பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்.. இனி 4 நாட்களில் என்ன நடக்கும்? திண்டாட்டத்தில் ரோகினி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்க்காத அளவில் ஹை வோல்டேஜ் டிராக் இந்த வாரத்தில் நடந்து வருகிறது.
அடுத்தடுத்து ஒவ்வொரு முடிச்சுகளும் இந்த சீரியலின் கதையில் அவிழ்க்கப்பட்டு வரும் நிலையில் கதையில் சுவாரசியம் கூடியிருக்கிறது.
அதே நேரத்தில் விஜயாவால் ரோகினி பெரிய பிரச்சனையில் மாட்டியிருக்கிறார். இந்த நிலையில் நான்கு நாட்களுக்குள் ரோகிணி என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சமீபகாலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பல சீரியல்கள் எதிர்ப்பாராத வகையில் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியலும் ஒன்று. இதுவரைக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தான் டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்த நிலையில் அதை பின்னுக்கு தள்ளி இந்த சீரியல் முதல் இடத்திற்கு வந்திருக்கிறது.

பொதுவாக பல சீரியல்களில் ஒரு சில உண்மைகள் தெரிவதற்கு பல நாட்கள் ஆகின்றது. ஆனால் இந்த சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதனாலேயே அதிகமான ரசிகர்கள் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். சீரியலின் ஆரம்பத்திலேயே பெரிய அளவில் பில்டப் இல்லாமல் எதார்த்தமான கதையோடு இந்த சீரியல் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வீட்டில் மூன்று ஆண் குழந்தைகள் இருக்கையில் ஒரு அம்மாவுக்கு தன்னுடைய மூத்த மகனை அதிகமாக பிடிக்கிறது.
அவர் என்ன தப்பு செய்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் அம்மா, தன்னுடைய மகன் முத்து படிக்கவில்லை என்ற காரணத்தால் அவனை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய மூத்த மகன் காதலிக்கும் ரோகிணிக்காக விஜயா வீட்டிற்கு தெரியாமல் பத்திரத்தை அடகு வைத்து 17 லட்சம் ரூபாய் கொடுத்து இருந்தார். அதே நேரத்தில் ரோகினிக்கு ஏற்கனவே திருமணம் முடிஞ்சி ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால் அதையும் ரோகினி மறைத்திருக்கிறார்.

அதுபோல மனோஜ் வேலையில்லாமல் இருக்கிறார். ஆனால் வீட்டில் தான் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சில தினங்களாக இந்த சீரியலில் பெரிய அளவில் அடுத்தடுத்து திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. எப்படியும் விஜயா வீட்டில் மாட்டுவதற்கு பல மாதங்கள் ஆகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் விஜயா 17 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்தது வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் விஜயா ரோகினி பெரிய பணக்கார வீட்டு பெண் அவருடைய அப்பா வெளிநாட்டில் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் முத்து 17 லட்சம் ரூபாயை கேட்டு மிரட்டிய போது இது எல்லாம் ரோகிணிக்கு பிஸ்கட் சாப்பிடுற மாதிரி இன்னும் நாலு நாளைக்குள்ள அவ மொத்த பணத்தையும் கொடுத்துருவா என்று விஜயா கூறி இருக்கிறார். இந்த நிலையில் இன்னும் 4 நாட்களில் என்ன நடக்கப் போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

அதே நேரத்தில் ரோகினி இடம் அவருடைய ரகசியங்கள் தெரிந்த அவருடைய பழைய பிஏ மீண்டும் போன் செய்து மிரட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ரோகிணி இனி குடும்பத்திடம் மாட்டும் அடுத்த காட்சிகள் இன்னும் சில நாட்களுக்குள் வரப்போகிறது. அப்போது குடும்பத்தினரின் ரியாக்ஷன் என்ன மாதிரி இருக்க போகுது, இந்த அதிர்ச்சியை விஜயா எப்படி தாங்கிக்கொள்ளப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications