சிறகடிக்க ஆசை: முத்து மீனா தியாகத்துக்கு அளவே இல்லையா? இதெல்லாம் ரொம்ப ஓவர்.. விஜயாவுக்கு சரியான பாடம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial April 25 episode ) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் 25ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் வாங்கிய கடனுக்காக முத்துவும் மீனாவும் ஓடி ஓடி உழைக்கின்றனர். இதுவரைக்கும் இந்த குடும்பத்திற்காக எவ்வளவோ நல்லது செய்து கடைசியில் அசிங்கப்பட்டாலும் இப்போதும் வழக்கம் போல அண்ணாமலைக்காக தியாக சுடராக மாறிவிட்டார்கள். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலின் ஆரம்பத்தில் அண்ணாமலையின் மரியாதையை காப்பாற்றுவதற்காக மனோஜ் வாங்கிய கடனை அடைக்க முத்துவும் மீனாவும் முடிவு செய்து இருக்கின்றனர். இதனால் முத்து மற்றும் ரவிக்கு தான் இந்த வீட்டு உரிமை என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் விஜயாவை இனி என் கூட பேசக்கூடாது என்றும் அண்ணாமலை சொல்லிவிட்டார். இதனால் விஜயா சோகத்தில் இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இது ஒரு பக்கம் இருக்க, இன்றைய எபிசோடுஆரம்பத்தில், முத்துவும் மீனாவும் எப்படி ஒரு மாதத்திற்குள் 40 லட்சம் பணத்தை ரெடி பண்ணுவது என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். மீனா பல புது ஐடியாக்களை சொல்கிறார். இன்னும் அதிகமாக பூ ஆர்டர் எடுத்து வேலை செய்ய வேண்டும். பூக்களை வைத்து ஊதுபத்தி செய்து விற்பனை செய்யலாம், மேலும் தன்னுடைய வியாபாரி சங்கத்தின் மூலமாகவும் இன்னும் சில பிசினஸ் எல்லாம் என்றெல்லாம் பிளான் சொல்கிறார்.
முத்து, மீனா முடிவு
அதேபோல முத்துவும் இன்னும் நிறைய உழைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். போதாத குறைக்கு மீனா முத்து புதியதாக வாங்கி கொடுத்த தாலி செயனையும் விற்று விடலாம் என்று ஐடியா கொடுக்கிறார். இப்படி இவர்கள் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வீட்டு பத்திரத்தை குடும்பத்திற்கு தெரியாமல் அடகு வைத்து பணம் வாங்கிய மனோஜ் இதைப் பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஆனால் விஜயா தான் அண்ணாமலை பேசாததை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார்.

உழைப்பின் அருமை
அதை தொடர்ந்து மீனா பிளான் போட்டபடியே பூக்கள் அதிகமாக எடுத்து ஆர்டர் கொடுக்க ஆரம்பித்து விட்டார். அதுபோல முத்துவும் காரில் கஷ்டமரை ஏற்றி கொண்டு போய்க் கொண்டிருக்கிறார். இன்று எபிசோடு முழுக்க இதைத்தான் காட்டப்பட்டது. பெரிதாக எந்த சம்பவமும் இல்லை. இவர்களுடைய முன்னேற்ற பாதை பார்ப்பவர்களுக்கு உத்வேகம் கொடுத்தது போல இருந்தது.
அதே நேரத்தில் மீனா சொன்ன ஒரு வார்த்தை கூட கொஞ்சம் டச்சிங் ஆக இருந்தது. அதாவது நமக்கு பிரச்சனைகள் வரும்போதுதான் நாம அடுத்து என்ன பண்ணலாம் என்று யோசிக்கிறோம். இதுவரைக்கும் அன்றைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே பார்த்துட்டு இருந்தோம் ஆனா நம்மளால இவ்வளவு செய்ய முடியும் என்று இப்போ ஒரு பிரச்சனை வந்த போது தான் தெரிந்தது என்று சொன்னார்.

வாழ்க்கை தத்துவம்
அதேபோலத்தான் நமக்கும் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வரும்போதுதான் அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பது குறித்து நாம் யோசிக்கிறோம். இல்லை என்றால் இருக்கிற வேலையை வைத்து அன்றைய பொழுதை கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம் என்று சீரியலில் அழகாக சொல்லப்பட்டது. ஆனால் இவர்கள் இவ்வளவு கடினமாக உழைப்பது மற்றவர்களை சோம்பேறிகளாக வைக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. அடுத்த வாரம் இந்த சீரியலில் என்ன திருப்பம் வரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications