சிறகடிக்க ஆசை: மனோஜ் செய்த குற்றத்தை முத்து மீது போட்ட விஜயா.. பட்டும் திருந்தலையே! மீனா எடுத்த ஆக்சன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai serial) சீரியலில் 2026 ஏப்ரல் 29ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் தன்னுடைய அப்பாவின் கையெழுத்தை போட்டு பைனான்ஸியரிடம் பணம் வாங்கிய நிலையில் இப்போது அவரை போலீஸ் கைது செய்து இருக்கின்றனர். ஆனால் அந்த பழியையும் விஜயா முத்து மீது போட்டு இருக்கிறார். இதுவரைக்கும் மனோஜால் எத்தனையோ பிரச்சனைகள் விஜயாவுக்கு வந்தாலும் இன்னும் திருந்தாமல் முத்து மீனாவையே விஜயா குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இன்றைய (Siragadikka Aasai serial April 29 Episode) எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் ஜெயிலில் இருக்கிறார். அவரை பார்த்ததற்காக விஜயா வந்திருக்கிறார். விஜயா மனோஜிடம் நான் எப்படியாவது உன்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிடுறேன் என்று சொல்லிவிட்டு போலீஸிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். ஆனால் போலீஸ் உங்க பையன் போர்ஜரி பண்ணி இருக்கிறார் அதனால வெளியே விட முடியாது நீங்க எதுவா இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்கோங்க என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் விஜயா வழக்கம் போல என் மகன் ரொம்ப படிச்சவன், அவன் எந்த தப்பும் பண்ணல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணி வர ரோகிணியை பார்த்ததும் விஜயா கோபப்படுகிறார். ஆனால் ரோகிணி அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மனோஜிடம் போய் நான் உன்னை எப்படியாவது வெளியே கொண்டுட்டு வந்துருவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பழி போட்ட விஜயா
அந்த நேரத்தில் முத்துவும் மீனாவும் அங்கு வருகின்றனர். உடனே விஜயா நீங்க எதுக்காக இங்க வந்தீங்க? இன்னைக்கு என் பையன் மனோஜ் ஜெயிலுக்குள் இருக்கிறதுக்கு காரணம் நீங்கதான் என்று சொன்னதும் முத்துவும் மீனாவும் அதிர்ச்சி அடைகின்றனர். அவர்களுடன் வந்த ஸ்வேதாவும் ஸ்ருதியும் விஜயாவை திட்டுகின்றனர். ஆனாலும் விஜயா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நீங்க ரெண்டு பேரும் பைனான்ஸியரிடம் பிரச்சனை செய்ததால் தான் அந்த பைனான்சியர் உங்களை பழிவாங்குறதுக்காக என் பையனை தூக்கி உள்ள வச்சுட்டாரு என்று மொத்த பழியையும் முத்துமீனா மீது விஜயா போடுகிறார்.
ரோகிணி சவால்
இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கடுப்பான இன்ஸ்பெக்டர் எல்லோரையும் வெளியே போக சொல்லி திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகிணி இன்ஸ்பெக்டரிடம் எனக்கு ஒரு ரெண்டு மணி நேரம் மட்டும் டைம் கொடுங்க நான் அந்த பைனான்சியரிடம் கெஞ்சி எப்படியாவது கேஸை வாபஸ் வாங்க வைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு போகிறார். இதையெல்லாம் பார்த்த மீனாவிற்கு ரோகிணி மீது சந்தேகம் வருகிறது.

ரோகிணி அந்த சிந்தாமணி உடன் ஏதோ பிளான் பண்ணி தான் மனோஜ் மீது அந்த பைனான்சியர் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறாரா என்று மீனாவுக்கும் முத்துவுக்கும் சந்தேகம் வருகின்றது. பிறகு மனோஜை வெளியே கொண்டு வந்தா மாமா சந்தோஷமா இருப்பாரு அதற்காக நான் சிந்தாமணி கிட்ட போய் பேசுறேன் என்று மீனா சொல்ல முத்து நானும் வருகிறேன் என்று சொல்கிறார்.
மிரட்டிய மீனா
ஆனால் மீனா வேண்டாம் நான் ஒரு பிளான் வச்சிருக்கிறேன் அதுபடி பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு சிந்தாமணி வீட்டுக்கு போகிறார். அங்கே சிந்தாமணி டீ குடித்துக் கொண்டிருக்கும் போது மீனாவை பார்த்ததும் நக்கல் செய்கிறார். ஆனால் மீனா நீ என்னை பழிவாங்குவதற்காக என் புருஷனோட அண்ணனை தூக்கி ஜெயின்ல வச்சிருக்க, அதனால இப்ப மொத்த குடும்பமும் கஷ்டப்படுறது.
நீ அந்த பைனான்சியரிடம் சொல்லி கேஸை வாபஸ் வாங்க சொல்லு இல்லன்னா நீ சங்கத்தில் தலைவியா இருக்கும் போது என்னவெல்லாம் பிரச்சனை பண்ணினேன்னு அதை வைத்து உனக்கு எதிரா வியாபாரிகள் கம்ப்ளைன்ட் பண்ண வைத்து விடுவேன் என்று மிரட்டி விட்டு போகிறார். இதற்கிடையே ரோகிணி பைனான்ஸியரிடம் போய் கேசை வாபஸ் வாங்கும் படி கெஞ்சி கொண்டிருக்கிறார். உடனே பைனான்சியர் சிந்தாமணிக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறார்.
சிந்தாமணி பிளான்
சிந்தாமணி இதுதான் நல்ல நேரம் இதை வைத்து அந்த ரோகிணியிடம் மனோஜ் மீது கொடுத்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கணும்னா நீ 10 லட்சம் கொடுத்தா பார்க்கிறேன் என்று சொல்லி அனுப்பு என்று பிளான் போட்டு கொடுக்கிறார். அவரும் அதே போல சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.













Click it and Unblock the Notifications