சாட்சி கையெழுத்து போட்ட முத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. பணம் கிடைத்தும் மனோஜ்க்கு ஏமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் ஏப்ரல் 29ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ஜீவா மனோஜிடம் ஏமாற்றிய பணத்தை கொடுக்கவில்லை என்றால் வெளிநாட்டிற்கு போக முடியாது என்பதால் வட்டியோடு பணத்தை திருப்பிக் கொடுக்க அந்த பணத்தை வைத்து ரோகிணி புது பிளான் போடுகிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில், போலீஸ் வக்கீல் கிட்ட ஜீவாவிடம் பேசி புரிய வையுங்கள் என்று சொல்ல, வக்கீல் ஜீவாவை தனியாக கூட்டிட்டு போய் அவரிடம் பேசுகிறார். அப்போது ஜீவா என்ன சார் இப்படி ஆயிடுச்சு என்னை இங்கிருந்து சீக்கிரமா அனுப்பி வைங்க என்று சொல்ல, அதற்கு வக்கீல் நீங்க வசமா மாட்டிக்கிட்டீங்க. இங்கிருந்து தப்பிக்கவே முடியாது.

Siragadikka aasai serial April 29th promo and episode full update

வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம ப்ராபர்ட்டி வாங்க வந்தேன். பிசினஸ்க்கு லோன் வாங்க வந்தேன்னு எல்லாத்தையும் உளறி வச்சிருக்கீங்க. இதெல்லாம் தெரிஞ்ச பிறகு அவங்க எப்படி சும்மா இருப்பாங்க. நீங்க காம்பெர்மைசா போறது தான் ஒரே வழி என்று சொல்கிறார். அதற்கு ஜீவா நான் எதுக்கு பணத்தை கொடுக்கணும்? நான் எந்த தப்பும் பண்ணல என்று சொல்ல, அதற்கு லாயர் நீங்க அவங்க கிட்ட பேசுற மாதிரி என்கிட்ட பேசாதீங்க.

Siragadikka aasai serial April 29th promo and episode full update

நீங்க என்ன பண்ணுனீங்கன்னு எல்லாமே எனக்கு தெரியும். பணம் கொடுக்கலைன்னா உங்க பாஸ்போர்ட் லாக் ஆயிடும். அப்புறம் வெளிநாட்டுக்கு போக முடியாது கோர்ட்... கேஸ்னு இழுத்துட்டு தான் இருப்பாங்க என்று சொல்ல, வேறு வழியில்லாமல் ஜீவா பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று சொல்கிறார். மறுபக்கத்தில் மீனா வண்டி கிடைக்குமா? கிடைக்காதா? என்று முத்துவிடம் கேட்டுக் கொண்டே இருக்க, முத்து கொஞ்சம் அமைதியாக இரு.

Siragadikka aasai serial April 29th promo and episode full update

தப்பு நம்ம மேல இருக்கு அதனால கொஞ்ச நேரம் காத்திருந்துதான் ஆகணும் என்று சொல்கிறார். அடுத்து உள்ளே வந்த லாயர் நாங்க பணத்தை கொடுத்து விடுகிறோம் என்று சொல்ல ரோகிணி 27 லட்சம் கொடுத்தா போதாது இவ்வளவு நாளா அந்த பணத்தை வைத்துக்கொண்டு இருந்ததற்கு வட்டியோடு சேர்த்து 30 லட்சம் கொடுக்கணும் என்று சொல்ல ஜீவா அதிர்ச்சி அடைகிறார். அதற்கு லாயர் ஓகே என்று சொல்லி டாகுமெண்ட்டை ரெடி பண்ண சொல்கிறார்.

பிறகு எங்களுக்கும் இனி உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கையெழுத்து போட சொல்ல மனோஜ் கையெழுத்து போட போகும்போது ரோகிணி தடுத்து நிறுத்தி பணம் இன்னும் வரலையே என்று கேட்க போலீஸ் பணத்த அனுப்பிவிடுமா என்று சொன்னதும் ஜீவா பணத்தை அனுப்ப, மனோஜ் கையெழுத்து போடுகிறார். அதற்கு பிறகு ஜீவாவுக்கு சாட்சியாக கையெழுத்து போட யாரும் இல்லாததால் கான்ஸ்டபிள் அவரை வெளியே கூட்டிட்டு வரும்போது முத்து ஜீவாவை பார்த்துட்டு மேடம் நீங்க எங்க இங்க என்று கேட்க அதற்கு கான்ஸ்டபிள் இவரை இவங்கள உனக்கு தெரியுமா?

Siragadikka aasai serial April 29th promo and episode full update

இங்களுக்காக ஒரு சாட்சி கையெழுத்து போடணும் என்று சொல்ல முத்து அவருக்காக கையெழுத்து போட்டுக் கொடுக்கிறார் அடுத்ததாக டிராபிக் போலீஸ் வந்ததும் முத்து அவரைப் பார்க்க இன்னொரு ரூமுக்கு போனதும் மனோஜ் ரோகினி ஸ்டேஷனிலிருந்து பணத்தோடு வெளியே வருகின்றனர். பிறகு முத்து பைனை கட்டிவிட்டு வண்டியை எடுத்து மீனாவிடம் கொடுத்து அனுப்ப மனோஜ் மற்றும் ரோகினி ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுகின்றனர்.

அப்போது மனோஜ் வீட்டுக்கு போனதும் அப்பாவிடம் 27 லட்சம் பணம் கிடைச்சுடுச்சுன்னு சொல்லி முத்து முகத்தில் தூக்கி எறியனும் என்று சொல்ல, உனக்கு அறிவில்லையா? உனக்கு கனடா போவதற்கு 16 லட்சம் பணம் கட்டணும் என்று சொல்லி அந்த ஏஜென்சிக்கு கூட்டிட்டு போகிறார். ஆனால் அங்கு வேலைக்கு இன்னொருவரை அனுப்பியாச்சு என்று மனோஜ்க்கு இனிமே கனடா போக முடியாது இந்த வருஷத்தோட அவருடைய அவருக்கு வயது பார் ஆகிடும் என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

இதனால் மனோஜ் அப்செட்டாக இருக்க @கவலைப்படாத இந்த பணத்தை வைத்து ஏதாச்சும் பிசினஸ் பண்ணலாம் என்று ஐடியா கொடுக்கிறார். பிறகு 30 லட்சம் ரூபாய் பணம் வந்துச்சுன்னு வீட்டுல சொல்ல வேண்டாம். அதே மாதிரி ஜீவா கிட்ட இருந்து பணம் கிடைத்தது என்பது வீட்டுக்கு யாருக்கும் தெரிய வேண்டாம்.

எங்க அப்பா 15 லட்சம் ரூபாய் பணத்த அனுப்பினாங்க என்று மட்டும் சொல்லு என்று சொல்கிறார். அதற்கு மனோஜ் அவர்தான் ஜெயில்ல இருக்கிறாரே அப்புறம் எப்படி அனுப்புனார் என்று கேட்பார்கள் என்று சொல்ல, அதற்கு ரோகிணி அதெல்லாம் நம்புற மாதிரி சொல்லணும். நீ வாய் திறக்காத என்று ஐடியா கொடுத்துக் கொண்டிருக்கின்றார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+