சிறகடிக்க ஆசை சீரியல் தமிழ்செல்வியின் நிஜ கணவர் போலீஸ்.. ஆனால் இவ்வளவு கஷ்டங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் அம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தமிழ்செல்வி பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்ப காலம் மற்றும் தன்னுடைய கணவர் குறித்து பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
பொதுவாக பலர் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் வீட்டில் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள். பல்வேறு பிரச்சனைகளை தாண்டி தான் பல நடிகைகள் என்று புகழின் உச்சத்தில் இருக்கிறார்கள். அதுபோல ஒருவர் தான் நடிகை தமிழ்செல்வி. இவர் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என்று பிரபலமான எந்த சேனலில் சீரியல் இருந்தாலும் அங்கு அம்மா அல்லது அண்ணி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சீரியல் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் டிஆர்பியில் டாப் இடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் அம்மாவாகவும் தமிழ்ச்செல்வி நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர் ஆரம்ப காலகட்டத்தில் பியூட்டிஷியனாக தான் வேலை செய்து இருக்கிறார். அதற்கு பிறகு தான் இவர் சீரியல் நடிகையாக மாறி இருக்கிறார். தமிழ்ச்செல்வி ஆரம்பத்தில் பியூட்டிஷியன் ஆக இருந்தபோது 1996 ஆம் ஆண்டு தான் இவருக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது.

இவருடைய திருமணமே சுவாரசியமானதாக தான் இருந்திருக்கிறது. ரோஜா படத்தில் வருவது போல இவருடைய திருமண அமைந்தது என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது தமிழ்ச்செல்வியின் அக்காவை தான் அவருடைய கணவர் பெண் பார்க்க வந்திருக்கிறார். ஆனால் சில காரணங்களால் தமிழ்ச்செல்வியை அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறியிருக்கிறார்.

தன்னுடைய கணவர் போலீஸ்காரர் என்றும் அவர் ஆரம்பத்தில் டிராபிக் போலீஸ் என்பதால் முதலில் அவரை திருமணம் செய்வதற்கு குடும்பத்தினர் யோசித்து இருக்கிறார்கள். பிறகு திருமணம் நடந்திருக்கிறது திருமணத்திற்கு பிறகு தமிழ்ச்செல்விக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள்.
இவர்களுடைய வாழ்க்கை நார்மலாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் தான் இவர் பியூட்டிஷியன் ஆக வேலை பார்த்த இடத்தில் இவருடைய நெருங்கிய உறவினர் இவரிடம் மேக்கப் செய்ய வரும் போதெல்லாம் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் அதனால் சினிமாவில் வாய்ப்பு தேடுங்கள் இல்லை என்றால் சின்ன திரையில் சேரலாம் என்று சொல்ல இவர் முதலில் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். பிறகு பலர் இதே வார்த்தைகளை சொன்னதும் இவரும் சினிமா மற்றும் சீரியல் வாய்ப்புக்காக முயற்சி செய்திருக்கிறார்.

ஆரம்பத்தில் அவருடைய குடும்பத்தினர் பெரிய அளவில் இதை எதிர்த்து இருக்கின்றனர். கணவரின் குடும்பத்தினரும் திரை வாய்ப்புகள் எல்லாம் வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றனர். அப்போது அவருடைய கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டாராம் பிறகு அவரை சமாதானம் செய்து தன்னுடைய கனவை சொல்ல அவரும் சரி என்று அவருக்கு தமிழ்ச்செல்விக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார். அப்படித்தான் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் முதல் முதலில் சீரியலில் நடித்திருக்கிறார்.
அதற்குப் பிறகு சட்டப்படி குற்றம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து சின்ன சின்ன கேரக்டர்கள் கிடைக்க அதில் எல்லாம் நடிக்க தொடங்கி இப்போது தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய்யோடு இணைந்து நடிக்கும் நிலையில் இருக்கிறார். இப்போது இவருக்கு வீட்டில் எல்லோரும் சப்போர்ட் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஜில்லா படத்தில் விஜய் உடன் நடிக்கும் போது அவரிடம் பேசுவதற்கு முதலில் தயங்கி இருந்திருக்கிறார். பிறகு குட் மார்னிங் என்று சொன்னதும் விஜய் உடனே எழுந்து நின்று இவரிடம் குட் மார்னிங் சொல்லி இருக்கிறார் அதை இன்று வரை மறக்க முடியாது என்று தமிழ்ச்செல்வி பேசி இருக்கிறார். அதுபோல தன்னுடைய கணவரின் புகைப்படத்தையும் சமீபத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications