எங்க அப்பாவும் இப்போ உயிரோட இல்லை.. நிஜத்திலும் என் நிலைமை இதுதான்! கண்கலங்கிய சிறகடிக்க ஆசை மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை கோமதி பிரியா நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் விஜய் டிவியில் விருது வாங்கும் போது தன்னுடைய குடும்பத்தை பற்றி கண்கலக பேசியிருக்கிறார். அதோடு விஜய் டிவியில் ஆரம்பத்தில் பார்வையாளராக வந்து இப்போது முக்கிய கதாநாயகியாக மாறி இருக்கும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
கடினமான உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எப்படியும் நாம் வெற்றி பெற்று விடலாம் என்று பலர் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை கோமதி பிரியாவும். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சிறகடிக்க ஆசை சீரியலின் டப்பிங் சீரியலில் இவர்தான் கதாநாயகியாக இருக்கிறார்.

ஏற்கனவே வேலைக்காரன் சீரியலில் இவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் இப்போது கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த வருடத்தில் விஜய் டிவியின் அவார்டு ஃபங்ஷனில் இவருக்கு சிறந்த கதாநாயகிக்கான விருது கொடுக்கப்பட்டது. அப்போது அந்த விருதை கையில் வாங்கியதும் கோமதி பிரியா இந்த மீனா கேரக்டர் என்னுடைய நிஜ வாழ்க்கையிலும் ரொம்பவே மேட்ச் ஆனது.
காரணம் இந்த சீரியலில் எப்படி எனக்கு அப்பா இல்லையோ அதுபோல நிஜத்திலும் எனக்கு அப்பா இல்லை. ஆரம்பித்தில் நாங்க நல்லா இருக்கணும்னு எங்க அப்பா ரொம்ப ஆசைப்பட்டாரு. ஆனால் அவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து போயிட்டாரு. என்னுடைய தம்பி மற்றும் தங்கைகளை என்னுடைய அம்மா தான் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தாங்க. தனியாக எங்க அம்மா எங்களுக்காக பல கஷ்டப்பட்டு இருக்காங்க.

அவங்க கஷ்ட படக்கூடாது என்பதற்காக தான் நான் சென்னைக்கு வேலைக்கு வந்து இருந்தேன். அதோடு சீரியலில் நடிக்க வேண்டும் என்றும் அதற்காகத்தான் முயற்சி செய்தேன். யாரா இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு உடனே அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்து விடாது. அதுபோலத்தான் எனக்கும் வாய்ப்புகள் ஆரம்பத்தில் கிடைக்க தாமதமானது. ஆனால் இப்போது எனக்கு மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
இதற்கு காரணம் சிறகடிக்க ஆசை சீரியலும் விஜய் டிவியும் தான் என்று அந்த பேட்டியில் கண்கலங்க பேசியிருக்கிறார். அதோடு அந்த மேடையில் கோமதி பிரியா கையில் விருதை வாங்கியதும் அவருடைய அப்பா ஆசீர்வாதம் செய்வது போன்று ஏ ஐ யில் எடிட் செய்து இருக்கிறார்கள். அதைப் பார்த்து கோமதி பிரியா நெகிழ்ந்து போயிருக்கிறார். அதுபோல கோமதி பிரியா விஜய் டிவி நிகழ்ச்சியில் பார்வையாளராக வந்த போது எடுத்த புகைப்படமும் இப்போது மேடையில் சிறந்த கதாநாயகியாக விருது வாங்கி எடுத்த புகைப்படத்தையும் இணைத்து அவருடைய ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.
-
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications