சிறகடிக்க ஆசை: முத்துவை அவமானப்படுத்த பங்க்ஷன் வைத்த ஸ்ருதி அம்மா! ஆனால் மாலை யாருக்கு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதியின் அம்மா முத்துவை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் வைக்கிறார். ஆனால் தற்போது அந்த பங்க்ஷன் நடைபெற்றிருக்கும் நிலையில் அதில் நடந்த சில கலாட்டாவான நிகழ்வுகளை அந்த சீரியலில் முத்துவாக நடிக்கும் நடிகர் வெற்றி வசந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்து இருக்கிறார்.

நடிகர் வெற்றி வசந்த்திற்கு நேற்று பிறந்த நாள் அதற்காக ரசிகர்களும் சீரியல் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெற்றி வசந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.

Siragadikka aasai serial actor Vetri Vasanth birthday celebration video

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நாம ஒன்னு நினைக்க தெய்வம் வேறு ஒன்று நினைக்கும் என்பது சொல்வார்கள். அதுபோலத்தான் இப்போது கூட சிறகடிக்க ஆசை சீரியலில் நடந்திருக்கிறது. இந்த சீரியலில் ஸ்ருதியின் அம்மா முத்துவை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடத்த வேண்டும் என்று சொல்கிறார்.

அதற்கு விஜயா ஸ்ருதிக்கு மட்டுமல்ல ரோகிணிக்கும் பங்க்ஷன் நடத்த வேண்டும் என்று சொல்லி இருந்தார். இப்படியான நிலையில் இப்போது ஸ்ருதி மற்றும் ரோகிணிக்கு தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடைபெற்று இருக்கிறது. ஆனால் இந்த சூட்டிங் முடிவடைந்ததும் அதே இடத்தில் முத்துவிற்கு சீரியல் தரப்பினர் அனைவருமே கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.

இதை இரண்டையும் சம்பந்தப்படுத்தி ரசிகர்கள் முத்து சார்பாக ஸ்ருதி அம்மாவை திட்டி வருகிறார்கள். சீரியல் என்பது வேறு நிஜ வாழ்க்கை என்பது வேறு என்பதை மறந்து போன சிலர் முத்துவை அவமானப்படுத்த பார்த்தீங்க ஆனால் இப்போ முத்துக்கு தான் இங்கே மரியாதை கிடைத்திருக்கிறது என்று சிலர் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த சீரியலில் அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் தான் ரோகிணியின் பியூட்டி பார்லர் ரகசியம் விஜயாவிற்கு தெரிய வந்திருக்கிறது. அது பெரிய அளவில் பூகம்பத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் விஜயாவின் இன்னொரு முகத்தை ரோகிணி பார்த்து இருக்கிறார். இப்படியான நிலையில் இனி ரோகிணி மற்றும் ஸ்ருதியின் தாலி பிரித்துக்கட்டும் ஃபங்ஷனில் ரோகிணியின் அப்பா கண்டிப்பாக வரவேண்டும் என்று விஜயா கூறி இருக்கிறார்.

இதனால் இந்த ஃபங்ஷன் நடைபெறுமா இதற்கு ரோகினி என்ன பிளான் பண்ணப் போகிறார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இப்போது வெற்றி வசந்த் வெளியிட்ட வீடியோவில் ரோகிணி மற்றும் ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடைபெற்றிருக்கிறது. இருவரும் கழுத்து நிறைய நகைகளோடும் கன்னத்தில் சந்தனத்தோடும் இருப்பதால் இந்த ஷூட்டிங் முடிவடைந்து விட்டதா என்று ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் அந்த கூட்டத்தில் யார் ரோகிணி அப்பாவாக நடிக்க வந்துருப்பார் என்றும் ரசிகர்கள் தேடி வருகிறார்கள். ஆனால் அதில் அப்படி யாரும் காணப்படவில்லை என்பதால் ரோகிணி இந்த முறையும் அப்பா பிஸியாக இருக்கிறார் என்று ஏமாற்றி விட்டாரா? என்பது கேள்வியாக இருக்கிறது. எப்படியோ ஒரு பக்கம் முத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும் இன்னும் ஒரு சில வாரங்கள் கழித்து ஒளிபரப்பாகும் எபிசோட்டில் காட்சிகளை இப்போது இணையத்தில் கசிய விட்டு விட்டார்.

இதை வைத்து இப்போது இந்த சீரியல் பற்றி அதிகமான பேச்சு எழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சில தினங்களாகவே இந்த சீரியலில் ஒவ்வொருவருக்காக பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்புதான் இந்த சீரியலில் சத்யாவாக மீனாவின் தம்பி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அதற்குப் பிறகு மனோஜின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இப்போ முத்துவின் பிறந்தநாளும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். சீரியல் ஒரு பக்கமாக விறுவிறுப்பான கதையோடு டிஆர்பியில் முதலிடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் இவர்கள் பிறந்த நாள் கொண்டாட்ட அலப்பறை வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+