சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் 9ஆம் தேதிக்கான எபிசோடில், விஜயா செய்த தில்லாலங்கடி வேலைகள் முத்து மூலமாக அண்ணாமலைக்கு தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் எலக்சன் விஷயத்தில் மீனாவிடம் முத்து ஒரு உண்மையை மறைத்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் எபிசோடின் (Siragadikka Aasai serial April 9th, 2026 Episode) ஆரம்பத்தில், மீனாவின் நோட்டீசை கிழித்ததால் அவருடைய ஃப்ரெண்ட்ஸிடம் விஜயா தர்ம அடி வாங்கிவிட்டு வீட்டில் படுத்துக்கொண்டு வலியால் தவிக்கிறார். "அச்சச்சோ... அம்மம்மா... முதுகு வலிக்குதே..." என்று புலம்பிக் கொண்டே இருக்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை வந்து என்னாச்சு என்று கேட்கிறார். ஆனால் உண்மையை சொல்ல முடியாமல் விஜயா திணறிக்கொண்டு இருப்பார். ஏதோ ஒரு பயங்கர கனவு கண்டு கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டேன் என்று சமாளிக்கிறார்.
சிக்கும் விஜயா
அந்த சமயத்தில் முத்து அங்கே வந்து, நடந்ததை நேராக சொல்லாமல், விஜயாவை இன்னும் கொதிக்க வைக்கும் மாதிரி பேச ஆரம்பிக்கிறார். "ஒரு வயசான பொம்பள முக்காடு போட்டுக்கிட்டு, மீனாவின் போஸ்டரை கிழிச்சுட்டு இருந்தாங்க... அதை பார்த்த மீனாவின் தோழிகள் அந்த பொம்பளைக்கு தர்ம அடி கொடுத்தாங்க... ஆனா அந்த பொம்பள யாருன்னு தெரியல" என்று சொல்லி திட்டமிட்டே விஜயாவை சிக்க வைக்கிறார்.
வார்னிங் கொடுத்த அண்ணாமலை
இதைக் கேட்டவுடன் அண்ணாமலைக்கு விஷயம் புரிந்து விடுகிறது. இது விஜயாவே செய்த வேலை என்று அவர் நன்றாக புரிந்து கொண்டு, முத்து சொன்னதிலிருந்து எனக்கு நீதான் இது பண்ணி இருக்கேன்னு கொஞ்சம் தெரியுது மீனா நல்லா இருக்கணும் அவளுடைய முன்னேற்றத்தை நீ தடுக்காத மீறியும் இனி ஏதாவது நீ செஞ்ச இதைவிட பெருசா அடி வாங்குவ என்று வார்னிங் கொடுக்கிறார். ஆனால் விஜயா அதைப் பொருட்படுத்தவே இல்லை.
குடும்பத்தினரின் முயற்சி
இதற்கிடையில் வேறு பக்கம் தேர்தல் சூழல் வேகமாக நகர்கிறது. ஸ்ருதி, ஸ்வேதா இருவரும் பூக்கடை வைத்திருப்பவர்களை நேரில் சந்தித்து யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று சர்வே எடுக்கிறார்கள். அந்த சர்வே முடிவில் சிந்தாமணிக்கு 65% ஆதரவும், மீனாவுக்கு 35% ஆதரவும் இருப்பது தெரிய வருகிறது.
முத்து செய்த செயல்
இந்த தகவலை அவர்கள் முத்துவிடம் சொல்கிறார்கள். இதைக் கேட்டதும் முத்து சும்மா இருக்கவில்லை. "மீனா இந்த எலெக்ஷன்ல ஜெயிக்கணும்... இல்லனா அவ ரொம்ப பாதிக்கப்படுவா" என்று முடிவு செய்து குடும்பமாக மீனாவை ஜெயிக்க வைத்த களத்தில் இறங்குகிறார்.
அதற்குப் பிறகு முத்து ஒவ்வொரு பூக்கடைக்கும் சென்று அங்குள்ள உறுப்பினர்களிடம் பேசுகிறார். "மீனா ஜெயிச்சா என்ன செய்யப் போறாங்க" என்று விளக்கி, ஒவ்வொரு கடையிலும் வாக்கு கேட்டு திரிய ஆரம்பிக்கிறார். இதோடு நின்றுவிடாமல், ஸ்ருதி, ஸ்வேதா இருவரும் மீனாவை வாக்கு கேட்க பேச வைத்து, அதைப் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் போடுகிறார்கள்.
மீனாவின் பிரச்சாரம்
வீட்டுக்குள் இருந்தால் வேலை ஆகாது என்று முடிவு செய்த மீனா, காயம் இருந்தாலும் வெளியே வந்து நேரடியாக வாக்கு சேகரிப்பில் இறங்குகிறார். அதே நேரத்தில், "மீனாவை சிந்தாமணி ஆட்கள் தான் கத்தியால் குத்தினாங்க" என்று முத்து போஸ்டர் அடித்து ஒட்ட ஆரம்பிக்கிறார்.
மீனா வாக்கு கேட்டு செல்லும் இடமெல்லாம் மக்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள். "நாங்க உனக்குத்தான் வாக்களிப்போம்" என்று ஆதரவு தெரிவிக்கிறார்கள். இதனால் தேர்தல் களம் இப்போது ரொம்ப சூடாகி இருக்கிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது நாளை எலக்சன் நடக்கப்போகிறது அதில் யார் ஜெயிக்கப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications