விஜயாவுக்கு இந்த அவமானம் தேவையா? பணத்துக்காக இப்படி மாறிட்டாரே! ரோகிணிக்கு வந்த சிக்கல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 18ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் விஜயாவின் வீட்டிற்கு வந்த ஸ்ருதி அம்மா சுதா விஜயாவை பூக்காரி என்று கேவலப்படுத்த அதனால் கோபமான விஜயா முக்கிய முடிவு எடுக்கிறார். அதே நேரத்தில் ரோகிணி ஸ்ருதி மற்றும் மீனாவை அவர்களுடைய கணவரிடம் சண்டை போடுவதற்காக முயற்சி செய்ய கடைசியில் பல்பு வாங்குகிறார் .
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பித்தில் ஸ்ருதி மீனாவிடம் டீ கேட்க மீனா போட்டு கொடுக்க ரோகிணியும் அங்கு வந்து டீ குடிக்கிறார். அப்போது ரோகிணி இவ்வளவு சீக்கிரமாக ஸ்ருதி இங்க வருவீங்கன்னு எதிர்பார்க்கல என்று சொல்ல, அதற்கு ஸ்ருதி ஏன் நான் வந்தது உங்களுக்கு பிடிக்கலையா? என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி அப்படி எல்லாம் இல்ல, நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம் தான்.

உங்க அப்பாவை முத்து அடிச்சி இருக்குறாரு. அந்த கோபம் உங்களுக்கு இல்லையா? முத்து உங்க வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்பார்னு நினைத்து இருந்தேன் என்று சொல்ல, அதற்கு மீனா அவர் எதற்கு மன்னிப்பு கேட்கணும்? அப்போ ஸ்ருதியின் அப்பா என்னை பத்தி பேசினதுக்கு மன்னிப்பு கேட்டாரா? என்று கேட்டால் அதற்கு ரோகிணி, ஸ்ருதியிடம் என்ன ஸ்ருதி உங்க அப்பா மன்னிப்பு கேட்கணும்னு சொல்றாங்க என்று கொளுத்தி போட, அதற்கு ஸ்ருதி மீனா சொல்லுறதும் சரி தானே ரெண்டு பேரு மேலையும் தப்பு இருக்கு.
முத்து ஓட கேரக்டர் இதுதான் என்பதை நான் இப்ப புரிஞ்சுகிட்டேன் என்று பதிலடி கொடுக்க ரோகிணி பல்பு வாங்குகிறார். பிறகு ரவி மனோஜ் முத்து மூவரும் மாடியில் சண்டை போட்டுக் கொண்டு போய் இருப்பதை பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா புருஷன் பொண்டாட்டி என்றால் சண்டை வரதான் செய்யும் என்று சொல்ல அதற்கு ரோகிணி ஆமா முத்துவும் மீனாவும் சண்டை போடும்போது நான் கோர்ட்டுக்கு போயிடுவாங்கன்னு நினைத்து இருக்கிறேன் என்று சொல்கிறார்.
அதற்கு மீனா பாசம் இருக்கும் இடத்தில் தான் கோபத்தை காட்ட முடியும். சண்டை போட்டாதான் ஒருத்தர் புரிஞ்சுக்க முடியும் என்று சொல்கிறார். அதோடு ஏன் உங்களுக்கு மனோஜ்க்கு சண்டை வராதா? என்று கேட்க அதற்கு ரோகிணி இல்லை என்று சொல்ல அப்புறம் எதுக்கு உங்க ஹஸ்பண்ட் மேல போய் தூங்குறாரு என்று ஸ்ருதி மடக்கி கேள்வி கேட்கிறார்.
அது சின்ன ஆர்கியூமெண்ட் தான் என்று ரோகிணி சமாளிக்க அதுவும் பைட் தான் என்று சொல்லி பல்பு கொடுக்கிறார். பிறகு மொட்டை மாடியில் கல்யாண வாழ்க்கை பற்றி அண்ணன் தம்பிகள் புலம்பி கொண்டிருக்கும் போது ஸ்ருதி, ரவிக்கு போன் போட்டு எங்க இருக்க தூங்கணும் சீக்கிரமா வா என்று சொன்னதும் ரவி பதறி அடித்து ஓடி வருகிறார். அடுத்து ரோகிணி போன் பண்ணுனதும் மனோஜ் வந்து விடுகிறார்.
பிறகு மீனா போன் பண்ணாததால் முத்துவே மீனாவுக்கு போன் பண்ணி நீ எனக்கு போன் போட்டு இப்ப கீழ வர சொல்லி மிரட்டுற மாதிரி பேசு என்று சொல்லி அடம்பிடிக்க மீனாவும் அப்படியே பேச முத்து சந்தோஷப்படுகிறார். அடுத்ததாக மீனா வெளியே பூ கொடுத்து விட்டு கிளம்ப ஸ்ருதியின் அம்மா சுதா வீட்டுக்கு வருகிறார். அப்போது விஜயாவிடம் ஸ்ருதி இந்த வீட்டுக்கு வர மாட்டேன்னு தான் சொன்னா.
நான் தான் அவளை பேசி அனுப்பி வெச்சேன் என்று டிராமா போட அந்த நேரத்தில் ஒரு பெண் வீட்டிற்கு வந்து விஜயாவிடம் பூ கேட்கிறார். அதற்கு விஜயா நான் பூ கொடுக்க மாட்டேன் மீனா இல்லை என்று சொல்ல, மீனா விடம் நாங்க ஏற்கனவே சொல்லியாச்சு. பிரிட்ஜில் பூ இருக்கும் நீங்க பூவை எடுத்து முழம் போட்டு கொடுங்க என்று சொல்ல விஜயா கடுப்பாகிறார். அதற்கு ஸ்ருதியின் அம்மா சுதா நீங்க முழம் போட்டு பூவை கொடுங்க என்று விஜயாவை நக்கல் செய்கிற மாதிரியே பேசிக் கொண்டிருக்கிறார்.
அதோடு சுதாவும் வெளியே கிளம்பும்போது எனக்கும் 2 மூலம் பூ கொடுங்க என்று பணத்தை கொடுத்து வாங்கிக் கொண்டு செல்கிறார். இதை எல்லாம் பார்த்து ரோகிணி சந்தோஷப்படுகிறார். பிறகு சுதா வீட்டில் இருந்து வெளியே வரும்போது ரவியும், ஸ்ருதியும் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது கையில என்ன பூ என்று ஸ்ருதி கேட்க வீட்டுக்கு வாங்கிட்டு போறேன் சம்பந்தி அம்மா தான் முழம் போட்டு கொடுத்தாங்க. மீனாவுக்கு உதவியா இருக்காங்க என்று சொல்ல, மேலே வந்த ஸ்ருதி பரவால்ல ஆண்ட்டி நீங்க மீனாவுக்கு உதவியா இருக்கீங்க.
கடையில் யாரும் இல்லாமல் இருக்காங்க நீங்க போய் பார்த்துக்கோங்க என்று சொல்லி சொல்கிறார். இதனால் விஜயா பயங்கர கோபத்தில் இங்கும் அங்கும் யோசித்தபடி நடந்து கொண்டே புலம்பி கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரோகிணி இதுதான் சந்தர்ப்பம் என்று விஜயாவை இன்னும் ஏற்றி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications