மீனாவிடம் வாயை கொடுத்து மாட்டும் ரோகிணி.. விஜயாவுக்கு இந்த அவமானம் தேவையா? பீல் பண்ண வைத்த அண்ணாமலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 6ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இதில் பார்க்கலாம். அந்த வகையில் அண்ணாமலை ரவி மற்றும் ஸ்ருதி வீட்டை விட்டு போனதால் பீல் பண்ணிக் கொண்டிருக்க அண்ணாமலைக்காக மீனாவும் முத்துவும் முக்கிய முடிவு எடுக்கிறார்கள்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா ஸ்ருதிக்கு போன் போட்டு வீட்டுக்கு வா என்று கூப்பிட, அதற்கு ஸ்ருதி நான் வர முடியாது என்று சொல்ல, அதற்கு விஜயா முத்துவுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு ஸ்ருதி எனக்குத் தாகம் எடுத்தா நீங்க தண்ணி குடிச்சா சரியாயிடுமா? என்று கேட்க அதற்கு விஜயா அது எப்படி தீரூம் என்று சொல்ல, அது போல தான் முத்து அடிச்சதுக்கு நீங்க மன்னிப்பு கேட்டா சரி ஆகாது என்று கோபமாக பேசுகிறார்.

அதற்கு விஜயா சரிமா எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு நான் இப்போ வீட்டுக்கு வரட்டுமா என்று கேட்க, வேண்டாம் நான் இப்போ ஸ்டூடியோக்கு கிளம்பிடுவேன் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். அதைத் தொடர்ந்து பார்வதியிடம் ஸ்ருதி பேசியதை சொல்லி விஜயா புலம்பி கொண்டு இருக்க, அதற்கு பார்வதி ரவியை அப்படியே விட்டுடாத, இப்பவே உன் போனை எடுக்க மாட்டேன் என்கிறான்.
உன் வீட்டுக்காரர் முத்து கூட வீட்டை விட்டு வெளியே போயிடுவேன் என்று சொல்றாரு, இப்படி எல்லாரும் உன்னை விட்டு போயிட்டா நீயும் என்னை மாதிரி தனி மரமா தான் இருக்கணும் என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறார். பிறகு ரோகிணி கிச்சனில் மீனாவிடம் சுடுதண்ணி கேட்க, மீனா சீரகம் போட்ட தண்ணியை கொடுக்கிறார். அதோடு கவலைப்படாதவங்க சீக்கிரமா நல்லது நடக்கும் என்று ரோகிணிக்கு ஆறுதல் கூற, அதற்கு ரோகிணி நான் கூட பெருசா இதை எடுத்துக்கல.

ஆனா அத்தை தான் ரொம்ப ஏமாந்துட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு மீனா இப்ப திரும்பவும் ரவியை பற்றி யோசித்து கவலைப்பட ஆரம்பிச்சிட்டாங்க என்று சொல்ல, அதற்கு ரோகிணி வேற எதையும் பற்றியும் யோசிக்காமல் இருந்தா சரிதான் என்று உளறி விடுகிறார். அதற்கு மீனா வேற எதைப்பற்றி யோசிக்கணும்? என்று கேட்க, ஒன்றும் இல்லை என்று சமாளித்து அங்கிருந்து ரோகினி வெளியே போய் விடுகிறார்.
அதைத்தொடர்ந்து ஹாலில் ரோகிணியும் மனோஜியும் பேசிக்கொண்டிருக்கும்போது முத்துவும் அண்ணாமலையும் வாக்கிங் போயிட்டு வீட்டிற்கு வர ரவி பெயருக்கு கொரியர் ஒன்று வருகிறது. அப்போது அண்ணாமலை ரவி வீட்டில் இருக்கும் ஞாபகத்தில் ரவி... ரவி என்று கூப்பிடுகிறார். அதைத் தொடர்ந்து ரவி வீட்ல இல்லை என்று வருத்தப்படுகிறார்.
இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் ரவி வந்துடுவான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ரோகிணி இதுதான் சாக்கு என்று முத்து அடித்ததை அந்த நேரத்தில் நினைவு படுத்த விஜயா கோபப்படுகிறார். பிறகு எல்லாரும் தூங்கிய பிறகு முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா ரவியும், ஸ்ருதியும் இந்த வீட்டுக்கு வரணும் மாமா ரொம்ப கவலைப்படுகிறார்.

மாமா எல்லோரும் ஒண்ணா இருக்காங்கன்னு ஆசைப்படுறார். நாம தான் ஏதாவது செய்யணும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து மறுநாள் காலையில் ஸ்ருதி டப்பிங் ஆபீசுக்கு கிளம்பி போக, அவருடைய அம்மா இந்த வேலைக்கு போக வேண்டாம் என்று தடுக்க முயற்சி செய்கிறார். அதற்கு ஸ்ருதி என்னுடைய சுதந்திரத்தில் நீங்க தலையிடாதீங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி வருகிறார்கள்.

அங்கே ஸ்ருதியை பார்ப்பதற்காக டப்பிங் ஆபீஸில் மீனா காத்திருக்கிறார். அதேபோல ஹோட்டலில் ரவியை பார்க்க முத்து வந்திருக்கிறார். மாமியார் வீட்டில் இருக்க முடிவு பண்ணிட்டியா? ஒரு நாள் இருந்தோமா வந்தமான்னு இருக்க வேண்டியதுதானே? என்று பேசுகிறார். அதற்கு ரவி கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications