சிறகடிக்க ஆசை: ரோகிணியின் சூழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி! மீனா- முத்துவின் வேட்டை! சிக்கிய ஆதாரம்
சென்னை: விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், ரோகிணி மற்றும் சிந்தாமணி கூட்டணி ஆரம்பித்து வைத்த தொடர் சலசலப்புகள், தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன. அப்பாவி மீனாவின் குடும்பத்தைக் குறிவைத்துத் தாக்கும் இந்த வில்லத்தனம், இப்போது அவர்களின் உழைப்பையும், உடைமைகளையும் குறிவைத்துள்ளது.

இன்றைய எபிசோடில் முழுக்க, மீனாவும் சத்யாவும் சேர்ந்து தங்கள் அம்மாவின் பூக்கடையில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்பதை நிரூபிக்க ஆதாரங்களைத் திரட்டுவதில் மும்முரமாக இருந்தனர். பூ வாங்கிய வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரிடமும் கையெழுத்துகளை வாங்கி, கடைக்கு வந்த பழியைத் துடைக்கப் போராடினர்.
கண்ணீரில் மீனா
ஆதாரங்களைச் சேகரிப்பதில் அவர்கள் கவனம் செலுத்திய நேரத்தில், பின்னணியில் மற்றொரு நாடகம் அரங்கேறியது. மீனாவின் பலவீனத்தைக் கண்ட சிந்தாமணியின் அடியாட்கள், கோவிலுக்கு வெளியே நின்றிருந்த மீனாவின் வண்டியைத் திருடிச் சென்றனர்.
ஆதாரங்களுடன் திரும்பி வந்த மீனா, தனது வண்டியைக் காணாமல் அதிர்ச்சியில் நிற்கிறார். தன்னுடைய உழைப்புக்கும், அத்தியாவசியத் தேவைக்கும் பயன்படும் வண்டியைத் திருடியதைக் கண்ட மீனா, வேறு வழியின்றி அழுது புலம்புகிறார்.
முத்துவின் வேட்டை
மீனா ஒரு பக்கம் கடையின் ஆதாரங்களுக்காகப் போராட, இன்னொரு பக்கம் முத்துவும் செல்வமும் சேர்ந்து ரோகிணி கும்பலின் மூலவேரைத் தேடத் தொடங்கினர். மீனாவின் அம்மாவின் கடையைக் காலி செய்யச் சொன்ன அதிகாரியிடம் பேச்சு கொடுக்கச் சென்றபோது, அந்த அதிகாரியின் சுயரூபம் அம்பலமானது.
அந்த அதிகாரி, கடைகளுக்கு அனுமதி வழங்க லஞ்சமாகப் பத்தாயிரம் ரூபாய் பணமும், மாதா மாதம் 2,000 ரூபாய் பணமும், விசேஷ நாட்களில் பூ டெக்கரேஷன் ஆர்டர்களையும் செல்வத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று ஓப்பனாகவே ஆர்டர் போடுகிறார். லஞ்சம் வாங்கும் அந்த அதிகாரியை வசமாக மாட்டிய முத்துவும், செல்வமும் உடனடியாக அவர் மீது கம்ப்ளைன்ட் கொடுக உயர் அதிகாரியைச் சந்திக்கச் சென்றனர். ஆனால், "இதனை ஆபீஸில் வந்து பேசுங்கள்" என்று உயர் அதிகாரியும் அவர்களை வெளியே அனுப்பி வைக்கிறார். இதன் மூலம், லஞ்ச அதிகாரிகள் கூட்டாகச் செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விஜயாவுக்குக் கிடைத்த அங்கீகாரம்
முத்து உயர் அதிகாரியைச் சந்திக்கச் சென்ற அதே இடத்தில், விஜயாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாகச் சொன்ன கோகிலா வந்து சேர்கிறார். இந்தக் குழப்பமான சூழலைப் பார்த்த விஜயா, கோகிலாவிடம் "இது எனது வீடுதான், முத்துவின் விஷயத்தில் உண்மை இருக்கும். அதை என்னவென்று கண்டுபிடி" என்று தனது மகனுக்கு ஆதரவாக முதன்முறையாகப் பேசுகிறார். முத்துவும் நடந்த அனைத்தையும் விஜயாவிடம் சொல்லுகிறார்.
மனோஜின் புதிய ஆரம்பம்
வண்டியைத் திருட்டு கொடுத்த மீனா, வேறு வழியின்றிப் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போகிறார். அங்கே, தனது மாமியார் குறித்த விஷயம் தொடர்பாக அருணும் இன்ஸ்பெக்டருடன் பேசிக்கொண்டிருக்கிறார். மீனா வந்து நடந்ததைச் சொல்ல, கம்ப்ளைன்ட் கொடுக்குமாறு அருண் சொல்கிறார்.
மீனாவின் பிரச்சனைகளை பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் அருண், "இவங்க குடும்பத்துல என்ன நடந்தாலும் என்னைத் தேடி வராங்க... இதை வச்சு எப்படியாவது முத்து மீது உள்ள மரியாதையைக் குறைக்க வேண்டும்" என்று தனக்குள்ளேயே சதித் திட்டம் போடுகிறார்.
மறுபுறம், ஸ்ருதி புதிய ரெஸ்டாரன்ட்டுக்குச் செஃப் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார். அதே சமயம், மனோஜ் புதிய பிரான்ச் ஒன்றைத் திறப்பதற்கு இடம் தேடிப் பேசிக்கொண்டிருக்க, வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால், வழக்கம் போல முத்து கிண்டல் செய்து, தனது பாணியில் அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.
மொத்தத்தில், பைக் திருட்டு மூலம் மீனாவுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனையும், உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய முத்துவும் செல்வமும் மேற்கொள்ளும் போராட்டமும், சீரியலை அடுத்த கட்ட பரபரப்புக்கு நகர்த்தியுள்ளது. ரோகிணிக்கு முத்து எப்படிப் பதிலடி கொடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!












Click it and Unblock the Notifications