மீனாவை பற்றி விஜயா சொன்ன வார்த்தை.. ரவியும் இப்படி மாறிட்டாரே! அண்ணாமலை கோபத்தில் எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் இரண்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் மீனாவை பிச்சை எடுக்க சொல்லி வாசுதேவன் அவமானப்படுத்த, ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த முத்து அவரை போட்டு அடித்து விடுகிறார். அதனால் ஸ்ருதி நான் இனி அந்த வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

அதே நேரத்தில் ஸ்ருதி மற்றும் ரவிக்காக விஜயாவும் மீனாவை அவமானப்படுத்துகிறார். ஆனால் அண்ணாமலை எதிர்பார்க்காத வார்த்தைகளை பேசி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Siragadikka aasai serial April 2nd promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மண்டபத்தில் வாசுதேவன் மீனா மீது திருட்டுப்பழி போட முதலில் பொறுமையாக முத்து மீனா அப்படி பண்ணிருக்க மாட்டா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் வாசுதேவன் மீனாதான் நகையை திருடுனா அதை என் கண்ணால பார்த்தேன். அவ குடும்பத்தை பற்றி எனக்கு நல்லாவே தெரியும். ஸ்ருதி எனக்கு சொல்லி இருக்கா, அவ தம்பி கூட உங்க பைக்கை திருடினானாமே... அதுக்கப்புறம் தான் இந்த கல்யாணமே நடந்ததுன்னு சொன்னா.

Siragadikka aasai serial April 2nd promo and episode full update

உங்க அப்பா அம்மா உன்னை இந்த மாதிரி வளர்த்து வச்சிருக்காங்க, பூக்கடை தானே வச்சிருக்க அதுல வர வருமானம் போதாது பிச்சை எடுக்க போக வேண்டியது தானே என்று அவமானப்படுத்தி பேச பொறுமையை இழந்த முத்து வாசுதேவனை போட்டு அடித்து விடுகிறார். அண்ணாமலை பொறுமையாக இருடா என்று நிறுத்தி வைக்க அதற்கு முத்து எவ்வளவு நேரம் தான் நான் பொறுமையா இருப்பேன்? இவ்வளவு நேரமா நான் பொறுமையா தானே இருந்தேன்.

இந்த ஆளு என்ன எல்லாம் பேசுறார் என்று கோபப்படுகிறார். அதற்கு விஜயா அவர் சொன்னதுல என்னடா தப்பு இருக்கு. அந்த குடும்பம் பற்றி எல்லாம் தெரிந்திருக்கு என்று மீனாவின் குடும்பத்தை பற்றி அவமானப்படுத்தி பற்றி பேச அதற்கு முத்து இதுதான் சாக்குன்னு இவங்க பேசுறாங்க அம்மாவை அவமானப்படுத்த வேண்டான்னு சொல்லுப்பா என்று கோபப்படுகிறார்.

Siragadikka aasai serial April 2nd promo and episode full update

அந்த நேரத்தில் ரவியும், ஸ்ருதியும் அங்கு வந்து விட ஸ்ருதி நடந்தது என்னவென்று தெரியாமல் எங்க அப்பா மேல எப்படி கை வைக்கலாம் என்று கோபப்படுகிறார். அதற்கு முத்து நாங்க இங்க வந்ததுதான் தப்பு என்று கோவப்பட்டு மீனாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு போகிறார். அதற்கு பிறகு வாசுதேவனின் மனைவி சுதா இதுக்கு தான் அந்த குடிகாரனை வரக்கூடாதுன்னு சொன்னேன். இப்ப எல்லாருக்கும் முன்னாடி எங்க மானம் போச்சு.

எங்க சொந்தக்காரங்க முன்னாடி என் வீட்டுக்காரர் மேலேயே கை வச்சுட்டான். அவன் இருக்கிற வீட்டில எப்படி எங்க பொண்ணை நாங்க வாழ அனுப்புறது? என்று சொல்ல, அதற்கு வாசுதேவன் ஸ்ருதியிடம் சென்று உனக்காக ஆசை ஆசையா எல்லா ஏற்பாடும் செஞ்சேன். ஆனால் அவன் என்னை அவமானப்படுத்தி அடிச்சுட்டான். நீ அவன் இருக்கிற வீட்டுக்கு போகணுமான்னு யோசிச்சுக்க என்று சொல்ல, அண்ணாமலை எதுவா இருந்தாலும் வீட்டில போய் பேசிக்கலாம், ரவி ஸ்ருதியை கூட்டிட்டு வீட்டுக்கு வா என்று சொல்ல,

அதற்கு ஸ்ருதி நான் அந்த வீட்டுக்கு வரல என்று சொல்லி அங்கு இருக்கும் ரூமுக்கு ஓடி சென்று கதவை பூட்டி கொள்கிறார். பிறகு அண்ணாமலை ரவியிடம் நீ பேசி சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வா என்று சொல்லி கிளம்பி போகிறார். அப்போது ரோகிணி இவ்வளவு பிரச்சனையில் இனி என்னை மறந்துடுவாங்க என்று சந்தோஷப்படுகிறார்.

பிறகு வீட்டுக்கு வந்ததும் விஜயா செமையாக கோபத்தில் இருக்க மனோஜ் பசிக்கிறது என்று சொன்னதால் விஜயா கோபப்பட்டு திட்டுகிறார். கூடவே அந்த குடிகாரனை கூப்பிட வேண்டாம்னு இதுக்கு தான் சொன்னேன் நீங்க கேட்டீங்களா? இப்ப சம்மந்தி வீட்டுக்காரங்க முன்னாடி என் மானம் போச்சு மரியாதை போச்சு என்று கோபப்படுகிறார்.

இனி ரவியும் ஸ்ருதியும் இந்த வீட்டுக்கு வர மாட்டாங்க என்று விஜயா புலம்பி கொண்டு இருக்க, அண்ணாமலை நான் ரவியிடம் பேசுகிறேன் என்று போன் போடுகிறார். முதலில் கொஞ்ச நேரம் போனை எடுக்காத ரவி பிறகு ஃபோனை எடுத்து பேசுகிறார். அப்போது அண்ணாமலை இடம் எதுக்கு எனக்கு மட்டும் இப்படி நடக்குதுன்னு தெரியல. நான் எந்த தப்பும் பண்ணாமலேயே என்னை சுத்தி இருக்கிறவங்க பண்ணுற தப்பால எனக்கு தான் பிரச்சனை வருது.

Siragadikka aasai serial April 2nd promo and episode full update

இனி நான் எப்படி ஸ்ருதியை சமாளிக்க போறேன்னு தெரியல என்று ஃபீல் பண்ணி பேச அதற்கு அண்ணாமலை எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் ஸ்ருதியை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வா என்று சொல்ல, அதற்கு ரவி எனக்கு அங்க வரணுமான்னு தோணுது என்று அதிர்ச்சி கொடுக்கிறார். அதற்கு அண்ணாமலை அப்போ நாங்க எல்லாம் வேண்டாமா? என்று கேட்க எனக்கு தெரியாதுப்பா... நான் அப்புறம் பேசுறேன் என்று போனை வைத்து விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+