மனோஜை வச்சி ரோகிணி போட்ட செம பிளான்.. ஆனால் மீனா கேட்ட கேள்வி.. முத்துவுக்கு தெரிய வந்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 12ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ரோகிணி தன்னிடம் பணம் கேட்ட மனோஜை விஜயாவிடம் பணம் கேட்க சொல்லி ஏத்தி விட, வீட்டிற்குள் நடந்த பஞ்சாயத்தில் மீனா விஜயாவுக்கு சரியான பதிலடி கொடுக்கிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் விஜயா வீட்டுக்கு வந்த மகாலட்சுமியும் திரும்ப அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டா, பணத்தோடு வர இருந்த குபேரனும் ஜெயிலில் கிடைக்கிறார். ஆனால் ஒன்றும் இல்லாதவள் இந்த வீட்டில் இருக்கா என்று மீனாவை சாடைமாடையாக திட்ட, அதற்கு மீனா நீங்க என்னதானே பேசுறீங்க என்று கேள்வி கேட்க, அதற்கு ஆமான்டி உன்ன தான் பேசுறேன் என்று விஜயா சொல்ல அதற்கு மீனா நான் என்னத்த பண்ணுனேன் என்று கேட்கிறார்.

Siragadikka aasai serial April 12th promo and episode full update

அதற்கு விஜயா ஸ்ருதி இந்த வீட்டை விட்டு போவதற்கு நீ தான் காரணம் என்று பழியை தூக்கி போட, மீனா இது நல்ல கதையாக இருக்கே... அவங்க கோச்சிட்டு போனதுக்கு நான் எப்படி காரணமாக முடியும் என்று கேட்கிறார். அதற்கு விஜயா நீ மட்டும் அவ ரூமுக்கு போய் அந்த செயினை எடுக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனையே வந்திருக்காது என்று சொல்ல, அதற்கு மீனா ஸ்ருதியை கூப்பிட தான் நான் போனேன். செயினை திருடவில்லையே என்று சொல்ல,

அதற்கு விஜயா நீ எதுக்கு போனியோ யாரு பார்த்தா? என்று சொல்ல, அதற்கு முத்து பார்க்கலைன்னா அப்போ அதை பத்தி பேசக்கூடாது என்று பதிலடி கொடுக்கிறார். அதற்கு அண்ணாமலை விஜயா உன்னால இந்த வீட்ல நிம்மதியே இல்ல... யாரையும் நிம்மதியா இருக்க விடமாட்டியா? என்று திட்ட அதற்கு விஜயா இவங்களால தான் இந்த வீட்டில நிம்மதியே இல்லாம போயிடுச்சு என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial April 12th promo and episode full update

அதற்கு மீனா ஸ்ருதி கோச்சுட்டு விட்டு விட்டு போயிட்டாங்கனு நீங்க என்ன பண்ணுனீங்க அவங்கள திரும்ப இந்த வீட்டுக்கு வர வைக்கிறதுக்காக ஏதாவது முயற்சி பண்ணுனீங்களா? என்று கேள்வி கேட்டு நான் அவங்கள நேர்ல போய் பார்த்து பேசிட்டு வந்தேன் என்று சொல்ல, விஜயா அதிர்ச்சியாகி நிற்கிறார். அதற்கு அண்ணாமலை நீ போய் ஸ்ருதியை பார்த்தியா? என்னம்மா சொன்னா என்று கேட்க, அதற்கு மண்டபத்தில் நடந்த எல்லாவற்றையும் சொல்லி வீட்டிற்கு வர சொல்லிட்டு வந்திருக்கிறேன். அவங்களும் வருவாங்கன்னு நினைக்கிறேன் என்று சொல்கிறார்.

பிறகு முத்து, மீனா ரூமுக்குள் இருக்கும்போது என்கிட்ட சொல்லாமலேயே பல சமாதான வேலைகள் நடக்குது என்று கேள்வி கேட்க, அதற்கு மீனா நீங்க மட்டும் என்கிட்ட சொல்லிட்டா ரவியை பார்த்தீங்க என்று மடக்குகிறார். அவங்க ரெண்டு பேரும் இந்த வீட்டுக்கு வரணும் அப்பதான் வீடு சந்தோஷமா இருக்கும் என்று மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார். அதே மாதிரி ரோகிணி ஓட அப்பாவும் வரணும் என்று மீனா சொல்ல எனக்கு ரோகிணி அப்பா விசயத்தில் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.

Siragadikka aasai serial April 12th promo and episode full update

அதுவும் அவருடைய மாமா வந்துட்டு போன பிறகு மேலும் வலுவாகி இருக்கிறது என்று முத்து சந்தேகப்படுகிறார். மறுபக்கத்தில் ரோகிணி பியூட்டி பார்லரில் இருக்கும்போது அவருடைய பிஏ அங்கு வந்து எனக்கு கல்யாணம் வச்சிருக்கேன். பொண்ணெல்லாம் பார்த்தாச்சு ஒரு லட்ச ரூபாய் வேணும் என்று ரோகிணியை மிரட்ட அதற்கு ரோகிணி தர முடியாது என்று சொல்கிறார்

அதற்கு பிஏ, நான் எனக்கு பார்த்திருக்கிற பொண்ணு கிட்ட எனக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு பையன் இருக்கிறான் என்று உண்மையை சொல்லித்தான் கல்யாணம் பண்ண போறேன். உன்னை மாதிரி ஏமாற்றி கல்யாணம் பண்ணல. நீ எனக்கு பணம் தரலைன்னா நான் உன் மாமனார், மாமியார், புருஷன் கிட்ட உன்னை பத்தி எல்லா விஷயத்தையும் சொல்லிடுவேன் என்று மிரட்டி கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் மனோஜ் பார்லருக்கு வந்து விடவே பின் வாசல் வழியாக பணம் தருகிறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு மனோஜ் ரோகிணியிடம் கன்னடா வேலைக்கு போவதற்காக பணம் வேண்டும் என்று கேட்க, அதற்கு ரோகிணி கோபத்தில் எல்லோரும் பணம் பணம்னு கேட்டா நான் என்ன பண்ணுவேன்? நான் என்ன பணம் காய்க்கும் மரமா? என்று கோபப்படுகிறார். அதற்கு மனோஜ் யாரு உன்கிட்ட பணம் கேட்டா என்று கேட்க,

Siragadikka aasai serial April 12th promo and episode full update

அதற்கு பேங்கில் இருந்து போன் பண்ணாங்க என்று வித்யா சமாளிக்கிறார். பிறகு ரோகிணி உங்க வீட்டில உனக்கு பணம் வேணும்னு கேளு முத்துவுக்கு மட்டும் பத்திரத்தை அடமானம் வச்சி கார் வாங்கி கொடுத்தாங்கல்ல உனக்கும் பணம் கேளு என்று சொல்ல இந்த ஐடியாவும் நல்லா தான் இருக்கு என்று மனோஜ் கிளம்பி போய் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணாமலையை எழுப்பி விஜயாவையும் பக்கத்தில் உட்கார வைத்து தான் கனடா வேலைக்கு போவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial April 12th promo and episode full update

அதற்கு முத்து இவன் அடிபோடுவதை பார்த்தால் ஏதோ பெருசா ஆப்பு வச்சிருக்கான்னு தெரியுதே என்று என்று சொல்ல, அதற்கு மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+