மீனாவை அவமானப்படுத்திய விஜயா..பதிலடி கொடுத்த முத்து..தவிக்கும் மனோஜ்..பரபரப்பான திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கிடைத்த வேலையையும் விட்டுவிட்டு வந்து விடுகிறார்.

மனோஜ்க்கு காபி கொடுக்க சொல்லி விஜய்யா மீனாவை வற்புறுத்த முத்து மனோஜை பாடாய்ப் படுத்துகிறார்.

முத்து கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் விஜயா தவிக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 26 ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ரோகினி தன்னுடைய தோழியிடம் பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவர் கிருஷ்ணா பற்றி ஞாபகப்படுத்த அப்செட் ஆகி கோபத்தோடு வெளியே சென்று விடுகிறார்.

Siragadikka aasai serial April 26th promo and Episode Highlights

அடுத்ததாக மனோஜ் ஓரிடத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அங்கு அவருடைய உயர் அதிகாரியான பெண் பல வேலைகளை கொடுத்துக் கொண்டிருக்கும்போது ரோகினி ஆபீசுக்கு வெளியே காத்துக் கொண்டிருக்க அந்த பெண்மணி மனோஜை அனுப்பி ரோகினியை உள்ளே கூட்டி வரச் சொல்கிறார். ஒரு பக்கம் மசாஜ் செய்து கொண்டே இன்னொரு பக்கம் மனோஜிடம் பேச இதனால் கடுப்பாகும் மனோஜ் இந்த வேலையை வேண்டாம் என்று தூக்கி போட்டுவிட்டு வெளியே கிளம்புகிறார்.

வெளியே வந்த ரோகிணி மனோஜிடம் சாரி கேட்க, நீங்க என்ன பண்ணுவீங்க எல்லாம் அந்த பொண்ணுக்கு இருக்கிற பணத்திமிரு. என்கிட்ட பணம் இல்லை அதனால இப்படி எல்லாம் வேலை செய்ய வேண்டியது இருக்கு என்று புலம்பி விட்டு, தன்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்து தான் எந்த அளவிற்கு படித்திருக்கிறேன் ஆனால் இப்போ இந்த நிலைமையில் இருக்கிறேன் என்று கூறிக்கொண்டு கிளம்புகிறார்.

வீட்டுக்கு வந்த மனோஜ் விஜயாவிடம் வேலையை விட்டுவிட்டு வந்ததாக சொல்ல விஜயா என் மேல சத்தியம் பண்ணிக்கிட்டு இப்படி வேலைக்கு போகாமல் இருந்தால் எப்படி என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அப்போது பாத்துக்கலாமா என மனோஜ் கூறிக் கொண்டிருக்க, அதே நேரத்தில் மீனா வந்து அத்தை உங்களுக்கு காபி வேணுமா என கேட்க மனோஜ்க்கும் சேர்த்துக் கொண்டு வா என்று சொல்கிறார்.

உள்ளே போன மீனா விஜயாவுக்கு மட்டும் காபி கொண்டு வந்து கொடுக்க மனோஜ்க்கு எங்கே என்று கேட்டு அவருக்கெல்லாம் தர முடியாது என்று மீனா பதில் கொடுக்கிறார். விஜயா அவனுக்கு நீ காப்பி கொடுத்து தான் ஆக வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்க, மீனா அதற்கு முடியாது என்று சொல்ல, தனக்கு எடுத்து வந்த காப்பியை எடுத்து மனோஜிடம் விஜயா கொடுக்க, இப்ப என்ன பண்ணுவ என கேட்க அப்போது அங்கு வரும் முத்து காப்பியை பிடுங்கி அவனுக்கு வேணும்னா அவனை போட்டு குடிக்க சொல்லுங்க இல்லன்னா நீங்க உங்க பிள்ளைக்கு போட்டு கொடுங்க என்று சொல்கிறார்.

பிறகு முத்து மனோஜை உட்கார வைத்து உன்னை ஏமாத்திட்டு போன பொண்ணு போட்டோவை மட்டும் எனக்கு காட்டு உன்னை இப்படி சுத்த விட்டுட்டு போனா பொண்ணை பாக்கணும் என சொல்ல, அதெல்லாம் இல்ல டெலிட் பண்ணிட்டேன் என்று மனோஜ் சொல்கிறார். உடனே விஜயா இப்ப எதுக்கு அந்த கதை எல்லாம் அடுத்தவன் பணத்தை தூக்கிட்டு போனவ நல்லா இருக்க மாட்ட என சொல்ல, முத்து அப்படின்னா அந்த சாபம் எல்லாம் உங்க பிள்ளையை தான் சேரும் என்று பதில் கொடுக்கிறார்.

Siragadikka aasai serial April 26th promo and Episode Highlights

பிறகு வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை என மனோஜை வெறுப்பேத்தி பாட்டு பாடி எனக்கு சொன்ன டைமிருக்குள் பணம் வரணும் என சொல்ல, விஜயா அதெல்லாம் அவன் கொடுப்பான் என்று சொல்ல, வேலை போயிடுச்சு அப்புறம் எப்படி கொடுப்பாய் என முத்து கேட்கிறார். பிறகு இவனுக்காக நீ எந்த வேலையும் செய்யாத அப்படியே செய்ய சொன்னா விஷத்தை வச்சுடு என மீனாவிடம் சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு இவனுக்கு வேலை போயிடுச்சுன்னா முதல்ல பயப்பட வேண்டியது நீங்க தான். ஏன்னா உங்க மேல தான் சத்தியம் பண்ணி இருக்கேன். எனக்கு என்னமோ இவனால் தான் உங்களுக்கு ஏதோ ஆகப்போகுதுன்னு தோணுது என்று முத்து சொன்னதைக் கேட்டு விஜயா பயப்படுகிறார். அப்போது மனோஜை முத்து பாடாய்படுத்தியதை பார்த்து மீனா சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+