சிறகடிக்க ஆசை: முத்துவை புரிந்து கொண்ட சீதா.. சத்யா சொன்ன விஷயம்! புது பிரச்சனை கிளம்பியாச்சு!
சென்னை: விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், இத்தனை நாட்களாக மறைந்திருந்தப் பல உண்மைகள் இன்று வெளிவந்து, குடும்பத்தின் சண்டை சச்சரவுகளுக்கு ஒரு சிறிய முற்றுப்புள்ளி வைத்துள்ளன. அண்ணன்-தம்பி சண்டை, அக்கா-தங்கை பாசப் போராட்டம் என எமோஷனல் காட்சிகள் இன்று எபிசோடில் நிரம்பி வழிந்தன.

ரவி - ஸ்ருதியின் சேட்டை
இன்றைய எபிசோடில், ரவி சாப்பிட அமரும் போது, அவருடைய சாப்பாட்டில் உப்பை அதிகமாகக் கொட்டி ஸ்ருதி சேட்டைக் காட்டுகிறார். பதிலுக்கு ரவியும் சளைக்கவில்லை. ஸ்ருதி வரும் வழியில் வைத்து அவரை கீழே விழ வைத்துப் பழி தீர்க்கிறார்.
சமாதான முயற்சி
இவர்கள் இருவரும் சண்டை போடுவதைப் பார்த்த முத்துவும் மீனாவும், "இவர்கள் இருவரும் உட்கார்ந்து பேசினால் எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரும்" என்று ஒரு பிளான் போடுகிறார்கள். அடுத்த கட்டத்தில் சத்யா வேலையை விடப் போவதாகச் சொன்ன விஷயத்தையும், பின்னர் கம்பெனி ரூல்ஸையே தனக்காக மாற்றிக் கொண்டதையும் முத்துவிடம் சொல்ல, முத்து மீண்டும் சத்யாவுக்கு அட்வைஸ் செய்கிறார்.
உண்மையை உடைத்த ஆட்டோ டிரைவர்
சீரியலின் மிகப்பெரிய ட்விஸ்ட் இந்தப் பணப் பிரச்சனையில்தான் நடந்தது. சீதா வேலை பார்க்கும் மருத்துவமனையின் மேனேஜர், அவரிடம் ரூ.5 லட்சம் பணத்தைக் கொடுத்து வங்கியில் டெபாசிட் செய்யச் சொன்னார். ஆனால், அந்தப் பணத்தைத் திருடிச் சென்றக் கும்பலிடம் இருந்து, கடவுள் போல் வந்த முத்து மீட்டு வந்து, சீதாவின் வேலையைக் காப்பாற்றினார். ஆனால், பணத்தை எடுத்தது யார் என்ற உண்மையை முத்து இத்தனை நாளாகச் சொல்லவே இல்லை.
மீண்டும் அதே வேலை:
இந்த நிலையில், இன்றைய எபிசோடில் சீதாவிடம் மீண்டும் ரூ. 5 லட்சம் பணத்தைக் கொடுத்து வங்கியில் டெபாசிட் செய்து வரச் சொல்கிறார் மேனேஜர். ஒருமுறை பட்டதே போதும் என்று சீதா மறுத்தாலும், மேனேஜர் வற்புறுத்த, சீதாவும் செக்யூரிட்டி உதவியுடன் ஆட்டோவில் கிளம்புகிறார். வழியில் எங்கும் நிறுத்த வேண்டாம் என்று ஆட்டோ டிரைவரிடம் சீதா கூறுகிறார்.
உண்மையை போட்டுடைத்த மாமா
செல்லும் வழியில் சீதாவின் மாமா முத்துவை பார்த்த ஆட்டோ டிரைவர், ஆட்டோவை நிறுத்திவிட்டு, அவரிடம் பேசிவிட்டு வருவதாகச் செல்கிறார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால், சீதா அவர்களைத் தேடிச் செல்கிறாள். அங்கே சென்று ஆட்டோ டிரைவரிடம் கோபமாகக் கேட்டபோது, அவர்தான் பணத்தைத் திருடிய விஷயத்தையும், தன்னையும் சிக்க வைக்காமல், அந்தப் பணத்தைப் போலீஸிடம் ஒப்படைத்தது முத்துதான் என்ற உண்மையும் சீதாவிடம் சொல்கிறார்.
நெகிழ்ச்சி
தனக்காக மாமா முத்து இவ்வளவு உதவி செய்திருக்கிறாரா என ஃபீல் பண்ணிய சீதா, அங்கேயே முத்துவிடம் மன்னிப்பு கேட்கிறார். இதன்பின்னர், தன்னுடைய அம்மா வீட்டுக்குச் செல்லும் மீனா, அக்கா சீதாவைப் பற்றிப் பேசி அழுது புலம்புகிறார். "அவள்தான் என் முதல் குழந்தை, அவளுடன் பேசாமல் இருக்க முடியவில்லை" என்று புலம்பிக் கொண்டு இருக்கையில், சீதா வந்து மீனாவைக் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கிறார்.
சந்திராவின் மகிழ்ச்சி
முத்து மாமாவால் தான் தனக்கு வேலை கிடைத்தது என்ற உண்மையைச் சீதா சொல்கிறார். இதனால், "இனி யார் சண்டை போட்டாலும் நான் உன் கூட பேசாமல் இருக்க மாட்டேன்" என்று மீனாவிடம் சீதா சொல்ல, மகள்கள் சண்டை போட்டதால் சோகத்தில் இருந்த சந்திரா அவர்கள் மீண்டும் சேர்ந்ததைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சிந்துகிறார்.
இனி வரும் எபிசோடுகளில் ரவி-ஸ்ருதி சண்டை எப்படி முடிவுக்கு வரும், முத்து-சீதா பாசம் தொடருமா என்பதைப் பார்க்கலாம்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications