சிறகடிக்க ஆசை: போட்டியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முத்து.. ஸ்ருதி கொடுத்த அதிர்ச்சி.. கடைசியில் டுவிஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்து, மீனா மற்றும் ரவி, ஸ்ருதி இவர்களோடு மனோஜ் மற்றும் ரோகிணி மூன்று ஜோடிகளும் போட்டியில் கலந்து கொள்கின்றனர். அப்போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறுகிறது. அது பற்றி பார்க்கலாம்
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மூன்று ஜோடிகளும் நாங்கள் போட்டியில் கலந்து கொள்ள போவதாக சொல்கின்றனர். அதோடு மூன்று பேரும் நாங்கள் தான் ஜெயிப்போம் என்று சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்து விஜயா என்னங்க இவங்க இப்பவே நாங்கதான் ஜெயிப்போம்னு போட்டி போட்டுட்டு இருக்காங்க என்று அண்ணாமலையிடம் சொல்ல, அண்ணாமலை இது ஆரோக்கியமான போட்டி தான் இது தப்பு இல்லை யார் ஜெயித்தாலும் நமக்கு சந்தோஷம்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து முத்துவும் மீனாவும் நாமதான் ஜெயிக்கப் போறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதோடு அங்கு என்ன கேள்வி எல்லாம் கேட்க போறாங்கன்னு தெரியலையே என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் ரோகிணி நாம இந்த போட்டியில் கலந்துக்க வேண்டாம் என்று மனோஜிடம் சொல்ல, மனோஜ் இல்ல கண்டிப்பா இந்த போட்டியில் கலந்து கொள்ளணும் என்று சொல்ல,
ரோகிணி அதுதான் நீ இதைவிட அதிகமா ஒரு மாசத்தில் சம்பாதிக்கிறியே என்று சொல்ல மனோஜ் இல்ல இந்த பணம் நமக்கு ரொம்ப பெருசா உதவியா இருக்கும், நாம வேற முத்துக்கு பணம் கொடுக்க வேண்டியது இருக்கு இந்த பணத்தை வைத்து கூட கொடுக்கலாம். அதோடு நாமதான் கல்யாணத்துக்கு முன்னாடியே போட்டிகளில் கலந்து கொண்டு ஜெயித்து இருக்கிறோமே என்று தன்னம்பிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் முத்துவும் மீனாவும் ஸ்ருதி மற்றும் ரவியிடம் இந்த போட்டியில் என்ன மாதிரி கேள்வி கேட்பார்கள் என்று கேட்க போகலாம் என்று போக அங்கு ரவியும் ஸ்ருதியும் ரூமில் இல்லாததால் மாடியில் வந்து பார்க்க அங்கு இருவரும் மல்லு கட்டிக்கொண்டு அடித்துக் கொண்டிருக்கின்றனர். அதை பார்த்தது முத்து ஓடி வந்து ரவியை திட்டுகிறார்.

அப்போது ரவி நாங்க பிராக்டிக்ஸ் பண்ணிட்டு இருக்கிறோம் என்று சொல்ல, ஸ்ருதி இந்த மாதிரி சில நேரங்களில் அந்த ப்ரோக்ராமில் செய்ய சொல்லலாம், அதற்காக நாங்கள் பிராக்டீஸ் செய்கிறோம் என்று சொன்னதும் முத்துவும் மீனாவும் மேலும் பயந்து போகின்றனர். பிறகு அங்கு கணவன் மனைவிக்கு என்ன மாதிரி புரிதல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக தான் கேள்வி கேட்பார்கள் என்று சொல்லிவிட்டு மீனாவிடமும் முத்து விடம்மா ஒருவரைப் பற்றி ஒருவரிடம் கேள்வி கேட்க இருவரும் சொல்ல தெரியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
பிறகு இருவரும் இரவு முழுக்க பேசி ஒருவரை பற்றி ஒருவர் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் all the best என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். பிறகு அடுத்த நாள் எல்லோரும் போட்டியில் கலந்து கொள்கின்றனர். அப்போது ஆரம்பத்தில் எல்லோரும் அவர்களுடைய பெயர் வேலைகளை சொல்லி இன்ட்ரோடக்சன் கொடுக்க எல்லோரும் கைதட்டுகின்றனர்.

ஆனால் முத்து மற்றும் மீனா தங்களுடைய வேலைகளை சொல்லும்போது யாரும் கைதட்டாமல் இருக்க முத்துவும் மீனாவும் வருத்தப்படுகின்றனர். பிறகு லேடிஸ் மட்டும் மேடைக்கு வரட்டும் உங்களுக்கு என்ன திறமை இருக்கு என்று எல்லோரிடமும் கேள்வி கேட்க முத்து புருஷன் பொண்டாட்டிக்கு போட்டின்னு சொல்லி மனைவியிடம் மட்டும் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க என்று பிரச்சனை செய்கிறார்.

பிறகு ரவி முத்துவை சமாதானம் செய்து உட்கார வைக்கிறார். அதைத் தொடர்ந்து எல்லோரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை சொல்கின்றனர். அப்போது ரோகிணி ஒரு ஆணிற்கு பெண் வேஷம் போட்டு அசத்துகிறார். பிறகு ஒரு ஸ்ருதி டப்பிங் பேசுவதற்காக மேடையில் வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து மீனாவிடம் உங்களுக்கு என்ன திறமை இருக்கு என்று கேட்க மீனா சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து என் பொண்டாட்டி கண்ணை மூடிட்டு மாலை கட்டுவா என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications