சிறகடிக்க ஆசை: நீத்துவிடம் வசமாக சிக்கும் விஜயா.. ஸ்ருதி கண்டுபிடித்த விஷயம்! மீனா கொடுத்த பதிலடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 பிப்ரவரி 21ஆம் தேதிக்கான எபிசோடில், நீத்துவை மனோஜ்க்கு கல்யாணம் பண்ணி வைக்க விஜய் ஆசைப்படுகிறார் அதே நேரத்தில் விஜயா பற்றி ஸ்ருதி மீனாவிடம் சில விஷயங்களை போட்டுக் கொடுக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில், செல்வத்தை ஜாமினில் வெளியே எடுத்த முத்து, அருணிடம் பேசி கேஸை வாபஸ் வாங்க வைத்ததோடு, அவர் கேட்ட 5 லட்ச ரூபாயை ஒரு மாதத்தில் கொடுப்பதாக சொல்லியிருந்தார். செல்வத்தால் பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று தெரிய வந்ததும், முத்து தன்னுடைய காரை சத்யா வேலை பார்க்கும் பைனான்ஸ் கம்பெனியில் அடமானம் வைத்து பணத்தை எடுத்து செல்வத்திடம் கொடுக்கிறார். அந்த பணத்தை செல்வம் அருணிடம் கொடுத்து விடுகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் (Siragadikka Aasai serial 21th February 2026 Episode) இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், பணத்தை வாங்கிய பிறகு சீதா, "இந்த பணம் என் மாமா காரை அடமானம் வைத்து தான் கொடுத்திருக்கார்... இந்த காசு நமக்கு தேவையா?" என்று கேட்க, அருண் சீதாவை அடித்து கொடுமைப்படுத்தி, "என்னை எதிர்த்து எதுவும் பேசக்கூடாது" என்று மிரட்டுகிறார்.
உண்மையை மறைத்த சீதா
அதன்பிறகு சீதா தன் அம்மா வீட்டுக்கு வரும்போது, அருண் உன்னிடம் ஏதாவது பிரச்சனை பண்ணுகிறாரா என்று மீனா கேட்கிறார். ஆனால் உண்மையை சொன்னால் மீண்டும் பிரச்சனை வரும் என்பதால், "அப்படி எதுவும் இல்லை" என்று பொய் சொல்லி சீதா மறைத்து விடுகிறார்.
விஜயாவின் திமிர்
பின்னர் முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வந்து, செல்வத்திற்கு பணம் கொடுத்த விஷயத்தையும், அதற்காக காரை அடமானம் வைத்த விஷயத்தையும் சொல்கிறார்கள். இதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த விஜயாவும் மனோஜும் முத்துவை கிண்டல் பண்ணுகிறார்கள். அதற்கு மீனா பதிலடி கொடுக்கிறார். இதனால் கோபம் பண்ண விஜயா நீ வந்த ராசி தான் இவன் மேலும் மேலும் கஷ்டப்படுறான் என்று மீனாவை திட்டிவிட்டு போகிறார்.
அவார்ட் வாங்கிய பார்வதி
இதற்குப் பிறகு விஜயா பார்வதி வீட்டுக்கு செல்கிறார். அவார்டு வாங்க வெளியூர் சென்றிருந்த பார்வதி திரும்பி வந்து, தன்னுக்கு கிடைத்த விருதை விஜயாவிடம் காட்டுகிறார். அதோடு தான் யூடியூப்பில் குழந்தைகளுக்காக கதை சொல்வதை பார்த்து ஒரு பள்ளியில் இருந்து அழைப்பு வந்திருப்பதாகவும், வாரத்திற்கு 7 கதைகள் சொல்ல வேண்டும் என்றும், அதற்காக மாதத்திற்கு ஒரு லட்சம் சம்பளம் தருவதாக கூறியிருப்பதாகவும் சொல்கிறார். இதைக் கேட்டு விஜயா அதிர்ச்சி அடைந்து, "கதை சொல்றதுக்கே இவ்வளவு காசு தருவாங்களா?" என்று கேட்கிறார். அந்த நேரத்தில் சிந்தாமணி அங்கு வருகிறார்.
மறுபக்கத்தில் மீனா ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். அங்கு வைத்து ஸ்ருதி விஜயா தனக்கு போன் செய்ததாகவும், வரும் வெள்ளிக்கிழமை வீட்டில் பூஜை வைத்திருப்பதாக அதற்கு வரும்படி கூப்பிட்டார் என்று சொல்கிறார். மீனாவும் நீங்க வீட்டுக்கு வாங்க என்று சொல்கிறார்.
ஸ்ருதியின் வருத்தம்
அதற்கு ஸ்ருதி, விஜயாவின் நடவடிக்கை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை. அவங்க பூஜை பண்றதால மட்டும் ரவியோடு என்னால் சேர்ந்து வாழ முடியுமா? ரவி எனக்காக எதுவுமே ஸ்டெப் எடுக்க மாட்டேங்கறான்.. இப்பவும் நீத்துவை பார்க்க போயிட்டு வரான், இது தப்பா இருக்கு என்று பேசிக் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதன்பிறகு சிந்தாமணியை அழைத்துக் கொண்டு விஜயா நேராக நீத்து வீட்டுக்கு செல்கிறார். மனோஜுக்கு ரோகிணியிடம் இருந்து டைவர்ஸ் வாங்கப் போவதால், அவருக்கு நீத்துவை இரண்டாவது திருமணம் செய்து வைக்கலாம் என்று திட்டமிட்டு, அதைப் பற்றி பேசச் செல்கிறார். ஆனால் நீத்துவோ, ரவிக்காக தான் பெண் கேட்க வந்திருக்கிறார்கள் என்று தவறாக நினைத்து சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications