சிறகடிக்க ஆசை: ரோகிணியால் மாட்டிய விஜயா.. அடி வெளுத்த அண்ணாமலை! கோபத்தில் முத்து செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial April 21, 2026 episode) சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது ரொம்பவே பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று தன்னையே 2026 ஏப்ரல் 21ஆம் தேதிக்கான எபிசோடில், மனோஜும், விஜயாவும் செய்த சதி குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் அண்ணாமலை யாரும் எதிர்பார்க்காத செயலை செய்து இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
(Siragadikka Aasai serial today episode) ஹரிணியும், அவரின் குடும்பத்தாரும் நேராக வந்து விஜயாவை பார்த்து, "இவங்க சீட்டிங் பண்ணிட்டாங்க... இவ்வளவு பெரிய பொய் சொல்லிருக்காங்க" என்று கோபப்படுகின்றனர். அப்போது அண்ணாமலை என்ன நடந்தது என்று விசாரிக்க, அந்த நேரத்தில் தான் ஹரிணி, தான் முன்பு ரோகிணியை சந்தித்த விஷயத்தை எல்லோரிடமும் சொல்ல ஆரம்பிக்கிறார்.
பிளாஷ்பேக் கதை
அப்போது ஒரு பிளாஷ்பேக் காட்டுகின்றனர். அதில் ரோகிணி பார்லருக்கு போன ஹரிணியிடம் கண்ணீர் விட்டுக்கொண்டே பேசுகிறார். "நான் மனோஜை உயிருக்கு உயிராக காதலித்தேன்... ஆனா அவங்க என்னைய ஏமாத்திட்டாங்க" என்று கொஞ்சம் பில்டப் அதிகப்படுத்தி, இன்னும் சில விஷயங்களையும் சேர்த்து பேசுகிறார். அவர் அழுதுகொண்டே அந்த விஷயங்களை சொன்னதால், ஹரிணியும் அதை முழுக்க உண்மையென்றே நம்பிவிடுகிறார். இதுதான் இப்போது பெரிய பிரச்சனையாக மாறி எல்லாரையும் மாறி இருக்கிறது.
இதற்குப் பிறகு ஹரிணியின் பெற்றோர் மனோஜிடம், "கண்டிப்பா உங்களுக்கு டைவர்ஸ் கிடைக்காது. ரோகிணி டைவர்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ரோகிணி தான் உங்களுக்கு கரெக்டா இருக்கும். அவ உங்களை அந்த அளவுக்கு காதலிக்குறா" என்று சொல்கின்றனர்.

ரோகிணி பற்றிய உண்மை
அதற்குள் விஜயா உடனே, "அதெல்லாம் இல்ல, ரோகிணி சொன்னதெல்லாம் பொய்" என்று சமாளிக்க முயற்சி செய்கிறார். ஆனால் ஹரிணியின் பெற்றோர் அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை. "இப்படி ஏமாத்திட்டீங்களே!" என்று நேராக மீண்டும் கேட்கிறார்கள். அதோடு அவர்கள் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் வெளியில் சொல்லிவிடுகிறார்கள்.
"6 மாசம் டைவர்ஸ் கிடைக்க வாய்ப்பில்லை. அதுவரை ரோகிணிக்கு மாதம் மாதம் 25 ஆயிரம் கொடுக்கணும்னு கோர்ட் ஆர்டர் போட்டிருக்காங்க. நாங்க அந்த கோர்ட் ஆர்டர் காப்பியெல்லாம் பாத்துட்டு தான் இங்க வர்றோம்" என்று தெளிவாகச் சொல்கிறார்கள். இந்த வார்த்தைகள் அங்கே இருந்த எல்லாருக்கும் ஒரு பெரிய ஷாக்காக இருக்கிறது.

அண்ணாமலை போட்ட அடி
இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம் இப்போ வெளிச்சத்துக்கு வந்துவிடுகிறது. அதற்குப் பிறகு ஹரிணியின் பெற்றோர், "நீங்களும் இப்படி இவங்களோட சேர்ந்து பொய் சொல்றீங்களே" என்று அண்ணாமலையையும் திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள்.
இந்த சம்பவம் அண்ணாமலையைக் கடுமையாக பாதிக்கிறது.
உடனே அவர் கோபத்தில், "நான் இதுவரைக்கும் யாரிடமும் பொய் சொன்னதே இல்ல... என்னைய பொய் சொன்னேன்னு யாரும் சொன்னதே இல்ல... ஆனா பாரு, உன்னையால இப்போ என்னைய ஹரிணியோட அப்பா பொய் சொல்றேன்னு சொல்லிட்டு போயிட்டாரு. எனக்கு இந்த அவமானமெல்லாம் தேவையா?" என்று விஜயாவிடம் கடும் கோபத்தில் கேட்கிறார்.
கோபத்தில் முத்து
அந்த கோபத்திலேயே அவர் விஜயாவை அடிக்க பாய்கிறார். அந்த நேரத்தில் அங்கிருந்த முத்து மற்றும் மீனா உடனே வந்து அவரை தடுத்து நிறுத்துகிறார்கள். இல்லையென்றால் விஷயம் இன்னும் பெரிதாகி இருப்பது உறுதி. இந்த பிரச்சனை கொஞ்சம் அடங்கிய பிறகு, முத்து மற்றும் மீனா இருவரும் தனியாக பேசிக்கொள்கிறார்கள். அப்போது முத்து, "ஹரிணியும், இவனும் சேர மாட்டாங்கனு எனக்கு ஏற்கனவே தெரியும். ஹரிணி ரொம்ப நல்ல பொண்ணா இருக்கு... ஆனா இவன் பாரு எப்படி இருக்கான்" என்று மனோஜை திட்டிக்கொண்டே பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications