Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு வந்த ஃபோன் கால்! அடுத்த சிக்கல், கோபத்தில் விஜயா! முத்து போட்ட பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், மனோஜ் - ரோகிணியின் ரொமான்ஸ் ஒருபக்கம் கவிதை சொல்லிக் களைப்படைய, இன்னொருபக்கம் முத்து - மீனாவின் விருந்து ஏற்பாடு விஜயாவின் முடிவால் நின்றுபோனது. மேலும், நீத்துவும் ரவியும் மோதிக் கொண்ட இந்தக் களேபரமானக் காட்சிகளை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்!

Siragadikka aasai serial vijay tv

கிரிஷ்ஷின் போன் கால்

மனோஜின் காதலை முழுசா நம்பாத ரோகிணி, இன்னிக்கு மனோஜ் ரொமான்ஸ் பண்ண வந்தப்போ, ஒரு சிறிய தர்மசங்கடத்தைச் சந்தித்தார். மனோஜ் ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்க, நேரம் பார்த்து ஸ்ருதி கதவைத் தட்ட, "கொஞ்ச நேரம் என்று மனோஜ் கதவைத் திறக்கிறார். பிறகு மனோஜிடம் "தயவுசெய்து பாட்டுப் பாடாதீங்க; காதுல ஊசி வச்சு குத்துற மாதிரி இருக்கு" என்று சொல்லிவிட்டு ஸ்ருதி சென்று விடுகிறார்.

கவிதை தோற்றம்

பிறகு ரூமுக்குள் வந்த மனோஜ் நான் பாடுவது கேவலமா இருக்கா என்று சோகமாக கேட்க, "அப்படியெல்லாம் இல்லை மனோஜ்" என்று ரோகிணி சமாளிக்கிறார். பிறகு மனோஜ், 'அப்போ நான் பாடட்டுமா?' என்று கேட்க, 'வேண்டாம்' என்று ரோகிணி தடுத்துக் கவிதை சொல்லச் சொல்கிறார். பிறகு இருவரும் மீண்டும் நெருங்கப் போகும்போது, ரோகிணிக்குத் திடீரெனப் போன் வருகிறது. அது 275 வீட்டுல வாங்குன ஆர்டருக்காகத்தான் பண்றாங்க என்றுச் சொல்லிச் சமாளித்து, தனக்குத் தண்ணீர் வேண்டும் என்று மனோஜைக் கீழே அனுப்பும்போது, ரோகிணி போனை எடுத்துப் பேச, அது கிரிஷ்ஷின் அழைப்பு. "ஏம்மா இப்படிப் பண்ணிக்கிட்டு இருக்க? எனக்குத் தூக்கம் வரலை, நீங்க வாங்க" என்று கிரிஷ் கூப்பிட, "இப்ப என்னால வர முடியாது கிரிஷ், கண்டிப்பா வரேன்" என்றுச் சொல்லிப் போனை வைக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

ரவியை சீண்டிய நீத்து

மறுபக்கம், நீத்து ஹோட்டல் காலியாக இருக்க, இரண்டு பேர் மட்டும் சாப்பிட்டுவிட்டு, "இப்ப எல்லாம் முன்ன மாதிரி டேஸ்ட்டே இல்லை, உப்பு காரம் எல்லாம் கம்மியா இருக்கு" என்றுச் சொல்லிவிட்டு, "ஃபுட் சரியில்லனா, நீங்க பே பண்ண வேணாம்" என்றுச் சொல்லிச் சென்று விடுகிறார் நீத்து.

ரவியை சந்தேகப்படும் நீத்து

பிறகு ரவியிடம் சென்ற நீத்து, "இப்ப எல்லாம் முன்ன மாதிரி நம்ம ஹோட்டலுக்குக் கஸ்டமர் வர்றது கிடையாது. அதே மாதிரி ஃபுட்டும் சரியில்லைன்னு சொல்றாங்க" என்றுச் சொல்கிறார். அதற்கு ரவி, "இது புரட்டாசி மாசம் நீத்து. ஒரு மாசம் இப்படித்தான் இருக்கும்" என்றுச் சமாளிக்கிறார்.
உடனே நீத்து, "அப்போ உங்க வைஃப் ஸ்ருதி ஹோட்டலுக்கு மட்டும் எப்படி அவ்வளவு பேர் போறாங்க? நீங்க உங்க வைஃப் ஹோட்டல் நல்லா போகணும்னு இப்படிப் பண்றீங்களே?" என்றுச் சொல்லிவிடுகிறார். ரவிக்குக் கோபம் வந்துவிடுகிறது. "நான் எதுக்காகவும், யாருக்காகவும் இப்படிப் பண்ண மாட்டேன். என்னோடத் தொழிலை நான் நேர்மையாத்தான் இருப்பேன்" என்றுச் சொல்லிவிட்டுச் செல்கிறார். உடனே நீத்து, "நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன், தப்பா நினைச்சுக்காதீங்க" என்றுப் பின்னால் சென்று சொல்கிறார்.


விருந்துக்கு 'நோ' சொன்ன விஜயா

முத்து, மீனாவைப் போனில் 'பூ கொடுத்து இருக்கியா மீனா?' என்று கேட்க, "ஆமாம்" என்றுச் சொல்கிறார். "நம்ம முருகனுக்கும் வித்யாவுக்கும் விருந்து வச்சிடலாம்" என்றுப் பேசிக்கொண்டிருக்க, விஜயா இதைக் கவனித்து விடுகிறார். போனை வைத்தவுடன், விஜயா, "யார் வீட்ல யாருக்கு விருந்து வைக்கிறது? அவங்க என்ன நம்ம சொந்தக்காரரா?" என்றுச் சொல்ல, "முருகன் எனக்கு ஃப்ரெண்டு; வித்யா மீனாவுக்கு ஃப்ரெண்டு; பார்லர் அம்மாவுக்கு ஃப்ரெண்டுதானே" என்று முத்துச் சமாளிக்கிறார்.

முத்துவின் முடிவு

விஜயா, "இது என்னோட வீடு. யாருக்கோ விருந்து வைக்க நான் ஒத்துக்க மாட்டேன்" என்று முடிவோடு நிற்க, வேறு வழி இல்லாமல் முத்து, "சரி, ஹோட்டலில் வைத்துக் கொள்கிறேன்" என்றுச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்.

ரோகிணியும் கிரிஷ்ஷின் பாசமும்

பிறகு ரோகிணி, ரூமுக்கு வந்து வித்யாவுக்கு போன் போட்டு, முத்து விருந்து வைக்கப் போகும் விஷயத்தையும், விஜயா சொன்னதையும் சொல்லி, "அவங்க கிட்ட நீ எதுவும் உளறி வச்சிடாத. இந்த மீனாவுக்கு அடுத்தவங்க வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிறதுதான் வேலை" என்றுச் சொல்கிறார். அதற்கு வித்யா, "நான் இதுவரைக்கும் அப்படி ஏதாவது உளறி இருக்கேனா? அதுவும் இல்லாம, உன்னை பத்திச் சொல்லக் கூடாதுன்னு ஸ்ரீராமஜெயம் மாதிரி, ரோகிணி பத்திச் சொல்லக் கூடாதுன்னு எல்லாம் என் மனசுல சொல்லிக்கிட்டே இருக்க முடியாது. நான் ஜாலியா என்ஜாய் பண்றதுக்காகப் போறேன் அவ்வளவுதான்" என்று சொல்லிப் போனை வைக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

கிரிஷ்ஷின் எதிர்பார்ப்பு

பிறகு ரோகிணி, கிரிஷ்ஷைச் சந்திக்க மகேஸ்வரி வீட்டுக்கு வர, கிரிஷ்ஷின் அம்மா, "ரேங்கார்டு பார்த்து நல்ல மார்க் எடுத்திருக்கிற ரொம்ப நல்ல விஷயம்" என்றுச் சொல்லிப் பாராட்டுகிறார். கிரிஷ், SA எழுதச் சொல்லி இருக்காங்கம்மா. ஆனா என்னால எழுத முடியலை" என்றுச் சொல்ல, "ஏன்? நீதான் நல்லா படிக்கிற இல்ல; என்னாச்சு?" என்று கேட்க, கிரிஷ், "அது அப்பாவைப் பத்திச் சொல்லி இருக்காங்கம்மா" என்று சொல்கிறார்.

அதற்கு ரோகிணி கிரிஷ்ஷின் அப்பா இறந்ததாக சொன்ன பின்பு, கிரிஷ், "அப்படி என்றால் நான் மனோஜை அப்பாவாகச் சொல்லட்டுமா?" என்று கேட்கிறார். மேலும், இந்தத் தீபாவளியைத் தன்னுடன் சேர்ந்து கொண்டாடுமாறு கிரிஷ்ஷும், அவருடைய அம்மாவும் ரோகிணியிடம் கேட்கின்றனர். கிரிஷ்ஷுக்காக ரோகிணி தீபாவளியை எப்படிக் கொண்டாடப் போகிறார், விஜயாவின் விருந்துத் தடை என்ன மாதிரியான மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+