சிறகடிக்க ஆசை: மீனா பற்றி கொளுத்தி போட்ட சிந்தாமணி! ஸ்ருதி சொன்ன விஷயம்! ரேகாவுடன் வெளியே போன சத்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 நவம்பர் 26ம் தேதிக்கான எபிசோடில், குடி பழக்கத்தால் முத்துவிடம் சண்டைபோட்டு வீட்டை விட்டு போன மீனாவுக்கு எதிராக விஜயா மற்றும் சிந்தாமணி சதித்திட்டம் தீட்டுவது இன்றைய அத்தியாயத்தின் முக்கிய சம்பவமாக அமைந்துள்ளது.

Siragadikka aasai serial vijay tv

அம்மா வீட்டில் மீனா

முத்து குடித்துவிட்டு வந்ததால் அவரிடம் சண்டைபோட்ட மீனா, முத்து எப்போ குடியை விடுகிறாரோ அப்போ தான் வீட்டுக்கு வருவேன் எனச் சவால் விட்டுவிட்டுச் செல்கிறார். மீனாவின் அம்மா வீட்டுக்கு சென்ற அவரிடம் என்ன நடந்தது என அனைவரும் கேட்டாலும், மீனா எதையும் சொல்லாமல் கண்ணீர் சிந்துகிறார். முத்துவை சந்தித்து பேசும் சத்யாவுக்கு, மீனா எதனால் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு வந்தாள் என்ற உண்மை தெரிய வருகிறது.

மீனாவுக்கு எதிராக சதி

யோகா கிளாஸுக்கு பூ கொடுக்க சென்ற மீனாவை, சிந்தாமணியுடன் அங்கு வரும் விஜயா திட்டி தீர்க்கிறார். மீனா பூ கொடுக்க போக, பூக்களை சாமிக்கு போட சொன்னதாக பார்வதி சொல்கிறார். மேலும், மீனா பூப் போட்டால் தங்கள் யூடியூப் சேனலுக்கு ராசியாக இருப்பதாகவும் சொல்ல, அதற்கு விஜயா "பொல்லாத ராசி" என்று திட்டுகிறார்.

இதையடுத்துப் பேசும் சிந்தாமணி, "சில பேர் அப்படி தான் மாஸ்டர், நல்லா பூ மாதிரி பேசி நம்ப வச்சிடுவாங்க. ஆனா மனசுக்குள்ள முள்ளு தான் இருக்கும்" எனக் குத்திக் காட்டிப் பேசுகிறார்.

விஜயாவின் கோபம்

மீனா வீட்டை விட்டை போனதுக்கு அப்புறம் தான் தங்கள் வீடு நல்லா இருப்பதாகக் கூறும் விஜயா, "இவ ஜாலியா ஊரைச் சுத்திக்கிட்டு இருக்கா. இப்படி ஊர் சுத்துறதுக்குத் தான் வீட்டை விட்டுப் போனியா" எனக் கேட்கிறார். பின்னர் விஜயாவைத் தனியாக அழைத்து பேசும் சிந்தாமணி, தான் மீனாவையும் முத்துவையும் ஒரு சாமியார் வீட்டில் பார்த்ததாகக் கூறுகிறார். அந்தச் சாமியார் ஆவிகளிடம் பேசுபவர் என்றும், "ஒருவேளை மீனா உடம்பில் ஆவி எதாவது புகுந்திருக்குமோ" எனக் கேட்டுக் கொளுத்திப் போடுகிறார். இதைக் கேட்ட விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

முத்துவின் மனம் மாற்றம்

மறுபுறம், அம்மா வீட்டில் சோகமாக அமர்ந்திருக்கும் மீனாவிடம் சீதா என்னப் பிரச்சனை என கேட்கவும், மீனா கூற மறுக்கிறார். இதையடுத்து ஸ்ருதி அங்கு வந்து மீனாவின் அம்மாவிடம் எல்லா உண்மையையும் சொல்லிவிடுகிறார். அதற்கு மீனாவின் அம்மா இந்த சின்ன பிரச்சனைக்காகவா வீட்டை விட்டு வெளியே வந்தே? நீ வீட்டை விட்டு அவ்வளவு சீக்கிரமா வெளியே வர்ற மாட்ட ஆனால் இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் வந்து இருக்கா என்றால் ஏதோ ஒரு விஷயம் இருக்கு என்று சொல்கிறார்.

நண்பர்களின் அட்வைஸ்

முத்துவிடமும் அவரது நண்பர்கள், "இதெல்லாம் பெரிய விஷயமில்லை" எனச் சொல்லி அவர் மனதை மாற்றுகிறார்கள். அதைத்தொடர்ந்து சிந்தாமணியின் மகள் ரேகா தனக்கு வயிறு வலிக்கிறது என்று சொன்னதால் அவரை ஹாஸ்பிடலுக்கு சத்யா கூட்டிக்கொண்டு போகிறார். அப்போது சீதா இவங்க யாரு என்று விசாரிக்க தன்னுடைய ஓனர் பொண்ணு என்று சத்யா சொன்னதும் அவ்வளவுதானா? அல்லது எதுவும் இன்ட்ரஸ்ட் இருக்கா? என்று கேட்க சத்யா, அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னதும் அந்த பொண்ண பார்த்தா வடநாட்டு பொண்ணு மாதிரி இருக்கிறா அடி வெளுத்துருவா என்று கிண்டல் செய்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+