சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial April 10 Episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் பத்தாம் தேதிக்கான எபிசோடில் யாரும் எதிர் பார்க்காத சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதுவரைக்கும் முத்து மீனா பற்றி அசிங்கப்படுத்திக் கொண்டே இருக்கும் விஜயா இப்போது இருவரையும் பற்றி பெருமையாக பேசி இருக்கிறார். ஆனால் அதிலும் ஒரு சுயநலம் இருக்கிறது. மறுபக்கத்தில் எலக்சனும் பரபரப்பாக நடந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு (Siragadikka Aasai serial today episode) ஆரம்பத்தில், மீனா பூ கட்டும் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நான் இந்த தேர்தலில் ஜெயித்ததால் உங்கள் குழந்தைகளுடைய படிப்புக்கு உதவி செய்வேன். அதேபோல நமக்கு மழை காலத்தில் பூக்கள் வராது. அந்த நேரத்தில் கவர்மெண்டிடம் உதவித்தொகை வாங்கி தர முயற்சி செய்வேன் என்று பல திட்டங்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவர் பேசுவதை கேட்டு அங்கிருந்த எல்லோரும் நாங்க உனக்கு தான் கண்டிப்பா ஓட்டு போடுவோம் என்று சொல்கின்றனர்.
சிந்தாமணியின் மாஸ்டர் பிளான்
இதைத் தெரிந்து கொண்ட சிந்தாமணி தன்னுடைய ஆட்களிடம் என்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது ரோகிணியை பகடைக்காயாக மாற்றி வெற்றி பெற வேண்டும் என்று பிளான் போட்டு ரோகிணியை வீட்டிற்கு கூப்பிடுகிறார். ரோகிணி வீட்டிற்கு வந்ததும் நீங்க எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கீங்க உங்களுக்காக என்ன வேணாலும் பண்ணுவேன் என்று சொல்கிறார்.
உடனே சிந்தாமணி ஆனா உன்கிட்ட ரெண்டு லட்சம் பணம் கொடுக்கிறேன் அதை நான் லிஸ்ட் போட்டு வைத்திருக்கிற மக்களிடம் கொடுத்துவிடு. கண்டிப்பா எனக்காக ஓட்டு போட சொல்லிவிடு ஆனா நீ இதை நேரடியா செய்யாமல் மறைமுகமாக கொடுக்க வேண்டும். முத்துவுக்கு தெரியாமல் பார்த்துக்கொள் என்று சொன்னதும் ரோகிணியும் எனக்கும் அந்த மீனா இந்த தேர்தலில் ஜெயிக்க கூடாது அதனால நான் என்னால முடிஞ்ச வரைக்கும் இதில் வேலை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு போகிறார்.
விஜயாவின் மாற்றம்
மறுபக்கத்தில் விஜயாவின் உறவு பெண் ஸ்வேதா மனோஜ்க்கு ஒரு பெண் பார்த்து வைத்திருக்கிறார். அந்த பெண் குடும்பத்துடன் விஜயா குடும்பத்தை வீடியோ காலில் பேச வைக்கிறார். அப்போது விஜயா தன்னுடைய குடும்பத்தை பற்றி ரொம்பவும் பெருமையாக பேசுகிறார். முத்துவை பற்றி பேசும்போது இவன் சாதாரண டிரைவர் இல்ல மூணு வண்டி வச்சிருக்கான், எப்பவாவது தான் வண்டி ஓட்டுவான். நல்ல பிசினஸ் போயிட்டு இருக்கு என்று சொல்கிறார்.
பிறகு மீனாவை பற்றி பேசும்போது என்னோட மருமகள் மீனா சாதாரண பூ கட்டுறவ கிடையாது. நிறைய மண்டபங்களுக்கு டெக்ரேசன் செஞ்சு கொடுக்குறா.. நல்லா பிசினஸில் வளர்ந்துட்டு இருக்கிறா என்று பெருமையாக சொல்கிறார். இதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியாக பார்க்கின்றனர்.
பிறகு மனோஜியுடன் அந்த குடும்பத்தினரும் பேசுகின்றனர். கடைசியாக மாப்பிள்ளை பிடித்து விடுகிறது என்று சொல்கிறார்கள். அடுத்ததாக கல்யாணத்தை பற்றி பேசும்போது அண்ணாமலை மனோஜ்க்கு ஏற்கனவே விவாகரத்து வழக்கு போய்க்கொண்டிருக்கும் விஷயத்தை சொன்னதும் சரி எங்கேஜ்மென்ட் முதலில் முடித்து விடுவோம். கல்யாணத்திற்கு நோன்பு விவாகரத்து பண்ணிடுங்க என்று அமெரிக்க குடும்பம் சொல்ல விஜயாவும் சரி என்று சொல்கிறார்
தேர்தல் ஆரம்பம்
மறுநாள் காலையில் தேர்தல் தொடங்குகிறது. ஒவ்வொருவராக போயிட்டு வாக்கு போட ஆரம்பிக்கிறாங்க. எல்லாரும் தனித்தனியா சென்று வாக்குகளை பதிவு செய்கிறாங்க. அதே நேரத்தில் மீனாவும் சிந்தாமணியும் இருவரும் சேர்ந்து போயிட்டு தங்களோட வாக்குகளை செலுத்துறாங்க.
வாக்குப்பதிவு முடிஞ்சதும், இருவரும் ரிசல்ட் தெரிஞ்சிக்கணும்னு ஆவலோட காத்திருக்கிறாங்க. அதுக்கப்புறம் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பெட்டியில இருக்கும் வாக்குச்சீட்டுகளை எண்ண ஆரம்பிக்கிறாங்க. வெளியே முத்து மீனா அவருடைய குடும்பம் எல்லாம் காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் சிந்தாமணி இவர்களை பார்த்து முறைத்தப்படி நின்று கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications