முத்துவால் மனோஜிடம் சிக்கும் ஜீவா! ரோகிணிக்கு நிலைமை இப்படியா ஆகணும்! பழி தீர்த்துட்டாங்களே விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 23ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் முத்துவின் காரில் வந்து கொண்டிருந்த ஜீவா மனோஜை கோவிலில் நேருக்கு நேரே பார்க்கிறார். மறுபக்கத்தில் விஜயா ரோகிணியின் அப்பா ஜெயிலில் இருந்து வரவேண்டும் என்று ரோகிணிக்கு வேண்டுதலை போட்டு விடுகிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் மற்றும் ரோகிணி பாஸ்போர்ட் ஏஜென்சி கம்பெனிக்கு சென்று ஜீவா குறித்து விசாரிக்கிறார்கள். அங்கு அவரைப் பற்றி எந்த தகவலையும் கொடுக்க முடியாது அதுதான் எங்களுடைய ரூல்ஸ் என்று சொல்லிவிடுகிறார்கள். அதற்கு மனோஜ் அவங்க பாட்டி செத்துப் போயிட்டாங்க தகவல் கொடுக்கணும். கொஞ்சம் உதவி பண்ணுங்க என்று சொல்ல அப்போதும் அவர்கள் முடியாது நீங்க வேற வழியில் ட்ரை பண்ணி பாருங்க என்று சொல்லிவிடுவதால் வேறு வழி இன்றி இருவரும் கிளம்பி வருகின்றனர்.

மறுபக்கத்தில் முத்துவின் காரில் ஜீவா வந்து கொண்டிருக்க முத்து நீங்க எந்த நாட்டில் இருந்து வர்றீங்க மேடம் என்று கேட்க, அதற்கு ஜீவா நான் கனடாவில் இருந்து வருகிறேன் என்று சொல்ல, அதற்கு முத்து நீங்களும் கனடாவா? என்று எங்கள் வீட்டிலும் ஒருத்தன் கனடா போறதுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கிறான் என்று சொல்கிறார். கனடா பற்றி முத்து அங்குள்ள நிலவரத்தை விசாரித்துக் கொண்டே வருகிறார்.
அதற்கு ஜீவா கனடாவில் ஒரு பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன். இப்ப இங்க ஒரு பிராப்பர்ட்டி வாங்க போறேன் அதோட ரெஜிஸ்ட்ரேஷனுக்காக வந்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதோடு நான் சென்னையில் இருக்கிற வரைக்கும் நீங்க தான் என்னை எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போகணும் என்று சொல்ல, முத்து நீங்க போன் பண்ணுங்க மேடம் நான் வந்து விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த கட்டத்தில் வீட்டில் விஜயா ரோகிணி ரூம் கதவைத் தட்டி இரண்டு பேரும் ரெடியா இருங்க கோவிலுக்கு போகணும் என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி என்னது கோவிலுக்கா? எதுக்கு என்று கேட்க, உங்க அப்பா ஜெயிலில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காக பரிகாரம் செய்ய தான் என்று சொல்கிறார். ரோகிணி அங்கபிரதஷணம் மற்றும் உண்ணாவிரதம் இருந்து பரிகாரம் செய்யணும் என்று சொன்னதும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

கூடவே 48 நாட்கள் தனியா தான் படுக்கணும், நான்வெஜ் சாப்பிடக்கூடாது. ஒருவேளை மட்டும்தான் சாப்பிடணும், சூரிய உதயத்துக்கு முன்னாடி எழுந்துக்கணும் என்று கண்டிஷனை எல்லாம் விஜயா சொல்ல ரோகிணி இந்த பரிகாரத்தை நீங்களே பண்ணிடுங்க என்று சொல்ல அதற்கு கோபமான விஜயா நான் எப்படி பண்ணுவேன்? உங்க அப்பாவுக்காக நீ தான் பண்ணனும். ஏன் உங்க அப்பாவுக்காக நீ இதை கூட பண்ண மாட்டியா? என்று கோபப்படுகிறார்.
அதற்கு மீனா இவங்களால இவ்வளவு கஷ்டமான விரதத்தை செய்ய முடியுமா? என்று கேட்க அதற்கு விஜயா அதெல்லாம் செய்ய முடியும். இப்படி எல்லாம் செஞ்சா தான் அவங்க அப்பா வெளியே வருவாங்க என்று எல்லோரையும் கோவிலுக்கு கூப்பிடுகிறார். கூடவே முத்துவையும் கோவிலுக்கு வரச் சொல்லி அண்ணாமலை இடம் சொல்கிறார்.

நான் குடும்பமா வந்து வேண்டுதலை நிறைவேற்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன் கண்டிப்பா முத்துவும் வர வேண்டும் என்று விஜயா சொன்னதால் மீனா முத்துவுக்கு போன் போடுகிறார். அந்த நேரத்தில் முத்து ஜீவாவிடம் எங்க வீட்டில எங்க அண்ணனும் கனடா போனோன்னு சொல்லிக்கொண்டு இருக்கிறான்.
ஏற்கனவே அவனால 27 லட்சம் போச்சு என்று சொல்ல வர அந்த நேரத்தில் மீனா போன் பண்ணி பொன்னியம்மன் கோவிலுக்கு வாங்க என்று சொல்ல முதலில் முத்து வர முடியாது என்று மறுக்க பிறகு மீனா மாமாவிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டியதால் சரி வருவேன் அஞ்சு நிமிஷம் தான் இருப்பேன் என்று சொல்கிறார்.
இதை தொடர்ந்து ஜீவாவிடம் முத்து பர்மிஷன் கேட்க அதற்கு ஜீவா நான் சென்னையில் இருக்கிற வரைக்கும் என்னை நீங்க தானே வெளியே கூட்டிட்டு போக போறீங்க. உங்களுக்காக இந்த ஃபேவர் கூட பண்ண மாட்டேனா? எனக்கு ஒரு பிரச்சனை இல்லை என்று சொல்ல இருவரும் கோவிலுக்கு வருகின்றனர். இங்கு கோவிலில் விஜயா ரோகிணிக்கு மஞ்சள் புடவையை கட்டி வைத்து, தலையில் தண்ணீர் ஊற்றி விபுதி அடித்து பரிகாரம் செய்ய தயாராகிறார்.

இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் கோவில் வாசலில் கார் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் ஜீவா அந்த பக்கமாக வரும் மனோஜை பார்த்து விடுகிறார். மனோஜ் தன்னை பார்ப்பதற்கு முன்பு காருக்குள் ஒளிந்து விடுகிறார். ஆனாலும் மனோஜ் ஜீவாவை பார்த்தாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்போடு முடித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications