சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன வார்த்தை.. ரோகிணியை பற்றி எனக்கு எல்லாம் தெரியும்! அதிர்ச்சி கொடுத்த மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். அதில் அண்ணாமலை மற்றும் விஜயாவின் மகன்கள், மருமகள்களும் போட்டியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்று இருக்கிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஸ்ருதி விஜயா மற்றும் ரவி மாதிரி பேசி அசத்துகிறார். பிறகு மீனா கண்ணை கட்டிக்கொண்டு பூ கட்ட, முத்து பயங்கரமாக என்கரேஜ் செய்கிறார். முதல் போட்டி முடிய இரண்டாவது போட்டி தொடங்குகிறது. முதலில் மனோஜ் மற்றும் ரோகிணி விளையாட மனோஜ், ரோகிணி என்னிடம் எதையுமே மறைப்பதில்லை என்றும் ரொம்பவே முக்கியம் என்று பேச ரோகிணி குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார்.

பிறகு நீ என் மேல இவ்வளவு பாசமா இருக்கனு இப்பதான் எனக்கு தெரிகிறது என்று ரோகினி சொல்கிறார். அடுத்ததாக ஸ்ருதி மற்றும் ரவி பேச தொடங்க ரவி, ஸ்ருதி என்னுடைய வாழ்க்கையில் கிடைத்தது மிகப்பெரிய கிப்ட் என்னை காதலித்து பெற்றோருக்கு எதிராக நின்று தைரியமாக என்னை திருமணம் செய்து கொண்டாள், நியாயத்தின் பக்கமே எப்போதும் ஸ்ருதி இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எங்க அப்பாவுக்கு மூன்று குழந்தைகள் அதுபோல எங்களுக்கும் மூன்று குழந்தைகள் பிறக்கனும்னு ஆசைப்படுகிறேன் என்று சொல்ல, ஸ்ருதி என்னால் இதுக்கு சம்மதிக்க முடியாது என்று சொல்லி எழுந்து வந்து விடுகிறார்.
அவர்களை தொடர்ந்து மீனாவும் முத்துவும் அந்த போட்டியில் கலந்து கொள்கின்றனர். அப்போது மீனா பேச ஆரம்பிக்கிறார். என்னுடைய அப்பா இறந்துவிட்டார் ஆனால் அவர் எப்படி பார்த்துக் கொள்வாரோ அதுபோல்தான் இவர் பார்த்துக் கொள்கிறார். அம்மாவின் அரவணைப்பு எப்படி இருக்குமோ அதை நான் இவரிடம் உணர்கிறேன். என் வாழ்க்கை முழுவதும் எனக்கு அவர் மட்டும் எனக்கு போதும் என்று கண் கலங்கி பேசுகிறார். அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்துகின்றனர்.
மூன்றாவது போட்டி தொடங்குகிறது. அதில் சம்பளம் குறித்து கேட்டபோது ஸ்ருதி எனக்கு ரவியோட சம்பளம் தெரியாது, ரவிக்கு என்னோட சம்பளம் எவ்வளவுன்னு தெரியாது. ஆனா குடும்பத்துக்காக நாங்க ஷேர் பண்ணி கொடுத்துடுவோம் என்று சொல்கிறார் மனோஜிடம் கேட்க அவர் முதலில் சம்பள விஷயத்தை பற்றி அங்கு சொல்ல முடியாது என்று ஓவராக பில்டப் செய்கிறார். ஆனால் நடுவர்கள் இதை நீங்கள் சொல்லவில்லை என்றால் அதை நாங்கள் குறித்துக் கொள்கிறோம் அவ்வளவுதான் என்று சொல்ல பிறகு வேறு வழி இல்லாமல் மனோஜ தன்னுடைய சம்பளத்தை பற்றி சொல்கிறார்.
ரோகிணியிடம் கேட்க 25 ஆயிரம் செலவுக்கு எடுத்துக் கொள்வேன் 25 ஆயிரம் வீட்டு செலவுக்கு கொடுக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு அங்கிருந்த நடுவர்கள் இதில் 25 ஆயிரம் செலவு செய்கிறீர்களா? என்று கேட்க, ஆமா எனக்கு டிரஸ் எடுக்க வேண்டும் அப்புறம் பிளாக்மெயில் பண்றவங்களுக்கு கொடுக்கணும் என்று சொல்ல, எல்லாரும் பிளாக்மெயில் பண்றவங்களுக்கா என்று அதிர்ச்சி அடைகின்றனர்.
அதற்கு ரோகிணி ஆமா டிராபிக்ல குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்குறாங்கல்ல அவங்களுக்கு கொஞ்சம் பணம் கொடுப்பேன் அதைத்தான் சொல்றேன் என்று சமாளித்து விடுகிறார். அதைத் தொடர்ந்து முத்துவும் மீனாவும் தங்களுடைய வருமானங்கள் பற்றி அழகாக சொல்ல எல்லோரும் அப்படியே அதிர்ச்சியில் இருக்கின்றனர். முத்துவும் மீனாவும் பேசியதும் யாரும் கைதட்டாமல் இருக்கின்றனர்.
யாரும் நமக்காக கைத்தட்ட வில்லையே என்று முத்துவும் மீனாவும் பார்த்துக் கொண்டிருக்க, பிறகு எல்லோரும் சந்தோஷமாக கைதட்டுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications