சிறகடிக்க ஆசை விஜயா எமோஷனல்.. ஆசிட் அடிச்சிடுவேன்னு சொல்றாங்க! என்னை பார்த்து மகன் அழுதுட்டான்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா கேரக்டரில் நடிகை அனிலா ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் இந்த சீரியலில் நடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார்.
அதோடு முப்பத்தி மூன்று வருடங்களாக தான் சினிமா துறையில் இருந்தாலும் இதில் தான் அனுபவித்த பிரச்சினைகள், இப்போது மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் பெயர் போன்றவற்றைப் பற்றியும் அந்த பேட்டியில் அனிலா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் விஜயாவிற்கு சீரியலில் அவருடைய கேரக்டரை பார்த்து அதிகமான நெகட்டிவ் இருந்து வருகிறது. ஆனாலும் பலர் அவருடைய நடிப்பை பாராட்டியும் வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் விஜயாவாக நடிக்கும் நடிகை அனிலா ஸ்ரீகுமார் பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த பேசுகையில், நான் எத்தனையோ மொழிகளில் நடித்திருக்கிறேன். ஆனால் எனக்கு தமிழில் தான் அதிகமான கம்பர்டபிள் இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் எனக்கு கொடுக்கும் வரவேற்பை பார்க்கும்போது நான் உண்மையில் ரொம்பவே சந்தோஷப்படுகிறேன்.

நான் 33 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். ஆனால் எனக்கு இதுவரைக்கும் எந்த கேரக்டரிலும் கிடைக்காத பிரபலம் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா கேரக்டரால் கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் பலர் என்னை எளிமையாக அடையாளம் கண்டு விடுகிறார்கள். பலர் நான் வெளியே போகும்போதெல்லாம் என்னோடு வந்து போட்டோ எடுக்கிறார்கள். ஆனால் இன்ஸ்டாவில் வீடியோ போட்டால் ஒரு சிலர் என்னை தீட்டி கமெண்ட் போடுகிறார்கள்.
நீங்க ஏன் எப்போதும் இப்படியே இருக்கிறீங்க என்று கேட்கிறார்கள். அதோடு மீனாவை ஏன் நீங்க பாடாய் படுத்துறீங்க என்று சொல்கின்றனர். அது போல ஒரு சிலர் உங்களை நேரில் பார்த்தால் நான் "ஆசிட் அடித்து விடுவேன்" என்று மிரட்டுகிறார்கள். இது ஒரு விதத்தில் சிரிப்பாக இருந்தால் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது என்று சிரித்தப்படியே கூறுகிறார். அதோடு என்னுடைய கணவருக்கு நடிக்க வேண்டும் என்று ரொம்பவே ஆசை.

ஆனால் அவர் ப்ரொடக்ஷனில் பிஸியாக இருக்கிறார். அதுபோல என்னுடைய மகள் இப்போது படித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவளுக்கு நடிப்பு எல்லாம் கொஞ்சம் கூட விருப்பமில்லை. என்னுடைய மகனுக்கு நடிப்பதற்கு ரொம்பவே விருப்பம். நானும் அவனும் மலையாளத்தில் ஒரு ஷார்ட் பிலிம்யில் நடித்தோம். அது ஒரு பாடல் கவிதை வரியை வைத்து வரும். அந்த ஷார்ட் பிலிம்யில் என்னுடைய மகன் இறந்து போவது போல காட்சிகள் இருக்கும்.
அப்போது அவன் அந்த சீனுக்காக தூங்கி விட்டான். நான் மகன் இறந்த தூக்கத்தில் அழுவது போன்ற காட்சியில் நானும் அழுது முடித்துவிட்டு, சரி அவன் தான் தூங்குகிறானே தூங்கட்டும் என்று சொல்லி நான் சூட்டிங் கிளம்பி வந்து விட்டேன். அவன் முழித்து பார்த்ததும் சூட்டிங் முடிந்து விட்டது என்பதை தெரிந்து காட்சிகளை போட்டு பார்த்திருக்கிறான். அப்போது நான் அழுததை பார்த்து அவன் அழுது விட்டான்.

என்னுடைய அம்மாவை இப்போது பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லி அழுதுவிட்டான். நான் அழுததை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பிறகு நான் நேரில் சென்று அவனை சமாதானப்படுத்தி இருந்தேன். ஆனால் அவனுக்கு தான் தமிழ் சீரியலில் நடிக்க வேண்டும் என்று தான் ரொம்பவும் ஆசை. சீக்கிரத்தில் அவனுடைய ஆசை நிறைவேறும் என்று நினைக்கிறேன் என்று அனிலா பேசி இருக்கிறார்.
அதுபோல அதே பேட்டியில் நாங்கள் சூட்டிங்ஸ் பாட்டில் எல்லோரும் எப்போதுமே ஜாலியாகத்தான் இருப்போம். சாட் என்று சொல்லி சூட்டிங் தொடங்கிய பிறகு தான் நாங்கள் எங்களுக்கு என்ன கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த கேரக்டர் படி மாறுவோம். ஆனால் நாங்கள் ஜாலியாக இருப்பதை பார்த்து எங்களை பேட்டி எடுக்க வர்றவங்க எல்லாருமே நீங்க இவ்ளோ ஜாலியா இருக்கீங்களே என்று தான் கேட்பாங்க.
அந்த அளவுக்கு நாங்க எல்லோரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். சில சீரியலில் நடிக்கிறவங்களுக்குள் பிரச்சனை என்றெல்லாம் செய்திகள் வருகிறது. ஆனால் எங்கள் சீரியலில் அப்படி இதுவரைக்கும் இல்லை. அதனால் யார் கண்ணும் பட்டுவிடக்கூடாது நாங்கள் இப்படியே இருக்க வேண்டும் என்று கலகலப்பாக அந்த பேட்டியில் அனிலா ஸ்ரீகுமார் பேசியிருக்கிறார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications