ஸ்ரீதேவி எங்க அக்கா தான்.. இறப்பதற்கு முன்பு சொன்ன வார்த்தை.. எமோஷனலான சிறகடிக்க ஆசை பார்வதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கேரக்டரில் நடிகை பாக்கியலட்சுமி நடித்த வருகிறார். இவர் நடிகை ஸ்ரீதேவி தன்னுடைய உறவினர் என்று அவருடைய நடிப்பை பார்த்து தான் நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்றும் சில விஷயங்களை கூறி இருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் டிவியில் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார்கள். அதில் பார்வதியும் பலருடைய ஃபேவரிட் ஆக மாறி இருக்கிறார். விஜயா என்ன தான் தப்பு செய்தாலும் விஜயாவிற்க்கு துணையாக இருக்கும் பார்வதி சில நேரங்களில் விஜயா செய்யும் தப்பை முகத்துக்கு நேராகவே பேசி விடுகிறார்.

television siragadikka aasai serial vijay tv

சிறகடிக்க ஆசை சீரியலில் இயக்குனரான குமரன் தான் இயக்கம் சீரியல்களில் எல்லாம் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அந்த வகையில் தான் இந்த சீரியலிலும் கொடுத்திருக்கிறார். அதிலும் இந்த சீரியலில் முத்துவிற்கு நண்பராக செல்வமும், விஜயாவிற்கு தோழியாக பார்வதியும், ரோகிணிக்கு தோழியாக வித்தியா என்று பல நண்பர்கள் கூட்டணி இந்த சீரியலில் இருக்கிறது.

அதே நேரத்தில் பார்வதியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகையின் பெயர் பாக்கியலட்சுமி இவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் 80ஸ் காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதிலும் தற்போது முதலமைச்சர் ஆக இருக்கும் முக ஸ்டாலின் நடித்த திரைப்படத்தில் கூட பாக்கியலட்சுமி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருக்கும் இவர் இப்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார். சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக தனக்கு பெரிய அளவில் பெயர் கிடைத்திருப்பதாகவும் நான் வெளியே செல்லும்போதெல்லாம் நீங்க சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கிறவங்க தானே என்று கேட்பதாகவும் சந்தோஷமாக பேசியிருக்கிறார்.

அதோடு நான் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்ட காரணம் நடிகை ஸ்ரீதேவி தான் என்றும் கூறியிருக்கிறார். அதாவது ஸ்ரீதேவி நடிகை பாக்கியலட்சுமியின் உறவினர் தானா? பாக்கியலட்சுமியின் அப்பாவின் நெருங்கிய உறவினர் ஸ்ரீதேவி என்பதால் அவரை குழந்தையாக இருக்கும் போது இருந்தே பாக்கியலட்சுமிக்கு தெரியுமாம். மார்டன் உடையதாக இருந்தாலும் சரி ட்ரடிஷனல் உதவியாக இருந்தாலும் சரி அது ஸ்ரீதேவிக்கு கச்சிதமாக பொரிந்து இருப்பதை பார்த்து அவரைப்போல நடிக்க வேண்டும் என்று பாக்கியலட்சுமி ஆசைப்பட்டு இருக்கிறார்.

அது குறித்து ஸ்ரீதேவியிடம் வெளிப்படையாகவும் பேசினாராம் அப்போது ஸ்ரீதேவி நீ இந்த நேரத்தில் நடிக்க வர வேண்டாம். முதலில் படிப்பை முடித்த பிறகு நடிக்கலாம் என்று சொல்லிவிட்டாராம். அதற்குப் பிறகு ஸ்ரீதேவிக்கு தெரியாமலேயே அவருடைய பெரியப்பா மூலமாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை தெரிந்து கொண்ட ஸ்ரீதேவி, அவ்வளவு சொல்லியும் நீ கேட்காமல் நடிகையாகி இருக்க...: ஆனாலும் சரி வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

அதுபோல ஸ்ரீதேவி இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு அவரை ஏர்போர்ட்டில் எதார்த்தமாக பார்த்தேன் ஆனால் அந்த நேரத்தில் நின்று பேசுவதற்கு முடியவில்லை. அதனால் இருவரும் ஹாய் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டோம். ஆனால் அதனை தொடர்ந்து சில வாரங்களில் அவருடைய இறப்பு செய்தி கேள்விப்பட்டதும், எனக்கு ரொம்பவும் அதிர்ச்சியாக இருந்தது. ஸ்ரீதேவி அக்காவின் இறப்பை இப்போதும் கூட என்னால் நம்பவே முடியவில்லை வருத்தமாகத்தான் இருக்கிறது என்று பாக்கியலட்சுமி அந்த பேட்டியில் எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+