக்குத் தினசரி 20 ரூபாய் லாபம் வைத்தாலும், ஒரு நாளைக்கு 5500 ரூபாய் கிடைக்கும். அதுவே ஒரு மாசத்துக்குக் கணக்குப் போட்டால் 1லட்சத்து 65 ஆயிரம் ரூபாய். அதுவே ஒரு வருஷத்துக்கு 19 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்."
முத்துவின் கிளைமேக்ஸ்
"இப்படிப் பார்த்தால், அடுத்த 5 ஆண்டுகளில் மீனாவுக்கு 1 கோடி லாபம் கிடைக்கும்! அதுவே இவங்க கொடுத்த ஹோம் அப்ளையன்ஸ் ஒரு முறை மட்டுமே வாங்குவார்கள். அதில் இவர்களுக்கு 40 லட்சம் தான் கிடைக்கிறது. இவர்கள் 1 கோடி சம்பாதிப்பதற்குள், மீனா 1 கோடி சம்பாதித்துவிடுவார்" என்று முத்து சொன்னதும், விஜயா அதிர்ச்சியில் வாயடைத்துப் போகிறார்.

ரோகிணியின் முட்டுகொடுப்பு
ரோகிணியைத் தனியாக அழைத்து ஸ்ருதி, "உங்களுக்கு மீனா மூலமாகத் தானே இந்த ஆர்டர் கிடைத்தது, நீங்களே கஷ்டப்பட்டு வாங்குனது மாதிரி பேசுறீங்க?" என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி, "மீனா சொல்லி இருந்தாலும் அந்த கலா மேடம் எனக்கு ஏற்கனவே தெரிந்தவர். அவங்க வீட்டு ஃபங்ஷனுக்கு நான் மேக் அப் போட்டிருக்கேன்" என்று சொல்லிச் சமாளிக்கிறார்.
பின்னர் இரவில் முத்துவிடம் பேசும் மீனா, தன் மூலம் தான் ரோகிணிக்கு இந்த ஆர்டர் கிடைத்த விஷயத்தைச் சொல்கிறார். மேலும், "இதை யாரிடமும் சொல்லாதீங்க" எனவும் கேட்டுக்கொள்கிறார். மீனாவுக்குக் கிடைத்த லாபம் 1 கோடி என்பதை அறிந்த விஜயா, இனி ரோகிணியைக் கொண்டாடுவாரா அல்லது மீனாவை மதித்து நடப்பாரா என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications