சிறகடிக்க ஆசை: மீனாவுக்கு தெரிந்த உண்மை..மன்னிப்பு கேட்ட விஜயா! சிந்தாமணியின் சூழ்ச்சி!முத்து எடுக்கும் முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 பிப்ரவரி 26 ஆம் தேதிக்கான எபிசோடில், மீனாவும் - விஜயாவும் மாறி மாறி ஜோதிடரை போய் பார்க்கின்றனர். இதன் விளைவு நல்லதாக இருக்குமா, அல்லது சிந்தாமணி திட்டப்படி மீனா வீட்டை விட்டு போகப் போகிறாரா என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial 26th February 2026 Episode) இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், சாமியார் பெண் அருள்வாக்கால் பாதிக்கப்பட்ட விஜயாவை, மேலும் குழப்பிவிட சிந்தாமணி அவரை கோயிலுக்கு வர சொல்கிறார். மேலும் ஆட்களை செட் செய்து, அவர்கள் அந்த சாமியார் பெண் சொல் பழித்துவிட்டதாக கூற வைக்கிறார்
சாமியாரின் நாடகம்
மேலும் கோயிலிலேயே அந்த பெண்ணிடம் அருள் வாக்கு கேட்கும் பெண்கள், நீங்கள் சொன்னது போலயே நடந்திருச்சு என்று சொல்கின்றனர். இதை கேட்ட விஜயா மேலும் பயப்படுகிறார். அந்த நேரத்தில் விஜயாவை பார்த்த அந்த பெண் சாமியார் நீ எதற்காக இங்கு வந்த? உன் பையன் என்ன கொல்லப் பார்த்தான். இது அந்த தெய்வத்தையே அசிங்கப்படுத்துவதற்கு சமம் என்று திட்டுகிறார்.

மன்னிப்பு கேட்ட விஜயா
அதற்கு விஜயா, அவன் எப்பவுமே அப்படித்தான் முரடன் என்று முத்துக்குக்காக மன்னிப்பு கேட்கிறார். பிறகு உன் மூத்த மருமகளை சீக்கிரமா வீட்டை விட்டு வெளியே அனுப்பு என்று அந்த சாமியார் சொன்னதும் விஜயா குழப்பமடைய, அதற்கு சிந்தாமணி முதலில் மீனாதான உங்க வீட்டுக்கு மருமகளா வந்தா அதைத்தான் அவங்க சொல்றாங்க என்று சமாளிக்கிறார். இதனால் சீக்கிரமாக மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த வேண்டும் என விஜயா கராராக சொல்கிறார்.
மீனா அம்மா கொடுத்த அட்வைஸ்
தொடர்ந்து அம்மா வீட்டிற்கு போன மீனா, வீட்டில் நடக்கும் விஷயத்தை சொல்கிறார். உடனே கடவுளை நம்பு என சந்திராவும், யாராலும் நடக்கப்போவதை கணிக்க முடியாது என சீதாவும் சொல்கின்றனர். பிறகு வேறு ஒரு ஜோதிடரை போய் பார்க்கலாம் அதற்குப் பிறகு அவங்க என்ன சொல்றாங்களோ அதையே கேட்டு நிம்மதியாக இருக்கலாம் எனவும் சந்திரா கூற மீனா அதற்கு சம்மதம் சொல்கிறார்.

ஜோதிடர் சொன்ன ரகசியம்
பிறகு மீனா வீட்டிற்கு வந்த ஜோதிடர், விஜயாவின் பிறந்த தேதியை கேட்டு கணிக்கிறார். அப்போது விஜயாவுக்கு ஒரு பெரிய பிரச்சனை வரப்போவதாகவும், இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்றும் கூறுகின்றார். ஆனால் அண்ணாமலை உயிருக்கு எந்த பாதிப்பும் வராது, தாலி பாக்கியம் பற்றிய தகவலுக்கு எல்லாம் ஜாதகம் தேவை, பிறந்த தேதி அடிப்படையில் அவருக்கு பிரச்சனை வரும் என்பது உறுதி என்று சொல்லி பரிகாரத்தையும் கூறுகிறார்.
வீட்டு பிரச்சனை
இதனால் மீனா பயப்படுகிறார், விஜயாவுக்கு என்ன பிரச்சனை வரும் என்று பதற்றமடைகிறார். இந்த மொத்த பிரச்சனைக்கு பின்னாலும் சிந்தாமணி சதி என்பதையும், விஜயா வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்ததையும் முத்து கண்டுபிடித்துவிட்டால் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வரும்.
கடைசியாக பார்வதி வழக்கம் போல வீடியோவில் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார் அப்போது விஜயா அங்கு கோபமாக வந்து நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications