சிறகடிக்க ஆசை ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. ரோகிணியை மாட்டி விட்ட முத்து.. விஜயாவால் அதிர்ச்சியில் மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 4ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ரோகிணியின் அப்பா இன்னும் வரவில்லையே என்று விஜயா மீண்டும் பிரச்சினை செய்ய அதற்கு ரோகிணி புது நாடகம் போடுகிறார்.
அதே நேரத்தில் மேலும் சில சுவாரசியமான காட்சிகளும் இன்றைய எபிசோடில் நடந்தது. முத்துவையும் மீனாவையும் விஜயா வீட்டை விட்டு வெளியே போக சொல்லி இருந்ததற்கு முத்து விஜயாவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா முத்துவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னதால் முத்து நாங்க இப்போ உங்களுக்கு வெளியே போகணும் அவ்வளவு தானே? சரி மீனா நீ போய் துணி எல்லாம் எடுத்து வை என்று சொல்லியபடியே அண்ணாமலையையும் தன்னோடு வெளியே போக கூப்பிட அதை பார்த்த விஜயா அதிர்ச்சியாகிறார்.
அவரை எதுக்குடா கூப்பிடுற, நீ போ என்று சொல்ல அதற்கு முத்து என்னால என் அப்பாவை விட்டுட்டு எல்லாம் போக முடியாது என்று சொல்கிறார். அதோடு முப்பது வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டு இருந்த அப்பா உனக்கு இப்ப விடுதலை கிடைச்சிருச்சு வா போகலாம் என்று சொல்ல அண்ணாமலையும் சரி என்று கிளம்பி போக விஜயா தடுக்க அதற்கு அண்ணாமலை என் புள்ள கூப்பிட்டா போய் தானே ஆகணும் என்று சொல்கிறார்.

அதோடு இதுவரைக்கும் நீ முத்துவை உன் பிள்ளையா பார்த்ததே கிடையாது. எப்பவுமே என் புள்ள என் புள்ளனு தானே சொல்லுவே அதனால என் புள்ள இப்போ என்னை கூப்பிடுறான் நான் அவனோடு போறேன் என்று சொல்லி மீனாவை தனக்கும் துணி எடுத்து வைக்க சொல்ல விஜயா வேறு வழி இல்லாமல் அமைதியாகி விடுகிறார். அடுத்ததாக ரெஸ்டாரண்டுக்கு வரும் ரவி தன்னோட நண்பனிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது நீ தயவு செய்து கல்யாணம் மட்டும் பண்ணிடாத இப்படியே இரு கல்யாணம் பண்ணினாலே உன் சந்தோசம் எல்லாம் போயிடும் என்று அட்வைஸ் பண்ணுகிறார். மறுபக்கத்தில் வீட்டில் மீனா எல்லாரையும் சாப்பிட கூட அதற்கு விஜயா நீ செய்வதையும் செஞ்சிட்டு இங்க நல்லவங்க வேஷம் போட்டுட்டு இருக்கியா? என்று திட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் முத்து விஜயா பேசுவதற்கெல்லாம் கவுண்டர் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
பிறகு எல்லோரும் சாப்பிட உட்காரும்போது முத்து யாரோ மலேசியாவில் இருந்து இப்ப வந்துருவாங்க இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு வந்துருவாங்கன்னு சொல்லிட்டே இருந்தாங்க, அவங்க இன்னுமா வந்து சேரல என்று சொல்ல, விஜயா ஆமா உங்க அப்பா இன்னும் வரலையா? அவர் வந்தாரா இல்லையா? இப்படியே பொய் சொல்லிட்டு இருக்கியா என்று கேள்வி மேல் கேட்க பதில் பேச சொல்ல முடியாமல் ரோகிணி தவித்து போய் வாயில் சாப்பாடு வைத்ததும் வாமிட் வர,

அதை பார்த்து விஜயா ரோகிணி கர்ப்பமாக இருப்பதாக நினைத்து, என் தங்கம் நான் நினைச்ச மாதிரியே நடந்துச்சு என்று சொல்லி மனோஜியை பாராட்டுகிறார். மனோஜ் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு அண்ணாமலை எதையும் நாமாக நினைத்து சந்தோஷப்பட வேண்டாம் முதலில் ஹாஸ்பிடலுக்கு போய் செக் பண்ணி வரட்டும் என்று சொல்கிறார்.

பிறகு விஜயா ரோகிணிக்கு சாப்பாடு ஊட்டி விட்டு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கிறார். அதோடு விஜயா சாமி கும்பிட்டு யாருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும் என்று கடவுளுக்கு நல்லா தெரியும் என்று மீனாவை பார்த்து நக்கலாக பேசிவிட்டு செல்கிறார். அதை கவனிக்காத முத்து அப்பா நம்ம வீட்டுக்கு சின்ன பாப்பா வரப்போகுது... வேலையே இல்லாத இவனுக்கு இந்த வேலை தேவையா? என்று முத்து நக்கல் அடிக்கிறார். அதோடு நான் இனி சித்தப்பா ஆகப் போறேன் மீனா நீ சித்தி ஆக போற என்று சந்தோஷத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications