சிறகடிக்க ஆசை: விஜயாவிற்கு சரியான பதிலடி கொடுத்த பார்வதி! முத்துவின் மாற்றம், அதிர்ச்சியில் மீனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், முத்து மற்றும் அருணின் சண்டையால், அக்கா தங்கச்சி இடையேயான மோதல் இப்போது ஒரு பெரிய குடும்பச் சிக்கலை உருவாக்கிவிட்டது! "இனி உன்கூட பேசவே மாட்டேன்" என்று மீனாவிடம் சண்டை போட்டுவிட்டுச் சென்ற சீதாவுக்கு, முத்து கோபத்துடன் அட்வைஸ் கொடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் பரபரப்பை ஏற்படுத்தின.

Siragadikka aasai serial vijay tv

மயங்கி விழுந்த சந்திரா

அருண் சஸ்பெண்ட் ஆனது மாமா முத்துவால் தான் என்று மீனாவிடம் சண்டைபோட்ட சீதா, முத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முரண்டு பிடித்தார். ஆனால் மீனா அதற்கு முடியவே முடியாது என்று கறாராகச் சொன்னதால், வாக்குவாதம் முற்றி, "இனி உன் கூடப் பேசவே மாட்டேன்" என்று சீதா கோபமாகச் சென்றார்.

மன உளைச்சல்

மகள்கள் இருவரும் சண்டையிட்டுப் பிரிந்ததால், மன உளைச்சலில் இருந்த அம்மா சந்திரா சரியாகச் சாப்பிடாமல் இருந்திருக்கிறார். சந்திராவை பார்க்க வந்த உறவினர்கள் கூட சீதா மீனா சண்டையைப் பற்றியும் அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்த ஒற்றுமையை பற்றியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனால் திடீரென மயக்கம் போட்டு விழுந்த சந்திராவை, பதறியடித்துக் கொண்டு சத்ய ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்.

அடுத்ததாக மீனா பார்வதி வீட்டிற்கு வரும்போது பார்வதியும் அவருடைய யோகா கிளாசுக்கு வரும் நபரும் கதை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து மீனா அருமையாக இருக்கிறது என்று பாராட்டி நீங்க ஒரு வீடியோவாக இதை வெளியிடலாம் என்று ஐடியா கொடுக்கிறார். அந்த நேரத்தில் வரும் விஜயா மீனா கொடுத்த ஐடியாவை பார்த்து பொறாமைப்பட்டு பார்வதியிடம் பேச, அதற்கு பார்வதி விஜயாவிற்கு சரியான பதிலடி கொடுக்கிறார்.

முத்துவின் ஆவேச அட்வைஸ்

அம்மா மயங்கி விழுந்த விஷயத்தை மீனாவுக்கும் சீதாவுக்கும் போன் போட்டு சத்யா சொல்ல, இருவரும் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வருகின்றனர். முதலில் ஆஸ்பத்திரிக்கு வரும் சீதாவிடம், பதற்றத்துடன் உள்ளே வரும் மீனா "அம்மா எங்கே?" என்று கேட்கிறார். ஆனால், சீதா வாயைத் திறக்காமல் திமிராக நிற்கிறார். இதைப் பார்த்துக் கோபமடைந்த முத்து, "இந்த நேரத்தில் கூட இப்படிப் பிடிவாதமா இருந்தால் எப்படி சீதா? உன் கோபத்தைக் காட்ட இது நேரமில்லை" என்று கண்டித்துச் சொல்கிறார். ஆனாலும் சீதா எதுவும் பேசாமல் முரண்டு பிடித்து நிற்கிறார்.

சத்யாவின் விளக்கம்

அப்போது அங்கு வந்த சத்யா, "மீனாவுக்கும் சீதாவுக்கும் சண்டை வந்ததிலிருந்து அம்மா மனசு சரியில்ல. அவங்க சரியா சாப்பிடாம இருந்தாங்க. அதனால தான் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க" என்று விளக்கமளிக்கிறார். "குடும்பத்துல இருக்குறது நாலு பேர், ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா தான் இருக்கணும். அதை விட்டுட்டுச் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டுக்கிட்டு இருக்கக் கூடாது. நான் மறுபடியும் சொல்றேன், இந்த மாதிரிப் பேசாம இருக்குறதெல்லாம் விட்டுடு" என்று முத்து சொல்லியும், சீதா அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

சீதாவை அலட்சியப்படுத்திய மீனா

முத்து இவ்வளவு பேசியும் மனம் இறங்காத சீதாவைப் பார்த்து மீனா கடுப்பாகிறார். "அவ தான் பேசமாட்டேங்குறால்ல, நீங்க ஏன் திரும்பத் திரும்பப் போய் அவகிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க. அவ பேசாம இருந்தாலும் பரவாயில்லை விடுங்க. அம்மாவுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது. இப்போ அது தான் முக்கியம்" என்று மீனா ஒரு பதிலடி கொடுக்கிறார்.

பின்னர் டாக்டர் வந்து, சந்திராவுக்கு BP இருப்பதாகவும், ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூறுகிறார். இதனால் முத்து மீனாவை அவருடைய அம்மா வீட்டில் இருந்து பார்த்துக் கொள்ளும்படி சொல்கிறார். ஆனால் மீனா தனக்கு வேலை அதிகமாக இருப்பதால் அம்மாவை நம்முடைய வீட்டுக்கே கூட்டிட்டு போகலாம் என்று சொல்ல முத்துவும் சரி என்று சொல்கிறார். ஆனால் அதற்கு சீதா முடியாது அந்த வீட்டில் அம்மாவுக்கு மரியாதையே கிடையாது அங்க போனா அவங்க நிலைமை இன்னும் மோசமாகிடும் அங்கு விட முடியாது நம்ம வீட்டுக்கு தான் கூட்டிட்டு போகணும் என்று பிடிவாதமாக நிற்கிறார்.

இதனால் முத்து சீதா வீட்டிற்கு கூட்டிட்டு போகட்டும் என்று சொல்லிவிடுகிறார். அதைக் கேட்டு அருண் அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. சீதாவின் பிடிவாதமும், மீனாவின் பதிலடியும் இந்த அக்கா தங்கை சண்டை எங்கே கொண்டு போகும் என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+