போலீஸிடம் சிக்கிய ஜீவா மனோஜ் பற்றி உடைத்த ரகசியம்.. ரோகிணி இப்படி சொல்லிட்டாங்களே! பாவம் மீனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ரோகிணி மற்றும் மனோஜிடம் சிக்கிய ஜீவா மனோஜ் பற்றி சொன்ன விஷயத்தை கேட்டு ரோகிணி அதிர்ச்சியாகி இருக்கிறார்.

மறுபக்கத்தில் பூ விற்கப்போன மீனா பைக்கை போலீசார் தூக்கிக்கொண்டு போய் இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Siragadikka aasai serial April 26th promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் டிக்கெட் புக் பண்ண போன ஜீவாவிடம் அங்கிருந்த ஏஜென்ட் மனோஜ் வந்து ஜீவாவை விசாரித்ததை பற்றி சொல்ல, அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜீவா இனி யார் வந்து கேட்டாலும் என்னுடைய டீடெயில்ஸ் கொடுக்க வேண்டாம் என்று சொல்கிறார். பிறகு அதைப் பற்றியே யோசித்தபடி முத்து காரில் போகிறார்.

அப்போது முத்து என்ன ஆச்சு உங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லையா என்று கேட்க, அதற்கு ஜீவா டிக்கெட் கிடைச்சிடுச்சு என்று சமாளிக்கிறார். பிறகு தன்னுடைய பிரண்டுக்கு போன் பண்ணி பியூட்டி பார்லர் பற்றி விசாரிக்க அவர் ஏற்கனவே ஜீவா போய்க்கொண்டிருக்கும் பியூட்டி பார்லர் இன்று பூட்டி இருக்கிறது என்று சொல்கிறார். அப்போது முத்து எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தங்களோட பியூட்டி பார்லர் இருக்கிறது. நீங்க ஓகே சொன்னா நான் அங்க கூட்டிட்டு போறேன் என்று சொல்ல, ஜீவாவும் சரி என்று சொல்கிறார்.

முத்து இன்னைக்கி என்னால பார்லர் அம்மாவுக்கு ஒரு கஸ்டமர் கிடைச்சிருக்காங்க என்று சொல்லிக்கொண்டு ரோகிணியின் பியூட்டி பார்லரில் ஜீவாவை விடுகிறார். பிறகு ஜீவா நீங்க போயிட்டு நான் கூப்பிட்ட பிறகு வாங்க என்று முத்துவை அனுப்பி வைக்கிறார். பியூட்டி பார்லரில் ஜீவாவை பார்த்த ரோகிணி அதிர்ச்சி ஆகிறார். பிறகு அவர் எங்கிருந்து வந்திருக்கிறார் அவருடைய பெயர் என்ன என்பதை பற்றி விசாரித்ததும் மனோஜ்க்கு போன் போட்டு ஜீவா பியூட்டி பார்லர் வந்திருக்கும் விஷயத்தை சொல்கிறார்.

மனோஜ் வர்ற வரைக்கும் ஜீவாவிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே அவருக்கு ரோகிணி மேக்கப் செய்து கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் வந்ததும் ஜீவா அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்கிறார். அப்போது மனோஜ் நான் உன்னை உண்மையா தானே காதலிச்சேன். நீ என்னை இப்படி பணத்துக்காக ஏமாத்திட்டியே! உனக்கு என்ன ஏமாற்றுவதற்கு வேற வழியே தெரியலையா என்று கழுத்தை பிடித்து நெரிக்க போக ரோகிணி தடுத்து நிறுத்துகிறார்.

அதற்கு ஜீவா நான் உன்னை ஏமாற்றவில்லை நீ தான் ஏமாந்த. நீ மட்டும் ரொம்ப யோக்கியனா? நீ உன்னை நம்புனா உங்க அப்பாவை ஏமாத்தலையா? என்று கேட்க அதற்கு ரோகிணி அவர் உனக்காக தானே அவங்க அப்பாவை ஏமாத்துனாரு. நீ நல்லவ மாதிரி பேசாத. நீ பணத்தை தூக்கிட்டு போன ஏமாற்றுக்காரி. பணத்துக்காக காதல் பெயரில் நடித்து இருக்க என்று திட்ட அதற்கு ஜீவா நீ யாரு இதையெல்லாம் பேச என்று ரோகிணியிடம் கேட்க, அதற்கு மனோஜ் இது என்னுடைய பொண்டாட்டி என்று சொல்கிறார்.

அந்த நேரத்தில் மனோஜ் போலீசுக்கு போன் பண்ணுகிறார். அப்போது ஜீவா நீ போன் பண்ணாத நான் நாளைக்கு கனடா போகணும் என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து தப்பி போக முயற்சி செய்ய, ரோகிணி ஜீவாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொண்டிருக்கிறார். பிறகு போலீஸ் அங்கு வந்து விட போலீஸிடம் ஜீவா மனோஜும் அவருடைய மனைவியும் என்னிடம் பணம் கேட்டு மிரட்டுறாங்க என்று கம்ப்ளைன்ட் செய்ய, அதற்கு போலீஸ் உன்னை பத்தி எல்லாமே எங்களுக்கு தெரியும்.

நீ இவரை ஏமாத்திட்டு கனடாக்கு ஓடி போனவ தானே ஆறு மாசத்துக்கு முன்னாடியே உன் மேல இவங்க கம்ப்ளைன்ட் தந்து இருக்காங்க என்று ஜீவா வாயை அடைகிறார். ஆனால் ஜீவா போலீஸையே மிரட்டி கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் பூ கொண்டு போன மீனா நோ பார்க்கிங்கை கவனிக்காமல் பைக்கை நிறுத்திவிட்டு கடைக்கு போய் விட அங்கு வந்த போலீஸ் பைக்கை தூக்கி கொண்டு போய் விடுகின்றனர்.

பிறகு கடையிலிருந்து வந்த மீனா பைக்கை காணாமல் தேட அங்கிருந்தவர்கள் போலீஸ் உன்னுடைய பைக்கை தூக்கி போட்டு போய்விட்டது என்று கூறியிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த மீனா அழுது கொண்டு முத்துவுக்கு போன் பண்ணுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+